மேலும் அறிய

Tata SUV: EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?

Tata Sierra SUV Upcoming Variants: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனத்தின் சியாரா கார் மாடலின் EV, CNG, AWD அடுத்தடுத்து அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

Tata Sierra SUV Upcoming Variants: டாடா நிறுவனத்தின் சியாரா கார் மாடலின் EV, CNG, AWD வேரியண்ட்கள் தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாடா சியாரா அப்க்ரேட்கள்:

வரும் 2030ம் ஆண்டுக்குள் புதியதாக 30 வாகனங்களை அறிமுகப்படுத்தி, இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலானது முற்றிலும் புதிய 7 மாடல்களின் அறிமுகத்தை மட்டுமின்றி, தற்போது விற்பனையில் உள்ள மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் முழு தலைமுறைகளுக்கான அப்க்ரேட்கள் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க டாடா சியாரா ஏற்கனவே விற்பனையில் உள்ள நிலையில், ப்ராண்டின் ப்ரீமியம் மின்சார துணை நிறுவனமான அவின்யா நடப்பாண்டின் இறுதியில் சந்தையில் தனது பயணத்தை தொடங்க உள்ளது. இதனிடையே, போட்டித்தன்மை மிக்க மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் அறிமுகமானது முதலே சியாராவானது நல்ல தாக்த்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனை மேலும் அதிகரிக்க எஸ்யுவின் லைன் - அப்பை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி சியாராவின் மின்சாரம், சிஎன்ஜி மற்றும் ஆல் வீல் ட்ரைவ் வேரியண்ட்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன. 

சியாராவின் புதிய வேரியண்ட்கள் அறிமுகம்:

சியரவின் மின்சார எடிஷன் வரும் ஜூன் 30 அன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதே சமயம், சியரா i-CNG மாடல் அண்மையில் புகை உமிழ்வு சோதனை கருவியுடன் சாலையில் காணப்பட்டது. இது 2026 தீபாவளி சீசனில் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இன்ஜின் அடிப்படையிலானா சியரா AWD அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

சியாரா - புதிய வேரியண்ட்களின் விவரம்

1. டாடா சியாரா EV

டாடா சியரா மின்சார எடிஷனானது, 65kWh மற்றும் 75kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஹாரியர் EV-யின் பவர்ட்ரெய்னை அப்படியே பின் தொடர அதிக வாய்ப்புள்ளது. சமீபத்திய அதிகாரப்பூர்வ டீசர், இந்த எலெக்ட்ரிக் SUV ஹாரியர் EV-யைப் போலவே QWD (குவாட் வீல் டிரைவ்) உடன் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. டாடா நிறுவனத்தின் QWD சிஸ்டம் ஒவ்வொரு ஆக்சிலிலும் பொருத்தப்பட்ட இரண்டு மோட்டார்களைக் கொண்டுள்ளது. இது உடனடி டார்க் மற்றும் "அடுத்த தலைமுறை நிலப்பரப்புக்கு ஏற்ற தகவமைப்பை" வழங்கும் என்று கூறப்படுகிறது. இதன் விலை 18 லட்சத்தில் தொடங்கி 25 லட்சம் ரூபாய் வரையில் இருக்கக் கூடும்.

2. டாடா சியரா CNG

சியரா CNG மாடல், 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது டாடா நிறுவனத்தின் டூயல்-சிலிண்டர் CNG தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டில் ஒன்றில் வழங்கப்படலாம். டாடா நிறுவனத்தின் மற்ற i-CNG மாடல்களைப் போலவே, இந்த SUV-யிலும் ஒரு உதிரிச் சக்கரம் பொருத்தப்படலாம். டாடா சியராவின் தற்போதைய சராசரி மாதாந்திர விற்பனை 6,000 முதல் 9,000 வரை உள்ளது. CNG மாடலின் அறிமுகத்தால் இந்த விற்பனை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் விலை ரூ.13 லட்சத்தில் தொடங்கி 16 லட்சம் ரூபாய் வரையில் இருக்கக் கூடும்.

இதையும் படியுங்கள்: Hyundai Compact EV: மூன்று SUV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் EV - தேறுமா?

3. டாடா சியரா AWD

இன்ஜின் அடிப்படையிலான சியரா , 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆல்-வீல் டிரைவ் (AWD) அமைப்பைப் பெறும் என்று டாடா மோட்டார்ஸ் உறுதி செய்துள்ளது. இந்த எஸ்யூவி, பல்வேறு பாடி ஸ்டைல்கள், வாகன நீளங்கள் மற்றும் பவர்டிரெய்ன்களை ஆதரிக்கும் ஆர்கோஸ் (ARGOS - All-terrain Ready, Omni-Energy and Geometry Scalable Architecture) கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 2020-ல் டாடா ஹெக்ஸா மாடல் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் டாடா மோட்டார்ஸின் முதல் இன்ஜின் கொண்ட 4X4 வாகனமாக சியரா அமையும். ரூ.18 லட்சத்தில் தொடங்கி 22 லட்சம் ரூபாய் வரையில் இருக்கக் கூடும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஒரே சார்ஜில் 145 கி.மீ ரேஞ்ச்... சார்ஜர் இலவசம்.. புதிய BGauss OoWah MAX Plus விலை? சிறப்பம்சங்கள் என்ன?
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Mahindra BE 6 Formula E Edition: மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
மிரட்டும் மாஸான லுக்.! BE 6 ஃபார்முலா E பதிப்பை களமிறக்கும் மஹிந்திரா; அறிமுகம் எப்போது.? அம்சங்கள் என்ன.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget