மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, Sept 30: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, September 30: செப்டம்பர் மாதம் 30ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 30, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு மேம்படும். தள்ளிப்போன சில வேலைகள் நிறைவேறும். புதிய பொருட்களின் சேர்க்கை ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷப ராசி
கடன் தொடர்பான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். வங்கி சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். கல்வியில் இருந்துவந்த தடுமாற்றம் மறையும். அரசு வழியில் சாதகமான செய்திகள் கிடைக்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். தனம் நிறைந்த நாள்.
மிதுன ராசி
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். பூர்வீக வீட்டை விரிவுபடுத்துவதற்கான முயற்சி மேம்படும். வெளியூர் பயணங்களால் அனுபவம் கிடைக்கும். குழந்தைகளால் மதிப்பு அதிகரிக்கும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். தேர்ச்சி நிறைந்த நாள்.
கடக ராசி
குடும்பப் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாக்குறுதி அளிப்பதை தவிர்ப்பது நல்லது. புதிய வீடு கட்டுவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
சிம்ம ராசி
மற்றவர்களை எதிர்பார்த்து முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வாகன பயணங்களின் போது விவேகம் வேண்டும். மறைமுகமான விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். ஓய்வு நிறைந்த நாள்.
கன்னி ராசி
பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்புகள் குறையும். உறவினர்களுக்கிடையே இருந்துவந்த சலசலப்புகள் குறையும். இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.
துலாம் ராசி
தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் ஏற்படும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை தேவைகளை மேம்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
தவறிய சில பொருட்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் நல்ல ஒரு மாற்றத்தை தரும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உண்மையானவர்களை புரிந்து கொள்வீர்கள். உணவு பழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பிற மொழி பேசும் மக்களின் உதவிகள் கிடைக்கும். மறதி விலகும் நாள்.
தனுசு ராசி
மனதளவில் தைரியம் பிறக்கும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரம் ரீதியான செயல்களில் அனுபவம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
மகர ராசி
மனதில் ஒருவிதமான கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். அரசு செயல்களில் இருந்துவந்த முரண்பாடுகள் மறையும். பணிபுரியும் இடத்தில் ஆர்வமின்மை ஏற்படும். நயமான பேச்சுக்களை நம்பி கருத்துகளை பகிர வேண்டாம். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
கும்ப ராசி
எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். புதிய கூட்டாளிகள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களின் உதவியால் சாதகமான வாய்ப்புகள் அமையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். சலனம் நிறைந்த நாள்.
மீன ராசி
சவாலான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆதாயம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் ஏற்படும். மின் சாதனப் பொருட்களில் கவனம் வேண்டும். எடுக்கும் முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பூர்வீக வீட்டை மாற்றி அமைப்பீர்கள். உயர்வு நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion