![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: Poll of Polls)
Rasi Palan Today, August 16: மீனத்துக்கு பாசம் நிறைந்த நாள், மேஷத்துக்கு இன்பம் : உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, August 16: ஆகஸ்ட் மாதம் 16ஆம் நாள் வெள்ளிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
![Rasi Palan Today, August 16: மீனத்துக்கு பாசம் நிறைந்த நாள், மேஷத்துக்கு இன்பம் : உங்கள் ராசிக்கான பலன்? Rasi palan today tamil 2024 August 16th daily horoscope12 zodiac signs astrology Rasi Palan Today, August 16: மீனத்துக்கு பாசம் நிறைந்த நாள், மேஷத்துக்கு இன்பம் : உங்கள் ராசிக்கான பலன்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/15/ab5b8df682af7760087f89efd5db15851723741012192572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 16, 2024:
மேஷம்
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணைவரிடம் அனுசரித்துச் செல்லவும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் உண்டாகும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். பூர்வீகம் சம்பந்தமான சுபவிரயங்கள் செய்வீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்
சோம்பேறித் தனத்தின் மூலம் செயல்பாடுகளில் கால தாமதங்கள் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். பயணத்தால் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கும். உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.
மிதுனம்
உடன்பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். பிரபலமானவர்களின் சந்திப்புகளால் மாற்றங்கள் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும், மதிப்பும் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
கடகம்
சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். சுப காரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோகப் பணிகளில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
சிம்மம்
முயற்சிக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றமான தருணங்கள் அமையும். கலைத்துறையில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். போட்டி நிறைந்த நாள்.
கன்னி
இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். மருத்துவம் தொடர்பான துறைகளில் ஆர்வம் ஏற்படும். அசதி மேம்படும் நாள்.
துலாம்
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை மூலம் ஆதாயம் உண்டாகும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சாந்தம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
தனவரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்கு சாதுரியம் மூலம் ஆதாயமடைவீர்கள். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். முயற்சி நிறைந்த நாள்.
தனுசு
புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படும். தாய்மாமன் வகையில் ஆதரவான சூழல் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வெளி வட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
மகரம்
இனம்புரியாத சிந்தனைகள் மற்றும் செயல்களில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழல் அமையும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பணிகளில் அலைச்சல் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
கும்பம்
பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்விப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பரிவு நிறைந்த நாள்.
மீனம்
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அரசு தொடர்பான பணிகள் சாதகமாக நிறைவேறும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். கெளரவ பொறுப்புகள் மூலம் செல்வாக்கு மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். பாசம் நிறைந்த நாள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)