Rasi Palan Today, August 12: சிம்மம் பாராட்டை பெறுவீர்கள், கன்னி அமைதி காக்கவும் : உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, August 12: ஆகஸ்ட் மாதம் 12ஆம் நாள் திங்கள் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
![Rasi Palan Today, August 12: சிம்மம் பாராட்டை பெறுவீர்கள், கன்னி அமைதி காக்கவும் : உங்கள் ராசிக்கான பலன்? Rasi palan today tamil 2024 August 12th daily horoscope12 zodiac signs astrology Rasi Palan Today, August 12: சிம்மம் பாராட்டை பெறுவீர்கள், கன்னி அமைதி காக்கவும் : உங்கள் ராசிக்கான பலன்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/11/05b14c433d143824adcbff49523b851e1723397386105572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 12, 2024:
அன்பார்ந்த abp நாடு வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இன்றைய தினத்தில் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு புகழ் கூடும் நாள். உங்களைப் பற்றி மற்றவர்கள் பேசும்படியாக உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். எதிரிகளை இனம் கண்டு பிடிப்பதில் சற்று கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும்.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பண வரவு உண்டாகும் நாள் நாள்பட்ட வியாதிக்கு மருந்து மூலம் குணமாகும் யோகம் உண்டு. உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். டிஜிட்டல் வழியில் ஆதாயம் உண்டு
மிதுன ராசி
நினைத்தது போல நாள் நன்றாகத் தான் செல்லும். குறிப்பாக மதியத்திற்கு மேல் சிரமம் இல்லாமல் காரியங்களை முடிக்கக்கூடும். குருமார்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சமுதாயத்தில் அந்தஸ்து உள்ளவர்களின் அறிமுகம் கிட்டும். தொந்தரவு இல்லாமல் நாள் நகரும்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே மாற்றங்களை புரிந்து கொள்ள நேரம் இது. தன வருவாய் பெருக்குவதற்கு என்ன வழி என்று யோசிப்பீர்கள் மற்றவர்களின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். நினைத்ததை எட்டி பிடிக்க சில மைல் தூரமே இருப்பதால் தயங்காமல் ஓடிக் கொண்டே இருங்கள்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே அடுத்தவர்களின் அன்பும் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு. குறிப்பாக நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதை சிறப்பாக முடிப்பீர்கள் அந்த வகையில் இன்றும் நல்லபடியாக மனதிருப்தியாய் வேலையை முடித்து மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள்.
கன்னி ராசி
எவ்வளவு பெரிய போராட்டம் இருந்தாலும் அதை சுலபமாக கையாளும் சக்தி உடையவர் நீங்கள். மற்றவர்களுக்கு எப்படி பெரிய பிரச்சனை இருந்து தப்பிக்க வேண்டும் என்று அறிவுரை கூறுவீர்கள். எந்த ஒரு பெரிய காரியத்தையும் போட்டு மனதில் குழப்பிக் கொள்ளாமல் சலனமே இல்லாமல் அமைதியாக இருப்பீர்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு வெற்றியின் நாளாக இன்று இருக்கப் போகிறது. பெரிய பிரச்சனைகளுக்கு நீங்கள் போய் நின்றாலே போதும் அந்த பிரச்சனை சரியாகிவிடும். கடினமான இலக்கையும் சுலபமாக இன்று எட்டி முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே இன்று தன வரவு தாராளமாக இருக்கும் வங்கியில் சேமிப்பு உயரும். வாரா கடன்கள் வந்து சேரலாம். கடன் கேட்டு வாங்கி போனவர்கள் வீடு தேடி வந்து கடன் திரும்ப கொடுத்து விட்டு செல்லலாம். வரவு மிகுந்த நாள்.
தனுசு ராசி
காலையிலிருந்து மனம் நிம்மதியாக செல்லும். பழைய நினைவுகளில் சற்று மூழ்கி இருப்பீர்கள். வாழ்க்கை பற்றிய ஆழமான சிந்தனை இருக்கும். கடந்து வந்து பாதையை பற்றி சுகமான நினைவுகளை அசைபோட ஏற்ற நாள் இது. மனதிற்கு இனிய சில சம்பவங்கள் நடைபெறும்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசிகர்களே உங்களுடைய ராசிக்கு. சரிபாதியான நாள் என்று சொல்ல வேண்டும் கோபத்தை கட்டுப்படுத்துவீர்கள். பெரிதாக யாரிடமும் சண்டை இட வேண்டாம். . உங்கள் பக்கம் தான் நியாயம் இருக்கும் இருந்தாலும் அதைப்பற்றி பெரிதாக வெளியில் சொல்ல வேண்டாம். நீங்கள் நல்லது சொல்லும் இடத்தில் மற்றவர்களுக்கு வேறு மாதிரி தோன்றலாம். பொறுமை காக்க வேண்டிய நாள்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே வரவுக்கு மீறின செலவு உண்டு அதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நீங்கள் நினைப்பது உண்மைதான். ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களின் செலவுகளை நீங்கள் எப்படி கட்டுப்படுத்த முடியும் வீட்டிற்காக சுபச் செலவுகள் சிலவற்றை மேற்கொள்ளலாம். நண்பர்களின் ஆதரவு பெருகும். . தன வரவும் உண்டு.
மீன ராசி
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் செல்வதால் ஏதேனும் கவனமாக இருக்க வேண்டும் மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடக்கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் கூட தேடி வந்து வம்பு இழுப்பார்கள் சிலர் கவலைப்பட வேண்டாம் அமைதியாக நாளை கடத்திச் சொல்லுங்கள் முக்கியமான நிகழ்ச்சிகளை தள்ளி போடுங்கள் வெற்றி உங்கள் பக்கம் உண்டு.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)