மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, Sept 28: மிதுனத்துக்கு முகப் பொலிவு அதிகரிக்கும்; கடகத்துக்கு பகை விலகும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, September 28: செப்டம்பர் மாதம் 28ஆம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 28, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
ஆரோக்கிய விஷயத்தில் கவனத்துடன் செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் பற்றிய தன்மைகளை அறிந்துகொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளும், தனவரவுகளும் கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
ரிஷப ராசி
மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். செயல்களில் இருந்துவந்த தடுமாற்றம் மறையும். தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பரிசு கிடைக்கும் நாள்.
மிதுன ராசி
தன வரவுகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். கடன் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முகப் பொலிவு அதிகரிக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கடக ராசி
பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பகை விலகும் நாள்.
சிம்ம ராசி
சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படுவது நல்லது. திடீர் வரவுகள் ஏற்படும். மனதை உருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். வெளியூர் பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பரிவு வேண்டிய நாள்.
கன்னி ராசி
எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பொதுக்காரியங்களில் மரியாதை அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பாராட்டு மேம்படும் நாள்.
துலாம் ராசி
அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவருடான கருத்து வேறுபாடுகள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். சபை தொடர்பான பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பிரீதி நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். வியாபார பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். நீண்ட தூர பயண வாய்ப்புகளில் இருந்துவந்த தாமதங்கள் மறையும். அரசு காரியங்களில் எதிர்பார்ப்புகள் காலதாமதமாகி நிறைவேறும். ஓய்வு கிடைக்கும் நாள்.
தனுசு ராசி
குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. எதிலும் நிதானத்துடன் செயல்படவும். திடீர் பயணங்கள் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஆணவமின்றி செயல்படவும். செய்தொழிலில் விவேகம் வேண்டும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். வரவு நிறைந்த நாள்.
மகர ராசி
மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.
கும்ப ராசி
வெளியூர் வேலை வாய்ப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். நிர்வாகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மற்றவர்களின் கருத்துகளால் உங்கள் இலக்குகளில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
மீன ராசி
ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். வாகன பழுதுகளால் விரயம் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். இனிமை நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion