மேலும் அறிய

Today Rasipalan March 27: விருச்சிகத்துக்கு புரிதல்! கும்பத்துக்கு சுகம் - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan: மார்ச் 27ஆம் தேதி புதன்கிழமை இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 27.03.2024 - புதன்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

ரிஷபம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். உத்தியோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டகரமான வாய்ப்பு ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். 

மிதுனம்

வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் புரிதல் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கவனத்தோடு செயல்படவும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். கவலை விலகும் நாள்.

கடகம்

குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். நவீன மின்னணு சாதனங்களின் மீது ஆர்வம் ஏற்படும். மறைமுக போட்டிகளை சமாளிப்பதற்கான மனப்பக்குவம் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள். 

சிம்மம்

குடும்பத்துடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான விஷயங்களில் பொறுமை வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுக தடைகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். செலவு நிறைந்த நாள். 

கன்னி

குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரத்தில் தடைபட்ட சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். உதவி செய்யும் நாள்.

துலாம்

மனதளவில் சிறு சிறு சஞ்சலங்கள் தோன்றி மறையும். பயணங்களின் போது விவேகம் வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள். 

விருச்சிகம்:

நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடு தொடர்பான முயற்சிகள் மேம்படும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளால் சோர்வுகள் ஏற்படும். சுபம் நிறைந்த நாள். 

தனுசு

உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நினைத்த பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள்.   நவீன அணுகுமுறையால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.உத்தியோகத்தில் புதிய பொறுப்பு கிடைக்கும். அனுபவ அறிவால் சில மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். மாற்றம் பிறக்கும் நாள்.

மகரம்

எதிலும் சூழ்நிலை அறிந்து செயல்படவும். பூர்வீக சொத்துக்களால் சில விரயங்கள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு மேம்படும். சவாலான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். நலம் நிறைந்த நாள். 

கும்பம்

முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தனித்திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஆன்மிகம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.

மீனம்

எதிலும் பதற்றமின்றி செயல்படவும். சில பணிகளில் சுயமாக முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் அதிக உரிமைகள் எடுப்பதை தவிர்க்கவும். பழைய நினைவுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget