Rasipalan Today, June 23 : ரிஷபத்துக்கு அனுபவம்; விருச்சிகத்துக்கு லாபம்... உங்க ராசிக்கு எப்படி?
Rasi palan Today,June 23: இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2022: இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்று கீழே காணலாம்.
நாள்: 23.06.2022
நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 12.30 மணி முதல் நண்பகல் 01.30 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
நண்பகல் 1.30 மணி முதல் நண்பகல் 3.00 மணி வரை
குளிகை :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம் :
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் – தெற்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். நண்பர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் புதிய அனுபவம் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. ரகசிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் மீதான கருத்துக்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களின் மூலம் சேமிப்பு குறையும். அனுபவம் நிறைந்த நாள்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். சோர்வுகள் நிறைந்த நாள்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். கவனம் வேண்டிய நாள்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். முன்யோசனையுடன் செயல்பட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். கனவுகளால் சில குழப்பம் உண்டாகும். சட்ட ரீதியான பிரச்சனைகளில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விரும்பிய சில பொருட்களின் மூலம் அலைச்சல்களும், வருத்தங்களும் உண்டாகும். குளிர்ச்சி சார்ந்த உணவு பொருட்களை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பயனற்ற வாதங்களைத் தவிர்ப்பது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். ஒத்துழைப்பு நிறைந்த நாள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிராக செயல்பட்டவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். வரவு நிறைந்த நாள்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். நேரம் தவறிய உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. சமூகம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தொழிலாளர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். போட்டியில் இருந்துவந்த தடைகள் விலகும். திறமை வெளிப்படும் நாள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். இயந்திரம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வியில் சாதகமான வாய்ப்புகள் அமையும். இன்ப சுற்றுலா தொடர்பான முயற்சிகள் கைகூடும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வு நீங்கும். நுட்பமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கீர்த்தி நிறைந்த நாள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில புதிய அறிமுகம் கிடைக்கும். வாகன பயணங்கள் வெற்றிகரமாக அமையும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கணிதம் சார்ந்த தொழிலில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அஞ்ஞான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, கற்பனை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைபட்ட தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். பயணங்களின் மூலம் அலைச்சல்களும், விரயங்களும் ஏற்படும். மனதில் தோன்றும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். ஒற்றுமை மேம்படும் நாள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்