மேலும் அறிய

Weekly Horoscope: இந்த வாரத்துக்கான ராசி பலன்கள்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் என்ன தெரியுமா?

நாளை (ஏப்ரல் 22ம் தேதி) முதல் வருகின்ற 28ம் தேதி வரை உங்கள் ராசிக்கான இன்றைய பலன்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

வார ராசிபலன் ( 22.4.2024 to 28.4.2024 )

மேஷ ராசி :

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே! உங்களுக்கு இந்த வாரம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம் . மேஷ ராசிக்கு வாரத்தின் முதல் நான்கு நாட்கள் அற்புதமான நாட்கள் . இந்த நாட்களில் நீங்கள் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் . ஒரு இடத்தில் கடன் வாங்கி மற்றொரு கடனை அடைப்பதற்கான வழி  கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும் . வீடு மனை வாகனம் போன்றவை சாதகமான  முடிவு  ஏற்படும் . உங்களுக்கான சிக்கல் அழகான நாட்கள் என்று பார்த்தால்  வார இறுதி நாட்களில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது .  மற்றபடி இந்த வாரம் உங்களுக்கு ஏற்றமான வாரமே .

 ரிஷப ராசி :

அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே! இந்த வாரம் உங்களுக்கு ஏற்றத்தின் வாரமாக இருக்கப் போகிறது . நீண்ட தூர பிராயணங்களில் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிட்டும் . நான்காம் அதிபதி 12ஆம் வீட்டில் உச்சம் பெற்று இருப்பதால்  நீண்ட தூர  பிரயாணங்களை  மேற்கொள்வீர்கள். புண்ணிய இடங்களுக்கு குறிப்பாக ஆன்மீக இடங்களுக்கு சென்று வருவீர்கள் . சித்தர் வழிபாடு சிறந்தது

மிதுன ராசி :

அன்பான மிதுன ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு ஒரு பொன்னான  வாரம் தான் இது . குறிப்பாக உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதி சூரியன் உச்சம் பெற்று பதினோராம் வீட்டில் இருப்பது எதையும் சாதிக்கக்கூடிய மனப்பக்குவத்தை ஏற்படுத்தும் . வாழ்க்கையில் என்ன சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை சூரியன் நிறைவேற்றி கொடுப்பார் . புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி உண்டாகும். இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான வாரமாக அமையும் 

கடக ராசி :

அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு இரண்டாம் அதிபதி  பத்தாம் வீட்டில்  உச்சம் பெறுவதால் எதையும் சாதிக்கக் கூடிய மனப்பக்குவம் உண்டாகும் குறிப்பாக தொழிற் ஸ்தானத்தில்  உங்களுக்கு நல்ல சிறப்பான எதிர்காலம் அமையும் . வேலையில் இருந்து வந்த சுணக்கங்கள் நீக்கும் . ஏற்கனவே கடந்த ஓர் ஆண்டு வேளையில் பல சிக்கல்களை சந்தித்து வந்த நீங்கள் தற்போது அதிலிருந்து விடுபட்டு நல்ல மாற்றத்தை காண்பீர்கள் . இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான வாரமே   புதிய வியாபாரம் தொடங்குதல் அயல்நாடு சென்று வாணிகம் செய்தல் போன்றவை உங்களுக்கு சாதகமாக அமையும்

சிம்ம ராசி :

அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே!  இந்த வாரம் உங்களுக்கு பொன்னான வாரமாக தான் அமையும்  ராசி அதிபதி சூரியன் உச்சத்தில் இருக்கிறார்.  பிறகு என்ன ?  உங்களுக்கு தேவையான அனைத்தையும் உச்சம் பெற்ற சூரியன் வாரி வழங்குவார்.  குருபகவான் ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து இந்த வாரம் முழுவதும்  இதுவரை நடக்காத  தாமதமாகி கொண்டிருந்த நிகழ்வுகளை நடத்துவார்.  உங்களைப் பற்றி மற்றவர்கள் ஏதேனும் கூறினால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  இந்த வாரம் சிறப்பான வாரம்.

கன்னி ராசி :

அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு எட்டாம் பாவத்தில் குருபகவான் அமர்ந்திருந்தாலும் 12 ஆம் வீட்டு அதிபதி சூரியன் எட்டாம் வீட்டில் உச்சம் பெறுவது திடீர் அதிர்ஷ்டத்தையும் தன வரவையும் கொண்டு வரும்.  நினைத்த காரியங்கள் வெற்றியாக முடியும்.  எட்டாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு பாகிஸ்தானத்தில் வருகிறார்  உங்கள் ராசியையும் பார்க்கிறார்.  பிரமாதமான எதிர்காலம் உங்களுக்கு உண்டு.  கன்னி ராசியை பொறுத்தவரை கடந்த ஒரு வருடமாக உங்களுக்கு  சுமாரான பலன்கள் நடந்து வந்தாலும்  எதிர்காலம் சிறப்பாக அமையப் போகிறது.

துலாம் ராசி :

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே! துலாம் ராசிக்கு ஏழாம் வீட்டிலேயே அமர்ந்திருக்கும் குரு பகவானால் என்றைக்குமே நன்மைகள் தான் உண்டு.  துலாம்  ராசியில் சந்திரன் பயணிக்கும் போது  எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது  குறிப்பாக வார மத்திய பகுதியில்  எந்த ஒரு புது காரியத்தையும் தொடங்காமல் இருப்பது சிறந்தது.  அடுத்த வாரம் மிகப்பெரிய ஏற்றமான  வாரமாக அமையும்.  ஏற்கனவே  திருமண பேச்சு வார்த்தையில் நடைபெற்று இருந்தவர்களுக்கு இந்த வாரம் திருமணம்  முகூர்த்தங்கள் குறிப்பதற்கு கூட வாய்ப்பு உண்டு.

விருச்சக ராசி :

அன்பார்ந்த விருச்சக ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு ஏற்றமான காலமாக இருந்தாலும்  ராசியில் சந்திரன் பயணிப்பதால் வார இறுதி நாட்களில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் சற்று கவனமாக இருங்கள். ஆறாம் வீட்டில் இருக்கும் குரு பகவான் உங்களுக்கு  சிறு விபத்துகளை கொண்டு வரலாம்.  கடைசியாக குரு பெயர்ச்சிக்கு முந்தைய  வாரத்தில் பெரிதாக ஒன்றும்  தடை ஏற்படப்போவதில்லை. இருப்பினும் வருகின்ற வாரம் உங்களுக்கு ஏற்றமான வாரமே.

தனுசு ராசி :

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு  ஒரு பொன்னான வாரம்  சூரியன் ஐந்தாம் பாவத்தில் உச்சம் பெறுவது  உங்களுடைய புத்தி கூர்மையையும் திறமையையும் மற்றவர்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.  சரியான நேரத்தில் சரியான அதிர்ஷ்டம் உங்கள் வீட்டில் மாய கதவை  தட்டும் .  எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் நீங்கள் வென்று காட்டுவீர்கள் .  இந்த வாரம் முழுவதும் தனுசு ராசிக்கு ஏற்றமான வாரம் .

மகர ராசி :

 அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு இதோ வந்துவிட்டது  ஒரு பொற்காலம்.  கஷ்டமா அதிபதி நான்காம் வீட்டில் உச்சம் பெறுவதால்  வீடு நிலம் விற்பனை தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.  வேலை இடங்களில் பெரிதாக நீங்கள் மதிக்கப்படுவீர்கள்.  சிலருக்கு வேலை மாற்றம் தொழில் மாற்றம் உண்டாகக்கூடும்.  ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு மேலும் பல சிறப்புகளை கூட்டும்.  யார் என்ன சொன்னாலும் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க ஆரம்பித்து விட்டது .

கும்ப ராசி :

அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு  வாரத்தின் ஆரம்ப நாட்களில் வெளியே சந்திராஷ்டமம் செல்வதால்  எதிலும் சற்று கவனமாக இருக்க வேண்டும் குறிப்பாக வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் மட்டும்  நீங்கள் எந்த ஒரு புதிய காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.  மற்றபடி  வாரத்தின் மத்திய நாட்களிலும் இறுதி நாட்களிலும் உங்களுக்கு நல்ல  பலன்களே  நடைபெறப் போகிறது.

மீன ராசி :

அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே!  உங்களுடைய ராசிக்கு வாரத்தின் மையப் பகுதியில் அதாவது புதன் வியாழக்கிழமைகளில் நிச்சயமாக  எந்த ஒரு புதிய காரியத்தையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.  வாரத்தின் மத்திய நாட்களில் சந்திராஷ்டமம் செல்வதால் எதிலும் கவனமாக இருங்கள்.  வேலை மட்டும் தொழில் ஸ்தானங்களில் நீங்கள்  புதிய கூடுதல் பொறுப்புகளை ஏற்க வேண்டாம். மற்றபடி இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு ஏற்றமான வாரமே.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!
" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget