மேலும் அறிய

Ducati: உலகின் மிகக் குறைந்த எடையில் சூப்பர் பைக்- காற்றில் மிதக்கும் வேகம்! களமிறக்கிய டுகாட்டி- விலை எவ்ளோ?

Ducati Superleggera V4: டுகாட்டி சூப்பர்லெகரா வி4 சென்டினாரியோ மாடல், தற்போது உலகின் மிகக் குறைந்த எடைகொண்ட சூப்பர் பைக் என்ற பிரம்மாண்டமான பெருமையைப் பெற்றுள்ளது.

பைக் பிரியர்களின் சொப்பன வாகனமாகத் திகழும் இத்தாலியின் பிரபல டுகாட்டி (Ducati) நிறுவனம், தற்போது ஆட்டோமொபைல் உலகமே வியந்து பார்க்கும் வகையில் ஒரு புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

என்ன மாடல் பைக்?

டுகாட்டி சூப்பர்லெகரா வி4 சென்டினாரியோ (Ducati Superleggera V4 Centenario) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல், தற்போது உலகின் மிகக் குறைந்த எடைகொண்ட சூப்பர் பைக் என்ற பிரம்மாண்டமான பெருமையைப் பெற்றுள்ளது.

எடை குறைவு... ஆனால் பவரில் அசுரன்!

சூப்பர் பைக் என்றாலே அதீத எடையும், உறுமலான சத்தமும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இந்த பைக் அந்த இலக்கணத்தையே முற்றிலுமாக மாற்றியெழுதியுள்ளது. பைக்கின் எடையைக் குறைப்பதற்காக, இதன் பிரேம், ஸ்விங் ஆர்ம் மற்றும் சக்கரங்கள் எனப் பல முக்கிய பாகங்களை முழுவதுமாக கார்பன் ஃபைபரால் உருவாக்கியுள்ளது டுகாட்டி.

இதனால் இதன் எடை நம்ப முடியாத அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. வெறும் 152 கிலோ எடை மட்டுமே கொண்ட இந்த பைக், ரேஸ் டிராக்கில் இறங்கினால் பறவை போல சீறிப்பாயும் வகையில் ஏரோடைனமிக்ஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் சக்திவாய்ந்த டெஸ்மோசெடிசி ஸ்ட்ராடேல் வி4 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சுமார் 234 குதிரைத்திறனை அநாயாசமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

கோடிகளைத் தாண்டும் விலை!

 இது ஒரு ஸ்பெஷல் லிமிடெட் எடிஷன் மாடல். அதாவது, உலக அளவிலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில், விஐபி வாடிக்கையாளர்களுக்காக மட்டுமே இந்த சென்டினாரியோ மாடல் தயாரிக்கப்பட உள்ளது.

இதன் சர்வதேச விலையை இந்திய ரூபாய்க்கு மாற்றிக் கணக்கிட்டால், ஆரம்ப விலையே சுமார் ரூ. 1.30 கோடியைத் தாண்டும் எனத் தெரிகிறது. இந்தியாவுக்கு இறக்குமதி செய்து, வரிகள் அனைத்தையும் கட்டினால் இதன் ஆன்-ரோடு விலை இன்னும் பல லட்சங்கள் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 90 கி.மீட்டர் மைலேஜ்... Firefox Urban Eco இ சைக்கிளை வாங்கி ஓட்டலாமா? விலை எவ்ளோ?
Best Mileage Cars Under 7 Lakh: சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
சின்ன பட்ஜெட்டு, பெத்த மைலேஜு.! ரூ.7 லட்சத்தில் கிடைக்கும் சக்திவாய்ந்த சிக்கனமான கார்கள் எவை தெரியுமா.?
MG Comet EV on EMI: ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?
ஒரு 50,000 ரூபாய் எடுத்துட்டு போங்க, எம்ஜி காமெட் இவி காரோட வாங்க; EMI எவ்வளவு வரும் தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget