மேலும் அறிய

உப்பிலியப்பன் கோயிலில் தை திருவோணம் நட்சத்திரத்தையொட்டி அகோராத்ர புஷ்கரணி தெப்போற்சவம்

ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவியது. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.

தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் கோயில்,  வைணவக் கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பதிமூன்றாவது திருத்தலம். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும். திருவிண்ணகர்  என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் ஒப்பார் இல்லப்பன். ஒப்பிலியப்பன் என்ற பெயர் பெருமாளுக்கு அமைந்தது. காலப்போக்கில் ஒப்பிலியப்பன் என்பது உப்பிலியப்பன் என மருவியது. இதனால், உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் விண்ணகருக்கு அமைந்தது.

பூமாதேவியை திருமால் திருமணம் செய்து கொண்டு உப்பில்லாமல் அவள் சமைத்த உணவை உண்டதால் உப்பிலியப்பன் என்றாகி விட்டது என்றும் சொல்வதுண்டு. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே  உகந்தது என்பதால் இன்றும் உப்பில்லாத திருவமுதை பெருமாளுக்கு நிவேதனம் செய்கின்றனர். மார்க்கண்டேய  மகரிஷி, காவிரி, கருடன், தருமதேவதை ஆகியோருக்கு தரிசனம் தந்தவர். இத்தலம் செண்பகவனம், ஆகாசநகரம், திருவிண்ணகர், மார்க்கண்டேய க்ஷேத்திரம், ஒப்பிலியப்பன் கோவில், தென் திருப்பதி என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு. நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன் ஆகும்.

உப்பிலியப்பன் கோயிலில் தை திருவோணம் நட்சத்திரத்தையொட்டி அகோராத்ர புஷ்கரணி தெப்போற்சவம்

முற்காலத்தில் மிருகண்டு மகரிஷியின் புத்திரன் மார்கண்டேய மகரிஷி பூமாதேவி தனக்கு மகளாகவும் திருமால் மாப்பிள்ளை ஆக வேண்டும் என கடும் தவம் செய்தபோது துளசி வனத்தில் அழகிய பெண் குழந்தையைக் கண்டு வியந்து எடுத்து பூமாதேவி என பெயர்சூட்டி வளர்த்தார்.  திருமண வயதை அடைந்தாள். அவதார நோக்கம் நிறைவேறும் காலம் வந்தது. திருமால் வயது முதிர்ந்த அந்தணர் வேடம் பூண்டு மார்கண்டேயர் குடிலுக்கு வந்து பூமாதேவியைத் தனக்கு மணம் முடிக்கும்படி கேட்க ஏதேதோ கூறியும் கேட்கவில்லை. மகளுக்கு உப்பு போட்டு சமைக்க தெரியாது என கூறினார். விடவில்லை திருமால். செய்வதறியாது கண்மூடி பெருமானை வேண்டி கண் திறந்தபோது உப்பிலியப்பனே முன் தோன்றி உன்னிடம் வளர்ந்தது பூமாதேவியே என உரைத்து மணம் முடித்தார். மார்க்கண்டேயர் விருப்பம் நிறைவேறியது. இன்றும் உப்பில்லாமல் உணவு நைவேத்தியம் செய்து வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருட ஐப்பசி சிரவண நட்சத்திரத்தன்று திருக்கல்யாணம் சிறப்பாக நடக்கும். இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது, திருப்பதி பெருமாளுக்கு அண்ணனாக உப்பிலியப்பன் கருதப்படுகிறார். இங்கு சென்றாலே திருப்பதி சென்ற பலன் கிட்டும்.

உப்பிலியப்பன் கோயிலில் தை திருவோணம் நட்சத்திரத்தையொட்டி அகோராத்ர புஷ்கரணி தெப்போற்சவம்

 இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலில் வருடந்தோறும் தை திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு அகோராத்ர புஷ்கரணியில் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு, கொரோனா தொற்று விதிமுறைகளால் கடந்தாண்டு தெப்போற்சவம் நடைபெறவில்லை. இந்நிலையில் கோயில் புஷ்கரணியில் மின்னொளி அலங்காரத்தில் அகோராத்ர புஷ்கரணியில் தெப்போற்சவம்  நடைபெற்றது. தெப்பத்தில்  பூமிதேவி சமேத பொன்னப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Embed widget