மேலும் அறிய

Hyundai Hybrids: 18 புதிய ஹைப்ரிட் கார்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் EV - ஹுண்டாயின் மாஸ் ப்ளான்

Hyundai Road Map 2030: ஹுண்டாய் நிறுவனம் சார்பில் அடுத்த ஆண்டில் புதியதாக, 18 ஹைப்ரிட் கார்கள் சந்தைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hyundai Road Map 2030: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு புதிய மின்சார கார் ஒன்று விரைவில் சந்தைப்படுத்தப்படும் என ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹூண்டாயின் 5 ஆண்டுகளுக்கான ப்ளான்:

அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான நிகழ்ச்சியில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான தனது திட்டத்தை ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கார் மாடல்களின் விரிவாக்கம், உற்பத்தி மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப முறையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் 5.55 மில்லியன் அளவிலான கார் விற்பனையை எட்ட ஹுண்டாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் 60 சதவிகித விற்பனையை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கொரியா சந்தையில் மின்சார வாகனங்களின் மூலம் மட்டுமே எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஹைப்ரிட் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் விதமாக புதியதாக, 18 மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

18 புதிய ஹைப்ரிட் கார்கள்

ஹுண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை க்ரேட்டாவை, தனது முதல் ஹைப்ரிட் கார் மாடலாக வரும் 2027ம் ஆண்டு சந்தைப்படுத்த உள்ளது. அதில் ஹைப்ரிட் அம்சம் சேர்க்கப்பட்ட 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம். இதுபோக அல்கசார் மற்றும் டக்சன் கார்களுக்கு இடையே பொருந்தும் வகையில், மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட ஹைப்ரிட் எஸ்யுவியையும் 2027ம் ஆண்டில் அறிமுகப்படுத்தக்கூடும். Ni1i என்ற கோட்நேமை கொண்ட இந்த காரானது, க்ரேட்டாவில் வழங்கப்படும் ஹைப்ரிட் இன்ஜின் அம்சத்தை அப்படியே தொடரும் என கூறப்படுகிறது. ஹுண்டாயின் முற்றிலும் புதிய பாலிசேட் ஹைப்ரிட் கார் மாடலானது, பிராண்டின் அடுத்த தலைமுறை TMED - II தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதையும் உறுதி செய்துள்ளது. இது செயல்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்துமாம். இது 2028ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாம். நிறுவனத்தின் சொகுசு கார் ப்ராண்டானா ஜெனிசிஸும் 2026ம் ஆண்டு முதல் ஹைப்ரிட்  கார் மூலம் விரிவுபடுத்தப்பட உள்ளது. 

இந்தியாவிற்கான பிரத்யேக மின்சார கார்

குறிப்பிட்ட சந்தைகளுக்கு பிராந்தியங்களுக்கு ஏற்ப பிரத்யேக கார்களை சந்தைப்படுத்த உள்ளதாகவும் ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்ப, உள்நாட்டு விநியோக சங்கிலிகளைச் சார்ந்து, இந்தியாவிற்கான மின்சார வாகனம் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தைக்கு என இங்கேயே தயாரிக்கப்பட உள்ள புதிய மின்சார காரானது, 2030ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஹுண்டாய் நிறுவனம் தரப்பில் தயாரிக்கப்பட உள்ள முதல் மின்சார காராகவும் இது உருப்பெற உள்ளது.

உற்பத்தியை அதிகரிக்க ஹுண்டாய் முடிவு

இதுபோக சர்வதேச சந்தையில் தனது உற்பத்தி திறனை 2030ம் ஆண்டிற்குள், கூடுதலாக 12 லட்சம் யூனிட்கள் அளவிற்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் இந்தியாவின் புனேவில் உள்ள மல்டி மாடல் எக்ஸ்போர்ட் ஹப்பில் மட்டும், கூடுதலாக 2.5 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திட்டமும் அடங்கும். இதுபோக அமெரிக்காவில் உள்ள ஹுண்டாய் மோட்டார் க்ரூப் மெடாபிளாண்டில் கூடுதலாக 5 லட்சம் யூனிட்களும், உல்சனில் உள்ள மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக ஆலையில் கூடுதலாக 2 லட்சம் யூனிட்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளனவாம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?
ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 530 கி.மீ ரேஞ்ச்; MG Hector Tomahawk காரில் இவ்ளோ சிறப்பம்சங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget