டேங்கரை நிரப்பினால் 264 கி.மீட்டர் மைலேஜ்... ஹீரோ போல போக Hero Xoom 125 ஸ்கூட்டர்!
Hero Xoom 125 ஸ்கூட்டரின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் ஹீரோ. ஹீரோ நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. அப்போது, Hero Xoom 125 இரு சக்கர வாகனத்தின் விலை, தரம் மற்றும் மைலேஜ் ஆகியவை குறித்து கீழே காணலாம்.
Hero Xoom 125:
இந்த Hero Xoom 125 ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது.
1. Xoom 125 VX - ரூபாய் 1 லட்சத்து 4 ஆயிரத்து 602
2. Xoom 125 ZX - ரூபாய் 1 லட்சத்து 13 ஆயிரத்து 529
மைலேஜ்:
முதல் வேரியண்ட்டில் ட்ரம் ப்ரேக்கும், பின்பக்கத்தில் டிஸ்க் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. நீலம், சாம்பல், மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது. இந்த Xoom 125 ஸ்கூட்டரில் 125 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 9.8 பிஎச்பி குதிரைத்திறன் கொண்டது. 10.4 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
அதிகபட்சமாக 95 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த ஸ்கூட்டர் 52.8 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 264 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கும். பிஎஸ்6 பாஸ் 2 எமிஷன் ஸ்டாண்டர்ட் உள்ளது.
சிறப்புகள்:
ஐபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் 14 இன்ச் சக்கரங்களும், பின்பக்கம் 14 இன்ச் சக்கரங்களும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சன் முன்பக்கம் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கிள் சைட் ஷாக் அப்சார்பர் வித் அட்ஜஸ்டர் பின்பக்கம் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த Xoom 125 ஸ்கூட்டரில் 120 கிலோ எடை கொண்டது. 777 மி.மீட்டர் இருக்கை உயரம் கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 164 மி.மீட்டர் ஆகும். 5 லிட்டர் பெட்ரோல் டேங்க் வசதி உள்ளது. 1.25 லிட்டர் ரிசர்வ் டேங்க் வசதி உள்ளது. 50 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருடம் வாகன வாரண்டி அளிக்கப்படுகிறது.
வசதிகள்:
எல்சிடி டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. மொபைல் போன் கனெக்ஷன் ப்ளூடூத் வசதி உள்ளது. ரியல் டைம் மைலேஜ் இண்டிகேட்டர் வசதி உள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், ப்யூல் கேஜ் டிஜிட்டல் வசதி உள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்ட்டி வசதி உள்ளது.
2 ட்ரிப்மீட்டர்ஸ் டிஜிட்டல் வசதி உள்ளது. ஸ்டாண்ட் அலார்ம், லோ பேட்டரி இண்டிகேட்டர், லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது. மால்ஃபங்ஷன் இண்டிகேட்டர் வசதி உள்ளது. கால்/எஸ்எம்எஸ் அலர்ட் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலண்ட் ஸ்டார்ட் வசதி உள்ளது. எல்இடி ப்ரொஜக்டர் முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் வசதி உள்ளது. சிக்னல் விளக்குகள் எல்இடி வசதி உள்ளது. 60 கி.மீட்டர் வேகத்தை 7.6 நொடிகளில் எட்டுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்






















