மேலும் அறிய

கோடீஸ்வரனாக போகும் ராசிகள் எவை? 12 ராசிகளுக்கான குருவின் ரோகினி பெயர்ச்சி பலன்கள்..!

ஒருவேளை உங்களை கூரையின் உச்சிக்கு கொண்டு சென்று குபேரனாகப் போகிறாரா அல்லது அகல பாதாளத்தில் கீழே தள்ளி ஒன்றும் இல்லாமல் ஆக்கப் போகிறாரா? என்பதை நாம் பார்க்கலாம்.

அன்பார்ந்த abp நாடு வாசகர்களே! குருவின் பெயர்ச்சி என்று பொதுவாக நாம் பார்க்கிறோம் வருடத்திற்கு ஒருமுறை நடக்கிறது  ஆனால் ஒவ்வொரு ராசி கட்டத்திலும்.  மூன்று நட்சத்திரங்கள் அடங்கியிருக்கின்றன மூன்று நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு பாதங்கள் இருக்கின்றன. அப்படி பார்த்தோமானால்  குரு பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆவதற்கு பின்பாக  பலவிதமான மாற்றங்களையும் ஏற்றங்களையும் ராசியினருக்கு கொண்டு வந்திருக்கலாம் அல்லது போன குரு பெயர்ச்சியிலும் இப்படித்தான் இருந்தது இப்போதும் இப்படித்தான் இருக்கிறது எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் நீங்கள் கருதலாம் அதற்குக் காரணம் கிருத்திகை நட்சத்திரம் மேஷ ராசியிலும் இருக்கிறது ரிஷப ராசியிலும் இருக்கிறது அப்படி என்றால்..  

நான்கு நட்சத்திர பாதங்களில் மேஷ ராசியில் அனுபவித்த அதே சம்பவங்களை ரிஷப ராசியில் இருக்கக்கூடிய கிருத்திகை நட்சத்திரத்தில் குரு பகவான் பயணம் செய்யும்போது நீங்கள் அனுபவித்து இருக்கலாம் ஆனால் தற்போது நிலைமையே வேறு...  குறிப்பாக குரு கிருத்திகையிலிருந்து பெயர்ச்சியாகி கடந்த ஜூன் 13ஆம் தேதி அன்று ரோகிணி நட்சத்திரத்துக்குள் பிரயாணம் செய்து இருக்கிறார். வாருங்கள் ரோகிணி நட்சத்திரத்தின் மகிமைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்!!!

ரோகிணி நட்சத்திரமும்  - சந்திரனின் ஆதிக்கம்!!!
 

அன்பார்ந்த வாசகர்களே ரோகினி நட்சத்திரம் என்பது சந்திரனின் பரிபூரண ஆசை பற்றி நட்சத்திரமாக விளங்குகிறது புராணங்களில் கூட.  சந்திரனுடைய முதன்மையான மனைவியாக ரோகிணி பார்க்கப்படுகிறார் சந்திரனுக்கு மிகவும் பிடித்த மனைவியாகவும் ரோகிணி திகழ்வதாகவும் புராண கதைகள் கூறுகிறது அப்படி என்றால்   ரிஷப ராசியில் சந்திரன் உச்சம் ஆகிறது குறிப்பாக ரோகிணி நட்சத்திரத்தில் உச்சம் ஆகிறது  குரு சந்திரன் வீட்டில் உச்ச மாமா காரணம் குருவுக்கு தண்ணீர் என்றால் ரொம்ப பிடிக்கும் அதே போல உணவு என்றாலும் ரொம்ப பிடிக்கும் சந்திரன் மனது காரகன் உணவு காரகன் தண்ணீர் காரகன் இந்த இடத்தில் குரு பகவான் உச்சம் பெறும்போது நிச்சயமாக அவருக்கு ரோகினி நட்சத்திரமான  சந்திரனின் ஆசி பெற்ற நட்சத்திரம் சாதகமான நட்சத்திரம் அல்லவா....  இப்படி குருவுக்கு ரொம்ப பிடித்தமான சந்திரனின் ஆதிக்கத்தை கொண்ட சந்திரனின் நட்சத்திரமான ரோகிணியில் குரு பயணம் செய்யும்போது 12 ராசிகளுக்கு என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறார் ஒருவேளை உங்களை கூரையின் உச்சிக்கு கொண்டு சென்று குபேரனாகப் போகிறாரா அல்லது அகல பாதாளத்தில் கீழே தள்ளி ஒன்றும் இல்லாமல் ஆக்கப் போகிறாரா?   என்பதை நாம் பார்க்கலாம்...

மேஷ ராசி :

மேஷ ராசியை பொறுத்தவரை நான்காம் அதிபதி சந்திரன் அவரின் நட்சத்திரம் ரோகினி 12ஆம் அதிபதி 9ஆம் அதிபதி நான்காம் வீட்டு அதிபதி நட்சத்திரமான ரோகிணியில் குருபகவான் பிரயாணம் செய்யும் போது.  நீண்ட தூர பிராயணங்கள் மூலமாக சாதகமான அனுகூலமான பலன்களை உங்களுக்கு தருவார். குறிப்பாக திருமண வயதை கடந்த ஆண் பெண் இருவருக்குமே  உங்கள் சொந்த ஊரில் வரன் அல்லாமல் வெளியூரில் வெளிமாநிலத்தில் சிலருக்கு வெளிநாட்டில் கூட வரன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

நான்காம் அதிபதி சந்திரனின் நட்சத்திரத்தில் குரு அமரும்போது  அவர் ஒன்பதையும் 12 யும் இயக்குவார் நன்றாக தூக்கம் வரும்  பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல்  சற்று விலகியே இருப்பீர்கள்.   நோய்நொடி தொந்தரவு இல்லாமல் உங்களுக்கு இருக்கும்.   குருவானவர் ஆசிரியர் என்பதால்  இதுவரை உங்களுக்கு கிடைக்காதது அல்லது கிட்டாதது குறித்து பெரிய மகான்களிடத்திலிருந்து நல்ல உபதேசங்கள் வரும்.

ரிஷப ராசி :
 

உங்களது ராசியில் தான் குருபகவான் சஞ்சாரம் செய்கிறார். ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும் என்ற பாடலின் அடிப்படையில் ராசியிலேயே இருக்கும் குரு பகவான் ஒருவேளை தீமையை கொண்டு வருவாரா உங்கள் வாழ்க்கை துணை இடம் இருந்து உங்களை பிரிப்பாரா என்ற சந்தேகம் எல்லாம் மற்ற ஜோதிடர்கள் கூறும் போது உங்களுக்கு எழுந்திருக்கலாம். ஆனால் அப்படி அல்ல குருவானவர் நன்மையே செய்யக்கூடிய சுப கிரக வாழ்க்கையில் உங்களை உயர்த்துவதற்குத்தான் அவர் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கிறார்.

குருவானவர் ரிஷப ராசிக்கு எட்டாம் அதிபதியாயிற்று. அவர் எப்படி நன்மை செய்வார் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் உங்களுக்கு லாப ஸ்தான அதிபதியும் கூட. அப்படி என்றால் நீண்ட தூர பிராயணங்களை மேற்கொள்ள வைப்பார். குறிப்பாக உங்கள் முயற்சிகளில் வெற்றியை தருவார். ஏதோ ஒரு காரியத்திற்கு நீங்கள் எத்தனை படிக்கிறீர்கள் என்றால் அதை விரைவில் செய்து கொடுப்பார்.  ஒரு வீட்டை நீங்கள் புதுப்பிக்க வேண்டும் என்றாலும் அதை தாராளமாக செய்யலாம்.  ஆறாம் வீட்டிற்கு  மூன்றாம் வீடு பத்தாம் வீடு என்பதால் நிச்சயமாக கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அப்படி கிடைத்த கடனை வைத்து நீங்கள் வீட்டில் சுப காரிய நிகழ்வுகளையும் நடத்தலாம்.

மிதுன ராசி :
 

அன்பான மிதுன ராசி வாசகர்களே குரு பகவான் உங்களுக்கு ஏழாம் அதிபதியும் பத்தாம் அதிபதியும் ஆகி 12 ஆம் வீட்டில் குருவினுடைய நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார் மாணவ மாணவிகளே படிப்பிற்காக நீங்கள் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புண்டு அதேபோல உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் விடமாட்டோம் தொழில் மாற்றம் ஏற்படலாம். குறிப்பாக வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய வியாபாரத்தை விரிவு படுத்துவதற்காக நீங்கள் வெளியிடங்களுக்கு அதாவது கிளை.  உருவாக்குவதற்காக ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு நீங்கள் செல்ல நேரிடலாம் இப்படியான சூழ்நிலையை நீங்கள் தவிர்க்க வேண்டாம் அதை அப்படியே ஏற்றுக் கொண்டால் விரையங்கள் குறையும். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன கூறுகிறார்கள் என்று கவலைப்படாமல் வாழ்க்கை உங்களை எப்படி ஓட்டிச் செல்ல ஆசைப்படுகிறது நீங்கள் அப்படியே செல்லுங்கள் குரு பகவானின் அருள் உங்களுக்கு எப்பொழுதும் கிடைக்கும்.

கடக ராசி :
 

சந்திரனின் ஆசி பெற்ற கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார் அவர் ஆறாம் வீட்டு அதிபதி யார் என்றால் என்ன பொய்களைக் குறிக்கும் எதிரிகளைக் குறிக்கும் கடன்களை குறிக்கும் அவர் பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருந்தால் நீங்கள் எடுத்தவர்களுக்கு கடன் கொடுப்பீர்கள் நோய் எப்படி தீரும் என்பதை பற்றி நீங்கள் அடுத்தவர்களுக்கு பாடம் எடுப்பீர்கள்  எதிரிகள் எப்படி அறிவார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் ஒருவேளை மறைமுகமாக எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும் கடக ராசி அன்பர்கள் அதை எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். இந்த மாதிரியான சூழ்நிலையில் ரோகினி நட்சத்திரத்தில் குருபகவான் பயணம் செய்யும் காலத்தில் உங்களுக்கு ஏற்ற அனுகூலமான பலன்களை நடைபெறும் குறிப்பாக போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். அரசு உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு முதல் திருமணம் கைகூடாமல் போக இரண்டாம் திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு வரன் வீடு வாயில் தேடி வரும் இப்படியான சுப பலன்களை நீங்கள் அனுபவிப்பீர்கள்.   சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று மெய் தீபம் ஏற்றி வர சங்கடங்கள் விலகும்.

சிம்ம ராசி :

 எதை  வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அதை நீங்கள் நிச்சயமாக நடத்திக் காட்டுவீர்கள் அப்படி உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று நல்ல ஒரு ஊழியராக விளங்குவீர்கள் ஒருவேளை உங்களுக்கான சூழ்நிலையில் நீங்கள் ஒரு நிறுவனத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆசைப்பட்டால் நிச்சயமாக அது நடக்கும் அப்படி நடந்தாலும் உங்களுக்கு நன்மையை ஏற்படும் அதனால் கருமஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பது குறிப்பாக ரோகிணி நட்சத்திரத்தில் இருப்பது உங்களுக்கு சிறப்பையே கொண்டு வரும்.

கன்னி ராசி:
 

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு குருபகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார் 9 என்பது உபதேச ஸ்தானம் பாக்கியஸ்தானம் உங்களுக்கு வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய அனைத்து சகல சௌபாக்கியங்களையும் நிறைவாக குருபகவான் தரவிருக்கிறார். குறிப்பாக ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கும் குருவினுடைய திருவருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு பதினொன்றாம் வீடு அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் குரு பிரயாணம் செய்யும் போது நீங்கள் இதனால் வரையில் என்னென்ன தடைகளை சந்தித்து வந்தீர்களோ அந்த தடைகளை எல்லாம் நிவர்த்தி ஆக்கப் போகிறார்.

துலாம் ராசி :

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு அஷ்டமஸ்தானத்தில் அதாவது எட்டாம் வீட்டில் குரு பிரயாணம் செய்கிறார் எட்டு என்பது என்ன கெடுதல் ஸ்தானம் என்று எல்லோரும் உங்களை பயமுறுத்தி இருப்பார்கள் ஆனால் எட்டு என்பது அதிர்ஷ்டம் தான் அந்த இடத்தில் தான் உங்களுக்கு ஆயுள் வைக்கப்பட்டிருக்கிறது ஒரு மனிதனுக்கு ஆயுள் எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை அப்படிப்பட்ட ஸ்தலத்தில் குரு பகவான் போகும்போது ஆயூலுக்கு கண்டமான எப்பேர்பட்ட கொடிய நோயாக இருந்தாலும் அவை பூரணமாக குணமடையும்.  குறிப்பாக வியாபாரத்தில் தொழிலில் நீங்கள் லாபத்தை எதிர்பார்த்து இருந்தால் எட்டாமிடம் என்பது அடுத்தவரின் பணம் அடுத்தவர் சம்பாதிக்கும் பணத்தை உங்களுடைய கைகளுக்கு கொண்டுவரும் வித்தையை தான் எட்டில் இருக்கும் குரு பகவான் செய்யப் போகிறார் அதுவும் உங்களுடைய ராசிக்கு பத்தாம் அதிபதியான சந்திரனின் நட்சத்திரத்தில் ரோகினியில் குரு பிரயாணம் செய்யும் போது இப்படியான சுப பலன்களை வாரி வழங்குவார்.

விருச்சக ராசி :
 

அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார் வேறென்ன வேண்டும் ஏழை என்பது களஸ்திர ஸ்தானம் திருமணம் விரைவில் கைக்கூடும் பிரிந்து சென்றவர்கள் ஒன்று கூடுவார்கள் வம்பு வழக்குகளில் சிக்கி இருந்தீர்கள் என்றால் அது அனைத்தும் விடுதலையாகி உங்களுக்கு நன்மை கிட்ட போகிறது குறிப்பாக குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது பதிவாவதால் வேகம் ஆரோக்கிய மனையும் பொலிவு கூறும். அடுத்தவர்களின் பாராட்டை பெறுவீர்கள் போட்டி தேர்வுகளில் வெற்றி அடைவீர்கள்  சுப காரிய நிகழ்வுகள் வீட்டில் நடந்திடும் பிரயாணங்களை மேற்கொள்வீர்கள் குருபகவான் ரோகிணி நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது பெரியோர்களின் ஆசிர்வாதத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவது நல்லது.

தனுசு ராசி :
 

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார் எதிரியை வெல்லக்கூடிய சக்தி கிடைக்கும் யார் உங்களை எதிர்த்து நின்றாலும் அவர்களை ஒரு கை பார்த்து விடுவீர்கள் குறிப்பாக உங்களுடைய அஷ்டமஸ்தான அதிபதி எட்டாம் வீட்டு அதிபதியை நட்சத்திரத்தில் குரு பகவான் ஆயில் பிரயாணம் செய்யும் போது உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும் தனவரவு உண்டு. எங்களை ஆச்சரியப்படும் அளவிற்கு மிகப்பெரிய தலயோக பாக்கியம் உங்களுக்கு கிடைக்கப் போகிறது குறிப்பாக அடுத்தவர் உங்களை எப்படியெல்லாம் ஏளனம் செய்தார்களோ அந்த மாதிரி எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடக்காமல் நீங்கள் கோடீஸ்வரராக கூட வாய்ப்புண்டு. அப்படியான ஒரு நட்சத்திரத்தில் தான் குரு பகவான் பிரயாணம் செய்கிறார்  தாம் வீட்டில்  அதிபதி  அந்தர நட்சத்திரத்தில் குரு பிரயாணம் செய்யும் போது நீங்கள் கேட்காதது எல்லாம் நடக்கப் போகிறது.  வாழ்க்கையில் ஒலி கிடைக்கப் போகிறது.

மகர ராசி :

அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார். 5 என்பது என்ன உங்களுடைய எண்ணங்களை குறிக்கும் நீங்கள் சிந்திக்கின்ற சிந்தனைகளை குறிக்கும் உங்களுடைய மகிழ்ச்சியை குறிக்கும். நீங்கள் யாரைப் பற்றி யோசிக்கிறீர்கள் அவர்களைப் பற்றிய சிந்தனைகளை குறிக்கும் உங்களுடைய குழந்தைகளை குறிக்கும் உங்களுடைய பூர்வீகத்தை குறிக்கும் நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் அந்த இடத்தை குறிக்கும். இப்படியான சுப பலன்களை நிறைந்த ஐந்தாம் பாவத்தில் குரு ரோகினி நட்சத்திரத்தில் பிரயாணம் செய்கிறார். ரோகினி நட்சத்திரம் சந்திரனுடைய நட்சத்திரம் மகர ராசிக்கு ஏழாம் வீடு சந்திரனின் வீடு பரிபூரண சுப கிரகமான சந்திரனின் நட்சத்திரத்தில் ஐந்தாம் வீட்டில் குரு பிரயாணம் செய்யும் போது புத்திர பாக்கியம் கிடைக்கப்போகிறது நீங்கள் பூர்வீகத்தை நோக்கி பிரயாணம் செய்வீர்கள் உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்..  வாழ்க்கை ஒளிமயமாக மாறும்....

கும்ப ராசி:

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார் நான்காம் வீடு என்றால் என்ன நீங்கள் வசிக்கும் வீடு நீங்கள் இருக்கும் இடம் நீங்கள் எவ்வளவு சௌகரியமாக அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை குறிக்கும் நீங்கள் இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்கிறதா என்பதை குறிக்கும். இப்படியான இடத்தில் குரு பகவான் அமர்ந்திருக்கிறார் ஒரு சுப கிரகம்தான். ஆனால் அவர் காற்று கிரகம் என்பதால் சற்றும் எதிர்பாராத பயணங்களால் உங்களை திக்கு முக்காட செய்வார் குறிப்பாக திடீர் பயணங்கள் கூட ஏற்படலாம் அப்படியான சூழ்நிலையில் பணம் தளராமல் பயணங்களை மேற்கொள்ளுங்கள் அதேபோல நான்காம் வீட்டில் இருக்கும் குரு உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் தொழில் முன்னேற்றம் அடையும். மற்றவர்கள் உங்களுக்கு வேலைகளை அள்ளிக் கொடுப்பார்கள் அதில் நீங்கள் பலவிதமான ஆதாயங்களையும் பெறுவீர்கள் நீங்கள் செய்யும் தொழினால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். அப்படியான சுப பலன்களை சந்திக்கும் உங்களுக்கு குருவின் ரோகினி நட்சத்திர சஞ்சாரம் நிச்சயமாக எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றலையும் நோய் தீர்க்கக் கூடிய வல்லமையும் கொண்டுவரும்.

மீன ராசி :
 

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாவது வீட்டில் குரு பகவான் சஞ்சாரம் செய்கிறார் மூன்று என்பது என்ன உங்களுடைய முயற்சிகள் எந்த அளவுக்கு பலிகமாக போகிறது என்பதை காட்டும்.  நீங்கள் ஒரு வேலையை செய்தால் அந்த வேலையில் எவ்வளவு  வெற்றிகளை குவிக்க போகிறீர்கள் என்பதை காட்டும்.  வீட்டிலிருந்து ஒரு வேலைக்காக புறப்பட்டா அந்த வேலை நடக்குமா நடக்காதா அது நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் அது மற்றவர்களின் பார்வைக்கு உயர்வாக இருக்க வேண்டும் என்றால் எப்படி நடக்க வேண்டும் என்பது போன்ற கணக்குகளையும் மனதிற்குள்ளே போட்டு  அதை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற ஒரே முனைப்புடன் குருபகவான் உங்களை செயல்படுத்தத் துணிவார்.  

இப்படியான சூழ்நிலையில் உங்களுக்கு குரு பகவான் யோகி நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது ஐந்தாம் வீட்டிற்குரிய பலன்களை தான் மூன்றில் வாரி வழங்குவார் ஐந்தாம் வீடு என்பது என்ன உங்களுடைய எண்ணங்களை குறிக்கும் காதல் ஸ்தானம் என்பதால் நீங்கள் யாரைப் பற்றி சிந்திக்கிறீர்களோ அவர்களை குறிக்கும்  உங்களுடைய பூர்வீகத்தை குறிக்கும். நீங்கள் எடுத்து செய்கின்ற காரியங்களால் உங்களுக்கு நன்மை ஏற்படுமா ஏற்படாதா என்பதை பற்றி குறிக்கும். அப்படியான வெற்றியின் ஸ்தானமான மூன்றாம் பாவத்தில் ஐந்தாம் பாவ அதிபதி நட்சத்திரத்தில் குரு பகவான் பிரயாணம் செய்யும் போது ரோகிணி உங்களுக்கு வெற்றிகளை கொடுக்கப் போகிறார். மற்றபடி உருவகவானின் சுகபலன்கள் அனைத்தும் உங்களுக்கு குறிப்பாக மீன ராசிக்கு பத்தாம் அதிபதியும் குரு தான் அவரே தொழில் ஸ்தான அதிபதியாக வருகிறார் 5 10 3 ஒன்று கூடும்போது தொழிலில் வெற்றி தொழில் முன்னேற்றம் தொழில் மூலம் லாபம் போன்றவை உங்களுக்கு சர்வ சாதாரணமாக தற்போது கிடைக்கப் போகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு; ஆதாரமும் இருக்கு - அடித்து சொல்லும் ஐஐடி காமகோடி 
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
இந்த தண்டனை போதாது; மாநில அரசு நினைப்பது வேறு: பெண் மருத்துவர் கொலை வழக்கில் பொங்கிய மம்தா!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
UGC draft: சர்ச்சையைக் கிளப்பிய யுஜிசி வரைவறிக்கை: சாட்டையைச் சுழற்றிய முதல்வர் ஸ்டாலின்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வழக்கு; குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள்!
Embed widget