மேலும் அறிய
Advertisement
Rasipalan December 06: துலாமுக்கு தாய்ப்பாசம்; கன்னிக்கு மகிழ்ச்சி: உங்க ராசி பலன்?
Rasi Palan Today, December 06: இன்று கார்த்திகை மாதம் 21ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 06, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். கடுமையான பணிகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான அவப்பெயர் குறையும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.
ரிஷப ராசி
நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உருவாக்கும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பாராட்டு நிறைந்த நாள்.
மிதுன ராசி
உடன் இருப்பவர்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எண்ணிய சில பணிகளில் தாமதம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படவும். கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தாமதம் நிறைந்த நாள்.
கடக ராசி
கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். கல்லூரி கால நண்பர்களின் தொடர்புகள் ஏற்படும். வியாபாரத்தில் அறிமுகம் உண்டாகும். உறவினர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கவலை விலகும் நாள்.
சிம்ம ராசி
நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். அரசு விஷயங்களில் பொறுமை காப்பது நல்லது. உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.
கன்னி ராசி
நுணுக்கமான சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்லூரி கால நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
துலாம் ராசி
எதிர்பார்த்த சில வேலைகள் நிறைவு பெறும். தாயிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நெருக்கடியான சூழல்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தொழில் நிமித்தமான பயணம் மேம்படும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சக ஊழியர்களால் நிம்மதி ஏற்படும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
விருச்சிக ராசி
உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். தந்தையின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். இழுபறியான செயல்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். செய்கின்ற முயற்சிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். ஆதரவு மேம்படும் நாள்.
தனுசு ராசி
செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புது விதமான உணவு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கலகலப்பான பேச்சுகள் மூலம் நட்பு வட்டம் மேம்படும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.
மகர ராசி
பழைய விஷயங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவுகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். கணவன், மனைவி இடையே அனுசரித்து செல்லவும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வழக்குகளில் இழுபறியான சூழல் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
கும்ப ராசி
தம்பதிகளுக்குள் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விவேகமான முடிவு நல்ல மாற்றத்தை கொடுக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
மீன ராசி
மனதில் எண்ணிய காரியம் நிறைவேறும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் சந்திப்புகள் மூலம் அனுகூலம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு ஏற்படும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். லாபம் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion