மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, Sept 24: கும்பத்துக்கு மகிழ்ச்சியான நாள், மீனம் வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today, September 24: செப்டம்பர் மாதம் 24ஆம் நாள் செவ்வாய் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 24, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குறுகிய தூர பயணங்களால் மேன்மை ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.
ரிஷப ராசி
பொருளாதார ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு மேம்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பயணங்களின் மூலம் ஆதாயமும், லாபமும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.
மிதுன ராசி
தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு சிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்மறை சிந்தனைகள் வெளிப்படும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் செய்திகளால் செலவுகள் மேம்படும். மனதளவில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அன்பு நிறைந்த நாள்.
கடக ராசி
பிள்ளைகளால் மன வருத்தம் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். குலதெய்வம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நீண்ட நாள் புனித யாத்திரை பயணங்கள் கைகூடும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தன வரவுகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். போட்டி நிறைந்த நாள்.
சிம்ம ராசி
மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அமைதியும், நிம்மதியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கலகலப்பான சூழ்நிலை மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.
கன்னி ராசி
மன உறுதியுடன் பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரப் பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். நன்மை நிறைந்த நாள்.
துலாம் ராசி
எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நிதானத்துடன் செயல்படவும். பகை மறையும் நாள்.
விருச்சிக ராசி
இனம்புரியாத சிந்தனைகளால் மன உளைச்சல் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகளில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம். எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
தனுசு ராசி
தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் மேம்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிப்போன வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் நன்மை உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மகர ராசி
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தடைபட்ட பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன்பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான சூழல் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கான சிந்தனைகள் மேம்படும். பெருமை நிறைந்த நாள்.
கும்ப ராசி
வியாபாரத்தில் சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மை அடைவீர்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மீன ராசி
பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தந்தைவழி உறவினர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்ப்பு நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion