மேலும் அறிய

Honda SUV Facelift: ப்ராண்டின் ஒத்த எஸ்யுவியை அப்க்ரேட் செய்யும் ஹோண்டா - ஹைப்ரிட்டில் எஸ்யுவி கிங்கை அடிக்குமா?

Honda Elevate SUV Facelift: இந்தியாவில் ஹோண்டா சார்பில் விற்பனை செய்யப்படும் ஒரே ஒரு எஸ்யுவி ஆன, எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் நடப்பாண்டே சந்தைப்படுத்தப்பட உள்ளதாம்.

Honda Elevate SUV Facelift: ஹோண்டா எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷனில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஹோண்டா எலிவேட் எஸ்யுவி ஃபேஸ்லிஃப்ட்

நடப்பு நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 6 புதிய கார் மாடல்களை சந்தைப்படுத்த உள்ளதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ZR-V மற்றும் 0 ஆல்பா அடிப்படையிலான மின்சார எஸ்யுவி ஆகியவை அடங்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோக இந்த பட்டியலில் எலிவேட்டின் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அடங்குமாம். உள்ளூர் சந்தையில் நிறுவனம் சார்பில் விற்பனையில் உள்ள ஒரே ஒரு எஸ்யுவி மாடல் இதுவே ஆகும். எலிவேட்டின் அப்க்ரேடட் எடிஷன் மட்டுமின்றி இந்திய சந்தைக்காக சிவிக், அக்கார்டு மற்றும் CR-V ஆகியவற்றின் ஹைப்ரிட் எடிஷன்களையும், பிரிலூட் ஹைப்ரிட் ஸ்போர்ட்ஸ் காரையும் பரிசீலனை செய்து வருவதாக ஹோண்டா தெரிவித்துள்ளது.

எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் இந்தியாவில் சாலை பரிசோதனைகள் தொடங்கியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதன் வெளிப்புற தோற்றம் பெருமளவில் மறைக்கப்பட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த தோற்றமும் அமைப்பும் தற்போதைய மாடலைப் போலவே காணப்பட்டாலும், புதிய ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் திருத்தப்பட்ட முன்பக்க க்ரில், சற்றே மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் லைட்டிங் கூறுகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்த எஸ்யுவியில் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட டெயில்லேம்ப் க்ராஃபிக்ஸும் இடம்பெறக்கூடும். சோதனையின் போது எடுக்கப்படும் அடுத்தடுத்த புகைப்படங்கள் மூலம், வெளிப்புறம் தொடர்பான கூடுதல் விவரங்கள் கிடைக்கக் கூடும்.

எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் - புதிய வசதிகள், அம்சங்கள் எப்படி?

கேபினின் உட்புறத்தில் புதிய எடிஷனில் கூடுதலாக என்ன வசதிகள் சேர்கப்படும் என்பது குறித்த விவரங்கள் ஏதேம் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் புதிய ட்ரிம்கள் மற்றும் இருக்கை உறைகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோண்டா தனது ADAS தொகுப்பை அதிக வேரியண்ட்களில் வழங்குவதன் மூலம், அதை மேலும் எளிதில் அணுகக்கூடியதாக மாற்றக்கூடும். தற்போது, ​​ஹோண்டா சென்சிங் ADAS தொகுப்பு, டாப்-எண்ட் ZX டிரிம்மில் மட்டுமே பிரத்தியேகமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், ஆம்பியன்ட் லைட்டிங், அலெக்ஸ் இணக்கத்தன்மையுடன் கூடிய கனெக்டட் கார் டெக், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பல ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உடன் கூடிய வாகன நிலைத்தன்மை உதவி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், EBD உடன் கூடிய ABS மற்றும் பல அம்சங்கள் உட்பட, தற்போதுள்ள பெரும்பாலான அம்சங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   


Honda SUV Facelift: ப்ராண்டின் ஒத்த எஸ்யுவியை அப்க்ரேட் செய்யும் ஹோண்டா - ஹைப்ரிட்டில் எஸ்யுவி கிங்கை அடிக்குமா?

எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் - ஹைப்ரிட் ஆப்ஷனா?

இன்ஜின் அடிப்படையில் புதிய ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் எந்த மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. தற்போதைய மாடலைப் போலவே இதிலும் 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினை, 6-ஸ்பீட் மேனுவல் அல்லது CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் தேர்வு செய்யலாம். இந்த மோட்டார் அதிகபட்சமாக 121bhp பவரையும், 145Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. எலிவேட்டில் ஹைப்ரிட் ஆப்ஷன் வழங்கப்படலாம் என பல தகவல்கள் வெளியானாலும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்: WagonR Flex Fuel: நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார் அறிமுகம் - விலை, மைலேஜ் என்ன? அம்சங்கள் எப்படி?

எலிவேட் ஃபேஸ்லிஃப்ட் - விலை, போட்டியாளர்கள்

உள்நாட்டு சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் இடம்பெற்றுள்ள ஹோண்டா எலிவேட்டானது ஹுண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசூகி க்ராண்ட் விட்டாரா ஆகிய மாடல்களிடமிருந்து கடும் போட்டிய்யை எதிர்கொள்கிறது. தற்போது ரூ.13.73 லட்சத்தில் தொடங்கி ரூ.20.64 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படும் எலிவேட்டானது, அப்க்ரேட்களை கருத்தில் கொண்டு சற்றே விலை உயர்வை எதிர்கொள்ளக்கூடுமாம். ஆண்டின் இறுதியில் இந்த கார் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாம்.

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
ரூபாய் 12 ஆயிரம் தள்ளுபடி... பலே ஆஃபர் தந்த Bajaj Pulsar! ஆயுத பூஜைக்கு இறக்கிடலாமா?
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Top 5 EV Car Companies: களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்
களைகட்டும் EV கார் சந்தை.! வாடிக்கையாளர்களை கவர்ந்த டாப் 5 நிறுவனங்கள் எவை.? வாங்க பார்க்கலாம்

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget