Rasi Palan Today Sept 05: கும்பம் புதிய முயற்சிகளை தள்ளிப் போடுங்க, மீனத்துக்கு அரசு ஆதாயம்- இன்றைய ராசிபலன்!
Rasi Palan Today, September 05: செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் வியாழக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 05, 2024:
அன்பார்ந்த abp நாடு வாசகர்களே இன்றைக்கு கன்னியில் சந்திரன் பயணித்துக் கொண்டிருக்கிறார் இந்த வேளையில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே தொழிலில் போட்டி ஏற்படலாம். அதன் மூலம் சிறு சிறு மன கஷ்டங்கள் வந்தாலும் கூட பெரிய அளவில் உங்களை பாதிக்காது தொழில் ரீதியாக சில சங்கடங்களை சந்தித்தால் கூட உயர் அதிகாரிகள் உங்களை எப்பொழுதும் பாராட்டத்தான் செய்வார்கள். வெற்றிகள் குவிக்க கூடிய நாள். நண்பர்களிடத்தில் பாராட்டை பெறுவீர்கள்.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏற்றமான நாள் செய்கின்ற வேலைகளில் கடினமாக முயற்சித்து வெற்றியை காண்பீர்கள். எடுக்கின்ற முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டு. குடும்பத்தோடு நேரம் செலவிடுவதற்கான காலகட்டம். திருமண பேச்சு வார்த்தைகள் நல்ல நிலைமையில் முடியும்.
மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு கடினமாக உழைக்கும் உங்களுக்கு சற்று ஓய்வு தேவைப்படலாம். உடல் சோர்வாக இருப்பதால் மனம் சோர்வடையலாம்.. சற்று உடல் ரீதியாக மன ரீதியாக ஓய்வெடுப்பது நல்லது. . ஏற்கனவே பல பிரச்சினைகளில் நீங்கள் சிக்கி இருக்கலாம் லக்னத்தில் கேது இருக்கிறார். சமுதாயத்தில் இருந்து கூட நீங்கள் ஒதுங்கி இருக்கலாம். கவலை வேண்டாம் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பட்டம் பதவி தேடி வரக்கூடிய நாள். மகிழ்ச்சிகரமான செய்தி காதுகளுக்கு வந்து சேரும். சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உங்களிடம் சண்டையிட்டவர்கள் சமாதானமாக வந்து பேசுவார்கள் இன்பமான நாள்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இனிமையான நாள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். அதிகப்படியான கடன் சுமை உள்ளது யாரிடம் ஆவது கேட்க வேண்டும் என்று ஏற்கனவே முயற்சி செய்தால் கூட இன்றைய தினத்தில் முயற்சிகளை மேற்கொள்ளும் போது உங்களிடம் கடன்கள் மற்றவர்கள் கொடுக்க வாய்ப்பு உண்டு. மருத்துவத்தின் மூலமாக உங்களுக்கு வந்திருக்கக்கூடிய நோய்கள் குணமாக ஏற்ற நாள் இது.
கன்னி ராசி
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் மற்றவர்கள் உங்களை உயர்வாக பேசுவார்கள் வேலையில் சிறப்பான நாளாக இருக்கும் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். நீண்ட நாட்களாக சந்திக்காத இந்த நண்பர்கள் கூட உங்களை சந்திப்பார்கள். மற்றவர்கள் உங்களை நினைக்கக் கூடிய நாள் இது.
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இலக்கை நோக்கி ஓடக்கூடிய நாள். உங்களைப் பற்றி பின்னால் பேசியவர்கள் நடுங்குவார்கள். காரியத்தில் கண்ணாக இருந்து வெற்றியடைய கூடிய நாள். இயல்பாக நீங்கள் பேசுகின்ற காரியங்கள் மற்றவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கலாம். குருவாக இருந்து செயல்படக்கூடிய நிலைமை வரலாம்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே இன்றைய நாள் பாசத்தோடும் பரிவோடும் இடத்தில் நடந்து கொள்ள ஏதுவான நாள். உங்களை வீட்டில் ஒருவர் போல மற்றவர் பாவிக்கும் நிலைமை வரலாம். உங்களைப் பற்றி தரை குறைவாக பேசினால் கூட உங்களுடைய திறமை மற்றவர்களுக்கு தெரிய வரும்.உங்களுடைய உடல்நிலை பற்றி சற்று கவனித்துக் கொள்ளுங்கள் ஓய்வறியாமல் உழைத்துக் கொண்டு இருக்கிறீர்கள் சற்று ஓய்வெடுங்கள். அமைதி காக்கும் நாள்.
தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு கடன்கள் அடையும் நாள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். புத்துணர்ச்சியாக செயல்படுவீர்கள். சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். மற்றவர்கள் உங்களைப் பற்றி புகழ்ந்து பேச வாய்ப்புண்டு. நீங்கள் செய்த சாதனைகளை மற்றவர்கள் நினைத்துப் பார்க்கவும் சந்தர்ப்பம் உண்டாகும்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே இன்றைய நாளில் நீங்கள் செய்கின்ற வேலைகளில் பாராட்டைப் பெறப் போகிறீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கும் நாள். செலவுகள் அதிகமாக இருந்தாலும் மனதிருப்தி இருக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும் நாளாக கூட இருக்கலாம். நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ள வாய்ப்பு வரும்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே சந்திராஷ்டமம் செல்வதால் எதிலும் கவனமாக இருங்கள் குறிப்பாக மற்றவர்களிடத்தில் கடுமையான சொற்களை பேசி நட்பாக கூட பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள் நீங்கள் சாதாரணமாக ஒரு வார்த்தை சொல்ல போக அது பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு உள்ளது. உங்களைப் பற்றி மற்றவர்கள் குறை கூறினால் ஒரு காதில் கேட்டு மறு காதில் விட்டு விடுங்கள். புதிய முயற்சிகளை தள்ளிப் போடுங்க.
மீன ராசி
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சந்திரன் பயணிப்பது நல்ல சௌகரியமான நேரத்தை கொடுக்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூட வாய்ப்புண்டு. பணரீதியான காரியங்களில் சற்று சிரமப்படலாம் ஆனால் வெற்றி கிடைக்கும். அரசு வழி ஆதாயம் உண்டு.