மேலும் அறிய
Advertisement
RasiPalan Today Oct 23: கும்பத்துக்கு குதூகலம்! மீனத்துக்கு சிறப்பு - உங்கள் ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today, October 23: அக்டோபர் மாதம் 23ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 23, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். திறமைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். ஓய்வு நிறைந்த நாள்.
ரிஷப ராசி
பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரப் பணிகளில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் துரிதம் ஏற்படும். கல்வியில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.
மிதுன ராசி
குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து நடந்து கொள்ளவும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களில் கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உழைப்பு நிறைந்த நாள்.
கடக ராசி
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். உற்சாகம் நிறைந்த நாள்.
சிம்ம ராசி
சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சிறு சிறு பிரச்சனைகளுக்கு முடிவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். காப்பீடு பணிகளில் ஆதாயம் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்ப்பு விலகும் நாள்.
கன்னி ராசி
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணம் சார்ந்த செயல்பாடுகள் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். செயல்பாடுகளில் கடமை உணர்வு அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றம் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். லாபம் நிறைந்த நாள்.
துலாம் ராசி
உத்தியோகப் பணிகளில் ஆதரவு ஏற்படும். தடைபட்ட பணிகள் நிறைவு பெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். நெருக்கமானவர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம்புரியாத கற்பனைகளால் சோர்வு உண்டாகும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மாணவர்களுக்கு மறதி பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்களால் விரயங்கள் ஏற்படும். வியாபாரம் நிமித்தமான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். செலவு நிறைந்த நாள்.
தனுசு ராசி
தள்ளிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சுப காரிய எண்ணங்கள் பலிதமாகும். திறமைகளை வெளிப்படுத்த சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனம் நிறைந்த நாள்.
மகர ராசி
நீண்ட நாட்களாக இருந்துவந்த பழைய பாக்கிகள் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கடன் பிரச்சனைகள் குறையும். செல்ல பிராணிகளிடம் கவனம் வேண்டும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
கும்ப ராசி
நிதானமான பேச்சுக்கள் மூலம் நன்மதிப்பு உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தம் நீங்கும். சுகம் நிறைந்த நாள்.
மீன ராசி
உறவுகளுடன் இருந்துவந்த வருத்தங்கள் குறையும். சிந்தனைத் திறன் விரிவடையும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உடல் அளவில் இருந்துவந்த சோர்வு குறையும். குழந்தைகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரப் பணிகளில் சுமூகமான சூழல் அமையும். உத்தியோகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion