மேலும் அறிய

Mahindras Nexon Rival: CNG அவதாரமெடுக்கும் நெக்ஸான் போட்டியாளர் - ப்ரேஸ்ஸா மைலேஜை தாண்டுமா? விலை என்ன?

Mahindra XUV 3XO CNG: டாடா நெக்ஸான் எஸ்யுவிக்கு போட்டியாளராக திகழும் மஹிந்த்ராவின் XUV 3XO கார் மாடல் சிஎன்ஜி எடிஷனில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Mahindra XUV 3XO CNG: டாடா நெக்ஸான் எஸ்யுவிக்கு போட்டியாளராக திகழும் மஹிந்த்ராவின் XUV 3XO கார் மாடல் சிஎன்ஜி எடிஷனில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மஹிந்த்ராவின் XUV 3XO - சிஎன்ஜி எடிஷன்

மஹிந்த்ரா நிறுவனம் தனது XUV 3XO கார் மாடலின் லைன் - அப்பை விரிவுபடுத்தும் வகையில், அதன் சிஎன்ஜி எடிஷனை நடப்பாண்டில் இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைப்படுத்த உள்ளது. பெட்ரோல் மற்றும் மின்சார எடிஷன்களை தொடர்ந்து இந்த எஸ்யுவி கார் மாடலுக்கான மூன்றாவது பவர்ட்ரெயின் ஆப்ஷனாக சிஎன்ஜி வழங்கப்பட உள்ளது. மஹிந்த்ராவின் XUV 3XO கார் மாடலின் சிஎன்ஜி எடிஷனானது 1.2 லிட்டர் சிலிண்டர் MPFI டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. ஆனாலும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. 

வழக்கமான சிஎன்ஜி டேங்கா? புது செட்டப்பா?

மஹிந்த்ரா XUV 3XO CNG காரில், பூட்டில் வழக்கமான ஒற்றை-சிலிண்டர் CNG டேங்க் அமைப்பு இடம்பெறுமா, அல்லது டாடா நெக்ஸானைப் போன்ற இரட்டை-சிலிண்டர் அமைப்பைக் கொண்டிருக்குமா, அல்லது மாருதி விக்டோரிஸைப் போல காரின் அடிப்பகுதியில் டேங்க் அமைப்பைக் கொண்டிருக்குமா என்பது குறித்து தெளிவான விவரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

ஒப்பீட்டளவில், மஹிந்திரா XUV 3XO 295 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது. அதேசமயம், அதன் போட்டியாளர்களான டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வென்யு மாடல்கள் தலா 328 லிட்டர் இடவசதியையும், கியா சோனெட் 392 லிட்டர் மற்றும் மாருதி ப்ரேஸ்ஸா 328 லிட்டர் பூட் ஸ்பேஸையும் வழங்குகின்றன. வழக்கமான CNG அமைப்பானது, ஏற்கனவே குறைவாக உள்ள XUV 3XO-வின் பூட் ஸ்பேஸை மேலும் குறைக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

XUV 3XO சிஎன்ஜி எடிஷனின் மைலேஜ் விவரங்கள்..

XUV 3XO கார் மாடலானது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் லிட்டருக்கு 20.1 கிலோ மீட்டர் மைலேஜும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் லிட்டருக்கு 18.2 கிலோ மீட்டர் மைலேஜும் வழங்கும் அதன் பெட்ரோல் மாடலை விட, CNG எடிஷன் கணிசமாக அதிக எரிபொருள் சிக்கனத்தைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்பீட்டளவில், டாடா நெக்ஸான் சிஎன்ஜி மற்றும் மாருதி ப்ரேஸ்ஸா சிஎன்ஜி ஆகியவை முறையே ஒரு கிலோவிற்கு 24 கி.மீ. மற்றும் 25.5 கி.மீ. மைலேஜ் வழங்குவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஹூண்டாய் வென்யு மற்றும் கியா சோனெட் ஆகியவை தற்போது தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட சிஎன்ஜி ஆப்ஷன்களை வழங்குவதில்லை. மாறாக, பயனர்களின் கோரிக்கையை ஏற்று டீலர்ஷிப் அளவில் சிஎன்ஜி டேங்குகள் பொருத்தி தரப்படுகின்றன. 

Mahindras Nexon Rival: CNG அவதாரமெடுக்கும் நெக்ஸான் போட்டியாளர் - ப்ரேஸ்ஸா மைலேஜை தாண்டுமா? விலை என்ன?

XUV 3XO சிஎன்ஜி எடிஷனின் விலை எப்படி?

டாடா நெக்ஸானின் சிஎன்ஜி விலை 8.99 லட்சத்தில் தொடங்கி 14.59 லட்சம் ரூபாய் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. மாருதி சுசூகி ப்ரேஸ்ஸாவின் சிஎன்ஜி எடிஷனின் விலை 9.17 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த இரண்டு மாடல்களுக்கும் கடும் போட்டி அளிக்கும் விதமாக XUV 3XO சிஎன்ஜி எடிஷனின் தொடக்க விலை 9.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாய் வரை நீளக்கூடுமாம். விலை மட்டுமின்றி மைலேஜிலும் இந்த காரின் எடிஷன் போட்டியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் சிஎன்ஜி கார்கள் விற்பனை

இந்திய சந்தையில் கடந்த 2025 நிதியாண்டில், CNG வாகனங்கள் 19.5 சதவிகித சந்தைப் பங்களிப்பை கொண்டிருந்தன. இதில் மாருதி சுசுகி 70.5% பங்குடன் இந்தப் பிரிவில் முன்னிலை வகித்தது. மாருதி வேகன்ஆர், மாருதி டிசையர், டாடா பஞ்ச் மற்றும் மாருதி ப்ரெஸ்ஸா போன்ற மாடல்கள் அதிகம் விற்பனையாகும் வாகனங்களாக உருவெடுத்தன.

Mahindras Nexon Rival: CNG அவதாரமெடுக்கும் நெக்ஸான் போட்டியாளர் - ப்ரேஸ்ஸா மைலேஜை தாண்டுமா? விலை என்ன?

CNG வாகனங்களுக்கான தேவை சீராக அதிகரித்து வருவதால், மஹிந்திரா & மஹிந்திரா, ஸ்கோடா, ரெனால்ட், ஹோண்டா மற்றும் டொயோட்டா போன்ற கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்களின் CNG தயாரிப்பு வரிசையைத் தீவிரமாக விரிவுபடுத்தி வருகின்றன. பெரும்பாலான கார் தயாரிப்பாளர்கள், சந்தையில் தங்களின் இருப்பை வலுப்படுத்த, தற்போது அனைத்துப் பிரிவுகளிலும் பல்திறன் கொண்ட பவர்-ட்ரெயின் ஆப்ஷன்களை கொண்டு வர முனைப்பு காட்டுகின்றன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Embed widget