மேலும் அறிய
Advertisement
Rasipalan Today Nov 7: இன்று சூரசம்ஹாரம்! 12 ராசிக்கும் பலன்கள் என்னென்ன? இதோ முழு விவரம்!
Rasi Palan Today, November 7: சூரசம்ஹாரமான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 7, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் லாபகரமான சூழல் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். துணிவு வேண்டிய நாள்.
ரிஷப ராசி
புதிய துறை சார்ந்த தேடல்களும், கற்பதிலும் ஈடுபாடு உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். இறை வழிபாட்டிற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். நேர்மறை சிந்தனைகளுடன் எதிலும் செயல்படுவீர்கள். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.
மிதுன ராசி
சூழ்நிலைகளை அறிந்து அதற்கேற்ப செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பாகப் பிரிவினை செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். பழமையான சில விஷயங்களால் அமைதியின்மை உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.
கடக ராசி
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். விருப்பமான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
சிம்ம ராசி
உடனிருப்பவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். கடன் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். பயணங்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். அனுபவமிக்க வேலையாட்களை நியமிப்பீர்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகும். செயல்களில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். யோகம் நிறைந்த நாள்.
கன்னி ராசி
கலை சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் முக்கியத்துவம் கிடைக்கும். செலவுகளை குறைத்து சேமிப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். உங்களை சுற்றியிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உத்தியோகம் நிமித்தமான அலைச்சல் ஏற்படும். துன்பம் மறையும் நாள்.
துலாம் ராசி
செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வியாபார ரீதியான பயணங்கள் உண்டாகும். படிப்பில் கவனம் வேண்டும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உற்சாகம் நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் வேண்டும். தொழில்நுட்ப கருவிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். இழுபறியான ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
தனுசு ராசி
விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உங்கள் பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவு பெறும். சமூகப் பணிகளில் மாறுபட்ட சூழல் ஏற்படும். பேச்சுக்களுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.
மகர ராசி
சிந்தனைகளில் மாற்றங்கள் உண்டாகும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உடலின் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். நினைவாற்றலில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். சாந்தம் வேண்டிய நாள்.
கும்ப ராசி
சுற்றி இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் இனம்புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பம் தோன்றும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். தவறிய சில பொருட்கள் பற்றிய தகவல் கிடைக்கும். உயர்கல்வி ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.
மீன ராசி
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் எண்ணியவை நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். இலக்கை நோக்கிய சிந்தனைகள் மேம்படும். மனதில் அமைதியும், புத்துணர்ச்சியும் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion