மேலும் அறிய

WagonR Flex Fuel: நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார் அறிமுகம் - விலை, மைலேஜ் என்ன? அம்சங்கள் எப்படி?

Maruti WagonR Flex Fuel: நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் மாடல் காராக வேகன் -ஆஎர் எடிஷனை, ரூ.7.24 லட்சம் என்ற விலையில் மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Maruti WagonR Flex Fuel: மாருதி வேகன் ஆர் ஃப்ளெக்ஸ் ஃபியூல் காரானது உள்நாட்டு சந்தையில் மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி வேகன் - ஆர் ஃப்ளெக்ஸ் ஃபியூல்

நாட்டின் முதல் ஃப்ளெக்ஸ் ஃபியூல் கார் மாடலை, வேகன் ஆர் பையோஃப்ளெக்ஸ் என்ற பெயரில் மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தின் வழக்கமான மாடலின் டாப்-ஸ்பெக் எடிஷனான Zxi+ 1.2P MT வேரியண்டை அடிப்படையாக கொண்டு, டால் பாய் ஹேட்ச்பேக்கின் ஃப்ளெக்ஸ் ஃபியூல் எடிஷனானது உருவாக்கப்பட்டுள்ளது. ஃப்ளெக்ஸ் ஃப்யூல் அடிப்படையில் ஏற்கனவே இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வந்து இருந்தாலும், கார் வெளியாவது இதுவே முதல்முறையாகும்.

வேகன் ஆர் பையோஃப்ளெக்ஸ்

வேகன் ஆர் பையோஃப்ளெக்ஸ் காரின் தொடக்க விலை 7 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமான Zxi+ வேரியண்டை காட்டிலும் இதன் விலை 86 ஆயிரம் ரூபாய் அதிகமாகும். உள்நாட்டு சந்தையில் இந்த காரானது இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாருதி வேகன் ஆர் பயோஃப்ளெக்ஸ் விலை, வழக்கமான வேகன் ஆர் உடன் ஒப்பிட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

 
 
வேகன் ஆர் பையோஃப்ளெக்ஸ்
வேகன் ஆர் இசட்எக்ஸ்ஐ+ எம்டி
விலை வித்தியாசம்
நான் மெடாலிக் பெயிண்ட்
 
ரூ 7.24 லட்சம்
ரூ 6.38 லட்சம்
+ ரூ 86,000
மெடாலிக் பாயிண்ட்
 
ரூ 7.24 லட்சம்
ரூ 6.38 லட்சம்
+ ரூ 86,000
டூயல் டோன் பெயிண்ட்
 
இல்லை
ரூ 6.49 லட்சம்

இன்ஜின் விவரங்கள் - மைலேஜ் எப்படி?

மாருதி வேகன் ஆர் பையோஃப்ளெக்ஸ் காரானது, 1.2-லிட்டர் நான்கு-சிலிண்டர் K12N நேசட்லி ஆஸ்பிரேட்டட் இன்ஜினைக் கொண்டு, 5-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிக எத்தனால் அளவுகளைக் கையாள்வதற்காக மாருதி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் இன்ஜெக்டர்கள் மற்றும் எரிபொருள் பம்புகள், புதிய எரிபொருள் குழாய்கள், மறுசீரமைக்கப்பட்ட ECU மற்றும் ஒரு எத்தனால் சென்சார் உள்ளிட்ட பல மாற்றங்களைச் செய்துள்ளது. இவை, 85 சதவிகிதம் வரை எத்தனால் (E85) கொண்ட எரிபொருளுடன் இந்த இன்ஜினை இணக்கமானதாக ஆக்குகின்றன. மாருதி இன்னும் விரிவான தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை வெளியிடவில்லை என்றாலும், 91hp மற்றும் 114Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் ஸ்டாண்டர்ட் வேகன் ஆர் ZXi+ மாடல், 5-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் லிட்டருக்கு 23.56 கிலோ மீட்டர் மற்றும் 5-ஸ்பீட் ஆட்டோமேடட் ட்ரான்ஸ்மிஷன் உடன் லிட்டருக்கு 24.43 கிலோ மீட்டர் மைலேஜ்  தரும் எனக் கூறப்படுகிறது.

வேகன் ஆர் பையோஃப்ளெக்ஸ் - வித்தியாசம் என்ன?

வழக்கமான மாடலுடன் ஒப்பிடும்போது, ​​வேகன் ஆர் பையோஃப்ளெக்ஸின் வெளிப்புற மற்றும் உட்புற டிசைனில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. வெளிப்புறத்தில் கண்ணுக்குத் தெரியும்  மாற்றமாக, பக்கவாட்டில் ஒட்டப்பட்டுள்ள ஃபிளெக்ஸ் ஃப்யூல் ஸ்டிக்கர்களும், டெயில்கேட்டில் உள்ள பையோஃப்ளெக்ஸ் பேட்ஜும்தான் உள்ளது. உட்புறத்தில் எந்த மாற்றமும் இல்லை. கருப்பு மற்றும் பழுப்பு நிற டூயல் டோன் கேபின் அமைப்பு, துணியாலான இருக்கை உறைகள், மீடியா கட்டுப்பாட்டு பொத்தான்களுடன் கூடிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவையும் இதில் அடங்கும்.

பையோஃப்ளெக்ஸ் மாடலில், வயர்ட் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே கனெக்டட் வசதியுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESP) ஆகியவை பொருத்தப்பட்டுள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. இருப்பினும், இது டாப்-ஸ்பெக் ZXi+ ட்ரிம்மை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இதில் பின்புற வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி, மேனுவலாக சரிசெய்யக்கூடிய உட்புற ரியர்வியூ மிரர் (IRVM), 4 ஸ்பீக்கர்கள், முன்பக்க ஃபாக் லேம்ப்கள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

வேகன் ஆர் பையோஃப்ளெக்ஸ் - மைலேஜ் குறையுமா?

சுஸுகி ஜிக்ஸர் SF 250 உடன்  E20 Vs E85 அடிப்படையில் நடத்திய மைலேஜ் சோதனையில் , E20 எரிபொருளை விட E85 எரிபொருள் 24.40 சதவிகிதம் குறைவான மைலேஜை வழங்குவது தெரியவந்துள்ளது.  இது முற்றிலும் வேறுபட்ட வாகனப் பிரிவாக இருந்தாலும், வேகன் ஆரிலும் இதேபோன்ற செயல்திறன் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், E20 எரிபொருளை விட E85 எரிபொருள் 19.58 சதவிகிதம் மட்டுமே மலிவானது.

இதையும் படியுங்கள்: Kia Upcoming SUV: சோனெட், செல்டோஸ் ரெண்டுமே வேண்டாமா? மிடில் பட்ஜெட்டில் கியாவின் புதிய எஸ்யுவி - எப்படி இருக்கு?

தற்போதைக்கு, மாருதி பையோஃப்ளெக்ஸ் மாடலை வர்த்தகப் பிரிவுக்கு மட்டுமே வழங்குகிறது. வர்த்தக ரீதியாகக் கிடைக்கும் வேகன் ஆர் டூர் H3 மாடலின் விலை ரூ. 4.99 லட்சம் (பெட்ரோல் MT மாடலுக்கு) முதல் ரூ. 5.89 லட்சம் (CNG MT மாடலுக்கு) வரை உள்ளது. அதனுடன் ஒப்பிடும்போது, ​​பையோஃப்ளெக்ஸ் மாடல் ரூ. 1.35 லட்சம் முதல் ரூ. 2.25 லட்சம் வரை அதிக விலை கொண்டது. இருப்பினும், பயோஃப்ளெக்ஸ் மாடலில் 1.2-லிட்டர் இன்ஜின் உள்ளது, ஆனால் வேகன் ஆர் டூர் H3 மாடலில் 69hp திறன் கொண்ட சிறிய 1.0-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. என்பதால் விலை உயர்வு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக கருதப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
துசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
Embed widget