மேலும் அறிய

VF MPV 7 Vs Rivals: போட்டியாளர்களை முந்துகிறதா வின்ஃபாஸ்டின் VF MPV 7- எதில் பெஸ்ட்? எங்கே பிரச்னை? முழு கம்பேரிசன்

Vinfast VF MPV 7 Vs Rivals: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதல் 7 சீட்டர் கார் மாடலான VF MPV 7, அதன் போட்டி மின்சார எம்பிவி மாடல்களை எப்படி எதிர்கொள்கிறது என கீழே விவரிக்கப்ப்பட்டுள்ளது.

Vinfast VF MPV 7 Vs Rivals: வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் VF MPV 7 மின்சார காரானது, உள்ளூர் சந்தையில் கியா காரென்ஸ் க்ளாவிஸ் மற்றும் BYD eMax 7 கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

வந்தாச்சு வின்ஃபாஸ்டின் VF MPV 7 

இந்திய சந்தையில் VF6 மற்றும் VF7 வாகனங்களை தொடர்ந்து தனது மூன்றாவது மின்சார காராகவும், முதல் 7 சீட்டர் எம்பிவி ஆகவும் VF MPV 7 மாடலை வின்ஃபாஸ்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒற்றை வேரியண்டில் ஏராளமான அம்சங்களை கொண்டு விற்பனைக்கு வந்துள்ள இந்த காரின் விலை 24 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சந்தையில் இந்த காரானது கியா காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷன் மற்றும் BYD eMax 7 ஆகிய, மூன்று வரிசை இருக்கைகளை கொண்ட மின்சார எம்பிவி மாடல்களுடன் போட்டியிடுகிறது. இந்த இரண்டு போட்டியாளர்களின் சவாலையும் வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்டின் புதிய VF MPV 7 கார் எப்படி எதிர்கொள்கிறது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

VF MPV 7 Vs காரென்ஸ் க்ளாவிஸ் Vs eMax 7 - அளவீடுகள்

அளவீடுகள் அடிப்படையில் அத்தனை பிரிவுகளிலும் தனது போட்டியாளர்களை காட்டிலும் VF MPV 7 பெரியதாக உள்ளது.

அளவீடுகள் VF MPV 7 காரென்ஸ் க்ளாவிஸ் eMax 7
நீளம் (மி.மீ.,) 4,740 4,550 4,710
அகலம் (மி.மீ.,) 1,872 1,800 1,810
உயரம் (மி.மீ.,) 1,734 1,730 1,690
வீல்பேஸ் (மி.மீ.,) 2,840 2,780 2,800
வீல் சைஸ் (மி.மீ.,) 19 17 17

காரென்ஸ் க்ளாவிஸ் மாடலை காட்டிலும் 190 மில்லி மீட்டர் நீளம், 72 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 60 மில்லி மீட்டர் கூடுதல் வீல்பேஸை வின்ஃபாஸ்டின் புதிய 7 சீட்டர் கொண்டுள்ளது. உயரம் மட்டும் கிட்டத்தட்ட ஒரே அளவில் உள்ளது. அதேநேரம், eMax 7 மாடலுடன் ஒப்பிட்டால் 30 மில்லி மீட்டர் கூடுதல் நீளம், 62 மில்லி மீட்டர் கூடுதல் அகலம், 44 மில்லி மீட்டர் கூடுதல் உயரம் மற்றும் 40 மில்லி மீட்டர் கூடுதல் வீல்பேஸை கொண்டுள்ளது. மற்ற இரண்டு மாடல்கள் 17 இன்ச் அலாய் வீல்களை கொண்டிருக்க, வின்ஃபாஸ்ட் மாடலானது 19 இன்ச் அலாய்வீல்களை பெற்றுள்ளது.


VF MPV 7 Vs Rivals: போட்டியாளர்களை முந்துகிறதா வின்ஃபாஸ்டின் VF MPV 7- எதில் பெஸ்ட்? எங்கே பிரச்னை? முழு கம்பேரிசன்

VF MPV 7 Vs காரென்ஸ் க்ளாவிஸ் Vs eMax 7 - பவர்ட்ரெயின்

அம்சங்கள் VF MPV 7 காரென்ஸ் க்ளாவிஸ் eMax 7
பேட்டரி பேக் (KWh) 60.13 42|51.4 55.4|71.8
மோட்டார்கள் 1 1|1 1|1
பவர் (hp) 204 135|171 163|204
டார்க் (Nm) 280 255|255 310|310
க்ளெய்ம்ட் ரேஞ்ச் 517 கிமீ (ARAI) 404|490 420|530
ட்ரைவ்ட்ரெயின் FWD FWD FWD

வின்ஃபாஸ்டின் 7 சீட்டர் ஒரே ஒரு பேட்டரி ஆப்ஷனை மட்டுமே கொண்டிருக்க, அதன் போட்டியாளர்கள் இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், eMax 7 பெரிய பேட்டரி ஆப்ஷனை கொண்டு அதிகபட்சமாக 530 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


VF MPV 7 Vs Rivals: போட்டியாளர்களை முந்துகிறதா வின்ஃபாஸ்டின் VF MPV 7- எதில் பெஸ்ட்? எங்கே பிரச்னை? முழு கம்பேரிசன்

VF MPV 7 Vs காரென்ஸ் க்ளாவிஸ் Vs eMax 7 - விலை

மாடல் VF MPV 7 காரென்ஸ் க்ளாவிஸ் eMax 7
விலை ரூ.24.49 லட்சம் ரூ.17.99 - ரூ.24.99 லட்சம் ரூ.26.90 - 29.90 லட்சம்

கியா காரென்ஸ் க்ளாவிஸின் டாப் எண்ட் வேரியண்டை காட்டிலும் VF MPV 7 மாடலின் தொடக்க விலை 50 ஆயிரம் ரூபாய் மலிவாக உள்ளது. அதேநேரம், இந்த பட்டியலில் மிகவும் விலையுயர்ந்த மாடலாக eMax 7 உள்ளது.  இந்த காரின் அடிப்படை தொடக்க விலையே வின்ஃபாஸ்ட் மாடலை காட்டிலும் 2 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அதிகமாகும். வெளியாகியுள்ள விவரங்கள் அடிப்படையில்,  காரண்ச் க்ளாவிஸின் அம்சங்கள், BYD eMax 7-ஐ விட மலிவான விலை அடிப்படையில் VF MPV 7 ஒரு வலுவான நடுத்தரப் போட்டியாளராக திகழ்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget