தேனை லிப் பாம் ஆக பயன்படுத்த சிம்பிள் & சூப்பர் டிப்ஸ்

Published by: குலசேகரன் முனிரத்தினம்

தேனை நேரடியாக உதடுகளில் தடவி 10–15 நிமிடங்கள் வைத்து கழுவினால் உதட்டில் நீண்ட நேரம் ஈரப்பதம் இருக்கும்.

தேன் உடன் சிறிது சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப் போல பயன்படுத்தினால் இறந்த சருமம் நீங்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து உதடுகளில் தடவினால் உதடுகளின் கருமை குறையும்.

தேன் மற்றும் தேங்காய் எண்ணெயின் கலவையானது உதடுகளை நீண்ட நேரம் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

இரவு தூங்குவதற்கு முன் தேனை உதட்டில் தடவி இரவில் அப்படியே விட்டு காலையில் கழுவினால் மிருதுவான உதடுகளைப் பெறலாம்.

கற்றாழை சேர்த்துப் பயன்படுத்தினால் உதடுகளின் தோலை குணப்படுத்தி வெடிப்புகளைக் குறைக்கும்.

தேன் மற்றும் வெண்ணெயுடன் கலந்து உதடுகளில் தடவினால் உதடுகள் வறண்டு போவது குறையும்.

ரோஸ் வாட்டருடன் சேர்த்துப் பூசினால் உதடுகளுக்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறம் கிடைக்கும்.

பீட்ரூட் ஜூஸுடன் சேர்த்து உதடுகளில் தடவினால் உதடுகள் இயற்கையாகவே இளஞ்சிவப்பாக மாற உதவும்.

தேன் மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து வீட்டிலேயே லிப் பாம் தயாரிக்கலாம்.

தினமும் அதிகமாக ஸ்க்ரப் செய்யாதீர்கள். வாரத்திற்கு இரண்டு முறை போதுமானது.