மேலும் அறிய

Maruti Ignis: விற்பனையும் இல்லை, டிமேண்டும் இல்லை..! குட்டிக் காரை சைலண்டாக ஓரங்கட்டிய மாருதி சுசூகி

Maruti Ignis Discontinued: மாருதி சுசூகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது மைக்ரோ எஸ்யுவி ஆன இக்னிஸ் கார் மாடலின் விற்பனையை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Maruti Ignis Discontinued: மைக்ரோ எஸ்யுவி ஆன இக்னிஸ் கார் மாடலின் விற்பனை பெரிய அளவில் இல்லாததால், உற்பத்தியை நிறுத்தும் முடிவை மாருதி சுசூகி எடுத்துள்ளதாம்.

கைவிடப்படும் மாருதி இக்னிஸ்

இந்திய சந்தையில் நீண்டகாலமாக மோசமான விற்பனையை பதிவு செய்து வந்த இக்னிஸ் கார் மாடலின் உற்பத்தியை மாருதி சுசூகி நிறுவனம் கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீலர்கள் தரப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களின்படி, இக்னிஸ் மாடலின் உற்பத்தி ஒரு மாதத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டுள்ளது.  முன்பதிவுகளும் மேற்கொள்ளப்படுவதில்லையாம். அதேநேரம், ப்ராண்டின் அதிகாரப்பூர்வ போர்ட்ஃபோலியோவிற்கான இணையதள பக்கங்களில் இன்றளவும் இக்னிஸ் பட்டியலிடப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள மாடல்களை விற்று தீர்க்கும் வரை நித நிலை தொடருமென கூறப்படுகிறது. காரணம், தற்போது வரை இக்னிஸ் உற்பத்தியை நிறுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் மாருதி தரப்பில் இருந்து வெளியாகவில்லை.

இக்னிஸ் கைவிடப்படக் காரணம் என்ன?

மாருதி இக்னிஸ் மாடலானது நகர பயனர்களை இலக்காக கொண்டு, ப்ரீமியம் அர்பன் காம்பேக் காராக கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் உள்ளூரில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகால விற்பனையில் இந்த கார் மூன்று முறை அப்டேட்களை பெற்றுள்ளது. மிக முக்கியமான ஃபேஸ்லிஃப்டானது 2020ம் ஆண்டு வழங்கப்பட்டது.  ஆனாலும் முரண்பட்ட வடிவமைப்பு, சந்தையில் குழப்பமான பொசிஷனிங் மற்றும் டீசல் இன்ஜின் இல்லாதது போன்ற காரணங்களால் விற்பனையில் இந்த மைக்ரோ எஸ்யுவியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. காம்பேக்ட் க்ராஸ் ஓவர் பிரிவில் ஏற்பட்டுள்ள அபரிவிதமான வளர்ச்சியும், இக்னிஸ் மாடலின் தேவையை கடுமையாக வீழ்ச்சியடைய செய்தது. சென்னையில் இந்த காரின் விலைவரம்பானது (எக்ஸ்-ஷோரூம்) 5 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 7 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது.

இக்னிஸ் காரின் விற்பனை

கார் அறிமுகப்படுத்தப்பட்ட உடனே சந்தையில் நல்ல தேவை ஏற்பட்டு, 2017ம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே 10 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகின. 2018ம் ஆண்டில் 43 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையான நிலையில், 2019ம் ஆண்டில் அது 22 ஆயிரம் யூனிட்களாக வீழ்ச்சி கண்டது. 

இக்னிஸ் காருக்கான மாற்று மாடல் என்ன?

ஊடக தகவல்களின்படி, மாருதி சுசூகி நிறுவனமானது முற்றிலும் புதிய மைக்ரோ எஸ்யுவி (கோட்நேம் - Y43) மாடலின் மீது பணியாற்றி வருவதாகவும், அது இக்னிஸ் காருக்கான மாற்றாக உள்ளூரில் விரைவில் சந்தைப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. புதிய மாடலானது ஹுண்டாயின் எக்ஸ்டெர், டாடா பஞ்ச் கார் மாடல்களுக்கு போட்டியாக 2027ம் ஆண்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாம். பலதரப்பட்ட பவர்ட்ரெயின் ஆப்ஷன்களை வழங்கும் வழிமுறையை பின்பற்றி, புதிய சப்-4 மீட்டர் எஸ்யுவியில் பெட்ரோல் மைல்ட் ஹைப்ரிட், சிஎன்ஜி மற்றும் மின்சார ஆப்ஷனும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Maruti Ignis: விற்பனையும் இல்லை, டிமேண்டும் இல்லை..! குட்டிக் காரை சைலண்டாக ஓரங்கட்டிய மாருதி சுசூகி

புதிய மைக்ரோ எஸ்யுவி - இன்ஜின் விவரங்கள்

புதிய மைக்ரோ எஸ்யுவியில் என்ன இன்ஜின் இடம்பெறும் என்ற உறுதியான தகவல்களை  இப்போது கூறமுடியவில்லை. ஆனால், இது 1.2 லிட்டர் 3 சிலிண்டர்  பெட்ரோல் இன்ஜின் ஆனது மைல்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக ஏற்கனவே நன்கு பரிட்சயமான 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்ட வாய்ப்புள்ளதாம். இதுபோக மாருதி சார்பில் உள்ளூரிலேயே உருவாக்கப்பட்ட முற்றிலும் புதிய ஹைப்ரிட் பவர்ட்ரெயினும் மைக்ரோஸ் எஸ்ய்வியில் இடம்பெறலாமாம். முன்னதாக இந்த பவர்ட்ரெயினானது 2027ம் ஆண்டில் வரவுள்ள புதிய ஃப்ராங்க்ஸ் மாடலில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாம். அப்படி நடந்தால், இந்திய சந்தையில் அதிக எரிபொருள் செயல்திறன் கொண்ட மாருதி கார் மாடலாக புதிய மைக்ரோ எஸ்யுவி உருவெடுக்கக் கூடும். மேலும், ப்ராண்டின் மிகவும் மலிவு விலை எஸ்யுவி ஆகவும் இது சந்தையில் நிலைநிறுத்தப்படலாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
567 கி.மீ...வெறித்தனமான லுக்கில் BYD SEALION 7 Limited Edition! இதன் விலை & மாஸ் அம்சங்கள் இதோ!
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?
Upcoming Bikes: Hero முதல் Bajaj வரை -- இந்தியாவில் அறிமுகமாகப்போகும் 5 புதிய பைக்குகள் - என்னென்ன?

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
Embed widget