Mercedes-Benz GLE 53: எப்படி இருக்கு மெர்சிடஸ் பென்ஸ் GLE 53 2024? ஃபர்ஸ்ட் லுக் விமர்சனம் இதோ..!
Mercedes-Benz GLE 53: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட AMG GLE 53 கார் மாடல் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Mercedes-Benz GLE 53: மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட AMG GLE 53 கார் மாடலின், சிறப்பம்சங்கள் என்ன என்பதை இந்த தொகுபில் அறியலாம்.
மெர்சிடஸ் பென்ஸ் AMG GLE 53:
Mercedes-Benz இந்தியாவில் மிகப்பெரிய தயாரிப்பு வரம்பைக் கொண்டுள்ளது. அவற்றில் SUV கூபேக்கள் உட்பட பல்வேறு தோற்றங்களை கொண்ட மாடல்களும் அடங்கும். இந்தியாவில் ஸ்போர்ட்டியர் AMG தோற்றத்தில் கிடைக்கும் கார்களில் GLE கூபேவும் ஒன்று. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான தனது தயாரிப்பு மாடல்களின் வெளியீட்டு உத்தியைத் தொடர்ந்து, ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட AMG GLE 53 AMG மாடலை சந்தைக்கு கொண்டுவர உள்ளது.
மெர்சிடஸ் பென்ஸ் GLE 53 AMG 2024
அப்டேட்கள் என்ன?
மேம்படுத்தப்பட்ட AMG GLE 53 AMG கார் மாடல் உள்ளே காட்சி மாற்றங்களை பெறுகிறது. வெளிப்புறத்தில் கூபே வடிவமைப்பு பழையதை போன்றே தொடர்ந்தாலும், தோற்றம் புதியதாக இருக்கிறது. ஸ்டைலிங் ஸ்டேண்டர்ட் GLE விட பரந்த மற்றும் ஸ்போர்ட்டியர் மாடல் ஆக உள்ளது. முன்பக்கத்தில் புதிய லைட்டிங் சிக்னேச்சர், பம்பர் டிசைன், ஏஎம்ஜி லோகோ மற்றும் செங்குத்து ஸ்லேட்டுகளுடன் கூடிய புதிய மல்டிபீம் எல்.ஈ.டி ஹெட்லைட்களை கொண்டுள்ளது. 22-இன்ச் அலாய் வீல்களுடன், பின்புற ஸ்டைலிங்கில் புதிய டெயில் லேம்ப்கள் உள்ளன.
மெர்சிடஸ் பென்ஸ் GLE 53 AMG 2024
இண்டீரியர் அப்டேட்கள்:
உட்புறத்தில் டச் சென்சிட்டிவ் பட்டன்களுடன் புதிய தோற்றம் கொண்ட ஏஎம்ஜி ஸ்டீயரிங் வீல்கள் உள்ளன. ஸ்டீயரிங் வீலில் எக்ஸாஸ்ட் மற்றும் டைனமிக் அமைப்புகளை மாற்றியமைக்க ஷார்ட்கட் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. புதிய அம்சங்களில் சூடான/குளிரூட்டப்பட்ட இருக்கைகள், குரோம் ஏர் வென்ட்கள் மற்றும் கூடுதல் ஆஃப்-ரோடு தொடர்பான தகவல்களை வழங்கும் மேம்படுத்தப்பட்ட திரைகள் ஆகியவற்றுடன், வெளிப்படையான பானட் அம்சமும் அடங்கும். இது 3D பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம், புதிய MBUX, ஸ்லைடிங் பனோரமிக் சன்ரூஃப் என பல்வேறு அம்சங்களையும் கொண்டுள்ளது.
மெர்சிடஸ் பென்ஸ் GLE 53 AMG 2024
பவர் டிரெயின் விவரங்கள்:
6 சிலிண்டர் டர்போ பவர்டிரெய்ன் இப்போது ஒரு லேசான ஹைப்ரிட் அமைப்பைக் கொண்டுள்ளது, இது மின்சார பூஸ்டுடன் 560Nm மற்றும் 420bhp க்கு ஆற்றலை உருவாக்குகிறது. இதன் விளைவாக, இந்த வாகனமானது பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டுகிறது. ஆல்-வீல் டிரைவ் அம்சத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக். டிரான்ஸ்மிஷன் ஸ்டாண்டர்ட் ஆக வழங்கப்படுகிறது. டியூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் போன்ற சில குறிப்பிட்ட அம்சங்களையும் AMG மாடல் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, GLE கூபே செயல்திறன் ஆர்வலர்களுக்கானது. அதோடு, SUV மாடலுக்கான கிரவுண்ட் கிளியரன்ஸ் அம்சத்துடன், சொகுசு காரை தினசரி பயன்படுத்த விரும்புவோர்களுக்கும் இந்த மெர்சிடஸ் பென்ஸ் AMG GLE 53 2024 மாடல் உகந்ததாக இருக்கும். வரும் பிப்ரவரி 1ம் தேதி நடைபெற உள்ள மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சியில், இந்த காரின் விலை விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளது.
மெர்சிடஸ் பென்ஸ் GLE 53 AMG 2024