மேலும் அறிய

Huawei Maextro S800 Luxury Car: Audi, BMW எல்லாம் ஓரம் போங்க.! அதிரிபுதிரியான காரை இறக்கிய ஹுவே; வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்.!

ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார்களை ஓரம்கட்டும் அளவிற்கு ஹுவேயின் பிரமிக்க வைக்கும் கார் வந்துவிட்டது. அதன் புவியீர்ப்பு விசையற்ற இருக்கையும், திரையரங்கம் போன்ற திரையும் உங்களை வியப்பில் ஆழ்த்தும். அதன் அனைத்து ஆடம்பர அம்சங்களையும் பற்றி பார்ப்போம்.

சொகுசுக் கார் என்றாலே, உலகில் மெர்சிடிஸ்-பென்ஸ் மேபேக், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், ஆடி ஏ8 போன்ற கார்களே உதாரணங்களாக இருந்து வந்தன. ஆனால் இப்போது, ​​அதையெல்லாம் உடைக்க ஒரு புதிய கார் வந்துவிட்டது. ஆம், ஹுவே மற்றும் ஜேஏசி நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவான மேக்ஸ்ட்ரோ எஸ்800 கார், சீனாவில் சொகுசு செடான் பிரிவில் மற்ற முக்கிய பிராண்டுகளின் விற்பனையை மிஞ்சியுள்ளது. இந்த கார் இவ்வளவு பிரபலமாக இருப்பதற்குக் காரணம், அதன் உச்சகட்ட சொகுதான். அவை என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

உலக டாப் பிராண்டுகளையே மிஞ்சிய மேக்ஸ்ட்ரோ S800-ன் விற்பனை

சீனாவின் 1.00,000 டாலருக்கும் அதிகமான மதிப்பு கொண்ட செடான் பிரிவில், மேக்ஸ்ட்ரோ எஸ்800 அதிகம் விற்பனையாகும் காராக உருவெடுத்துள்ளது என்பதே அதன் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். சமீபத்திய  தரவுகளின்படி, இந்த கார் விற்பனையில் மெர்சிடிஸ்-மேபேக் எஸ்-கிளாஸ், போர்ஷே பனமேரா மற்றும் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் போன்ற கார்களை மிஞ்சியுள்ளது. இதனால்தான், இது இந்த முக்கிய சொகுசு பிராண்டுகளுக்கு சரியான போட்டியாளராகக் கருதப்படுகிறது.

Huawei Maextro S800 Luxury Car: Audi, BMW எல்லாம் ஓரம் போங்க.! அதிரிபுதிரியான காரை இறக்கிய ஹுவே; வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்.!

3 திரைகள், பூஜ்ஜிய ஈர்ப்பு இருக்கைகள்

இந்த காரின் உட்புறம் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 3 பெரிய திரைகள் கொண்ட அமைப்பு உள்ளது. இது, பின் இருக்கைப் பயணிகள் தங்களுக்கென உள்ள தனித்தனித் திரைகளில் தாங்கள் விரும்புவதை கண்டு ரசிக்கலாம். மேலும், இதில் உள்ள ஜீரோ-கிராவிட்டி பின் இருக்கைகள், நீண்ட பயணங்களின் போது உடல் அழுத்தத்தை குறைத்து, பயண வசதியை மேம்படுத்துகின்றன. தேவைப்படும்போது மேலே உயர்த்தக்கூடிய, உள்ளிழுக்கக்கூடிய லேசர் புரொஜெக்ஷன் திரையும் இந்த காரில் இடம்பெற்றுள்ளது.

Huawei Maextro S800 Luxury Car: Audi, BMW எல்லாம் ஓரம் போங்க.! அதிரிபுதிரியான காரை இறக்கிய ஹுவே; வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்.!

அசத்தலான வடிவமைப்பு

இந்த கார், சுமார் 5,480 மில்லிமீட்டர் நீளத்தையும், 3,370 மில்லிமீட்டர் வீல்பேஸையும் கொண்டிருப்பதால், இது மிகவும் விசாலமாக உள்ளது. இதில் இரட்டை மில்லியன் பிக்சல் ஹெட்லைட்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன், பொதுவாக மிகவும் விலையுயர்ந்த ஹைப்பர்-லக்சுரி கார்களில் மட்டுமே காணப்படும் ஒரு அம்சமான, கையால் மெருகூட்டப்பட்ட சிறப்பு கிரிஸ்டல் ஹெட்லைட்களைக் கொண்ட ஒரு வேரியன்ட்டும் உள்ளது. கதவுக் கைப்பிடிகளும் ஒரு தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளன. இது, இந்த காருக்கு ஒரு மிகவும் ப்ரீமியமான தோற்றத்தை அளிக்கிறது.

நீண்ட தூர ரேஞ்ச் மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங்

மேக்ஸ்ட்ரோ எஸ்800 இரண்டு வகைகளில் வருகிறது. ஒரு முழு மின்சாரப் பதிப்பு மற்றும் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர். மின்சாரப் பதிப்பில் 97 kWh பேட்டரி உள்ளது. இது ஒரே சார்ஜில் சுமார் 700 கிலோமீட்டர் தூரம் பயணிக்கக்கூடியது. குறிப்பிடத்தக்க வகையில், இதன் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், பெரும்பாலான சொகுசு மின்சாரக் கார்களை விட வேகமாக, அதாவது, வெறும் 10 முதல் 12 நிமிடங்களில் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்கிறது.

விலை என்ன.?

சீனாவில் ஹுவே மேக்ஸ்ட்ரோ எஸ்800-ன் விலை 7,00,000 முதல் 1,00,000 யுவான் வரை உள்ளது. அதன்படி, இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் 85 லட்சம் ரூபாய் முதல் 1.25 கோடி ரூபாயாகும். இந்தியாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படுமா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லை. இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
Tata Aeris வாங்கலாமா? வேண்டாமா? இந்த காரின் பிளஸ் & மைனஸ் என்ன? - முழு அலசல் இதோ
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 600 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகிறது Volkswagen ID. Tiguan மின்சார கார்! அலறும் ஆட்டோமொபைல் சந்தை!
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்
ஒரே சார்ஜில் 310 கி.மீட்டர் மைலேஜ்... அடுத்த மாசம் அறிமுகமாகும் சுசுகியின் E Sky மின்சார கார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget