மேலும் அறிய
Advertisement
Rasipalan Today Nov 8: ரிஷபத்துக்கு கணவன்-மனைவிக்கிடையே அன்பு! மேஷத்துக்கு செலவு - உங்கள் ராசிக்கு?
Rasi Palan Today, November 8: இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பது குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 8, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
எதிர்காலம் கருதி சில பணிகளை செய்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். தொழில் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வாகன வசதிகள் மேம்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். செலவு நிறைந்த நாள்.
ரிஷப ராசி
சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதில் நினைத்திருந்த சில காரியங்கள் நிறைவேறும். சூழ்நிலை அறிந்து விட்டுக்கொடுத்துச் செயல்படவும். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் திறமைகள் வெளிப்படும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். துணிவு நிறைந்த நாள்.
மிதுன ராசி
எண்ணிய சில பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். நண்பர்களுடன் சில நெருடல்கள் தோன்றி மறையும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடிக்கவும். விவேகம் வேண்டிய நாள்.
கடக ராசி
சிந்தனையில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.
சிம்ம ராசி
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி மூலம் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குழந்தைகளின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
கன்னி ராசி
மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலை பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வியாபார நிலுவை பணிகளை செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களால் சில மாற்றமான சூழல் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
துலாம் ராசி
எந்த விஷயத்திலும் நிதானமாக முடிவெடுக்கவும். கால்நடைகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத சில பிரச்சனைகள் தோன்றி மறையும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். ஆரோக்கியம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவலகப் பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.
விருச்சிக ராசி
உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பாக பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கைகூடும். கீர்த்தி நிறைந்த நாள்.
தனுசு ராசி
புதிய முயற்சிகளில் ஆலோசனை பெற்று மேற்கொள்ளவும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். உறவுகளுடன் பொறுமை வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மகர ராசி
சிந்தனைகளில் மாற்றங்கள் உண்டாகும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உடலின் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். நினைவாற்றலில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். சாந்தம் வேண்டிய நாள்.
கும்ப ராசி
சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பம் தோன்றும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். தவறிய சில பொருட்கள் பற்றிய தகவல் கிடைக்கும். உயர்கல்வி ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
மீன ராசி
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இலக்கை நோக்கிய சிந்தனைகள் மேம்படும். மனதில் அமைதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion