மேலும் அறிய
Advertisement
Sawan 2022 : வாழ்வில் மகிழ்ச்சி.. திருமண தடை விலகும்.. சோமவார விரதத்தின் பல பலன்கள்!
சவான் மாதம், சிவபெருமானை வழிபட உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் சிவனை வணங்கி கொண்டாடி வருகின்றனர்.
சவான் மாதம்:
சவான் மாதம் 2022 ஜூலை 14 ஆம் தேதி அன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதியான ஷ்ரவண பௌர்ணமி அன்று முடிகிறது. இந்த சவான் மாதத்தின் முதல் சோமவார விரதம் ஜூலை 18ம் தேதி அன்று கடைபிடிக்கப்படுகிறது. சவான் மாதத்தின் திங்கட்கிழமைகளில் சிவ பக்தர்கள் சோமவார விரதம் இருந்து சிவனை வழிபடுவர். இது சவான் மாதத்தின் ஐந்தாம் திதி ஆகும். சவான் மாதத்தில் மொத்தம் நான்கு சோமவார தினங்கள் உள்ளன. அவை ஜூலை 18, ஜூலை 25, ஆகஸ்ட் 01 மற்றும் ஆகஸ்ட் 08.
சவான் மாதம் முழுவதும் சிவபெருமானை வழிபட உகந்த மாதம் என்பதால் நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் சிவனை வணங்கி கொண்டாடி வருகின்றனர். இந்து கலாச்சாரத்தின் படி சவான் மாதம் மிகவும் புனிதமான மாதமாகும். அதனால் இந்த மாதத்தில் விரதம் இருந்து கடவுளை பிரார்த்தனை செய்து அவரின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது ஐதீகம்.
விரதம் இருக்கும் முறை:
இந்த தினத்தில், ஓம் நமசிவாய மந்திரத்தை இடைவிடாது மனதிற்குள் உச்சரித்து கொண்டே இருந்தால் வாழ்வில் சகல மங்களமும் , ஐஸ்வர்யமும் கிடைக்கும். சோமவார தினத்தன்று காலையில் வீட்டை சுத்தம் செய்து தீபம் ஏற்றி சிவனை குறித்து விரதம் இருக்க வேண்டும். ஒரு வேலை மட்டும் உணவு அருந்தி மறுநாள் குளித்த பிறகு விரதத்தை முடிக்க வேண்டும். அன்றைய தினத்தில் ஏழை எளியோருக்கு தானம் செய்தல் சிறப்பு.
சோமவார விரதத்தின் பலன்கள் :
திருமண வாழ்வில் சிக்கல் மற்றும் திருமண தடை விலகும், வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு நிறைந்திருக்கும். திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்களுக்கு தகுந்த வரன் அமையும்.
நாக பஞ்சமி :
ஆகஸ்ட் 02ம் தேதி நாக பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த தினத்தன்று நாக தேவதைக்கு பூஜைகள் செய்து புற்றுக்கு பால் ஊற்றி வணங்குவர். நாக பஞ்சமி அன்று விரதம் இருந்து பூஜை செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும். இந்த பூஜையை செய்தால் கணவரும், குழந்தைகளும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக இருப்பார் என்பது ஐதீகம்.

மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion