மேலும் அறிய
Advertisement
Rasi Palan Today, August 10: மேஷம் நினைத்ததை நடத்திக் காட்டுவீர், ரிஷபத்துக்கு வருவாய் நாள்: உங்கள் ராசிக்கான பலன்?
Rasi Palan Today, August 10: ஆகஸ்ட் மாதம் 10ஆம் நாள் சனிக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 10, 2024:
அன்பார்ந்த ABP NADU வாசகர்களே துலாம் ராசியில் சந்திரன் போய்க் கொண்டிருக்கும் இந்த வேளையில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...
மேஷ ராசி
மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நினைத்ததை நடத்திக் காட்டக்கூடிய சக்தி ஏற்படக்கூடிய நாள். குறிப்பாக சந்திரன் எழில் பயணிக்கும் போது இதுவரை யாரை புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைத்திருக்கிறீர்களோ அவர்களிடத்தில் பேசும்போது அவர்களைப் பற்றி புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும் அனைத்தும் உங்களுக்கு லாபகரமாக முடியப்போகிறது.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நன்மை திட்டக்கூடிய நாள் குறிப்பாக காலையிலிருந்து சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். புதிய காரியங்கள் தொடங்குவதற்கு நல்ல நாள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெற போகிறீர்கள். வேலையில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களுடன் கைகோர்ப்பார்கள். தன வருவாய் அதிகரிக்கும் நாள்.
மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஐந்தில் சந்திரன் போகிறது போட்டிகள் அதிகரிக்கும் இடம் மனை தொடர்பாக உங்களுக்கு சாதகமான பலன்கள் வரும் தடைப்பட்ட காரியங்கள் தாமதம் என்று நடக்கும். செய்தொழில் நன்மை ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சுக ஸ்தானத்தில் சந்திரன் பயணிக்கிறார் என்ன உணவு நீங்கள் உணர்கிறீர்களோ அதில் கவனமாக இருக்க வேண்டும். தன வருவாய் தாராளமாக இருக்கக்கூடிய நாள். சேமிப்பு உயர்வு. பழைய இதமான நினைவுகளை சற்று ஆசைப்படுவீர்கள். யாரிடமும் எந்த வாக்குறுதியும் கொடுக்க வேண்டாம்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே குரு பகவான் பத்திலிருந்து வேலை நிமித்தமாக சில மாறுதல்கள் செய்யலாமா என்று யோசனைகளை கொடுப்பார் ஆனால் இன்றைய தினத்தில் நீங்கள் புதிய வேலைக்கு அப்ளை செய்தால் அது உடனடியாக கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. கடினமான பாதி கடலை தாண்டி வந்துவிட்டீர்கள் என்று இருப்பது ஒரே மாதம் அதையும் தாண்டி விட்டால் பிறகு என்ன வெற்றிதான்.
கன்னி ராசி
, அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே தற்போது சந்திரன் விலகி துலாம் ராசிக்கு சென்று விட்டார் மனதில் பட்டதை வெளிப்படையாக பேச வைத்திருப்பார் அதன் மூலம் நன்மையும் ஏற்பட்டிருக்கும் தீமையும் மேற்பட்டிருக்கும் ஆனால் தற்போது நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையப் போகிறது எந்த பிரச்சனையும் இல்லாமல் நீங்கள் காரியங்களை முன்னெடுத்து செல்லலாம் சந்திரன் உங்களுக்கு சாதகமான வீடுகளில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழில் குரு இருந்து சாரகமான பலன்களையும் ஏற்றமான நல்ல காரியங்களையும் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஆனால் அவை பெற்றுக் கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும் புதிய புதிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டே இருங்கள் வெற்றி படிக்கட்டில் எளிதில் கால் வைத்து விடுவீர்கள்.
தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 11-ல் சந்திரன் நீண்டத்துறை பிரயாணங்களை மேற்கொள்ள நல்ல நேரம் வெளிநாட்டு சம்பந்தமான தொழிலுக்கோ அல்லது சுற்றுலாவுக்கோ காத்திருப்பார்களுக்கு ஏற்றமான நாள் தான் பாஸ்போர்ட் விசா போன்றவை உங்களுக்கு சாதகமாக முடிய வாய்ப்பு உண்டு. தொழில் போட்டி காரணமாக யாரையும் பகைக்க வேண்டாம். . எளிதில் வேலை கிடைக்கும்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பதற்றம் குறைந்து சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நாள் தான். தைரியமாக இருப்பீர்கள் வேலையில் சற்று சோர்வு ஏற்படலாம் ஆனால் கலங்க வேண்டாம். எதிர்காலம் பிரமாதமாக இருக்கிறது. ஐந்து லிருக்க கூடிய குரு பகவான் உங்களுக்கு தாய் வழி உறவினர்கள் மூலம் நல்ல அணுகலங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார். நல்ல காலம் தான் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே அறிவு பூர்வமாக செயல்பட வேண்டிய நாள். மற்றவர்களை குறைத்து எடை போட வேண்டாம். நீங்கள் செய்ய வேண்டிய காரியங்களை உங்களுக்கு முன்பாகவே அடுத்தவர்கள் செய்ய முயற்சிப்பார்கள் ஆனால் இறுதியில் வெற்றி உங்களுக்கு தான். ஆறாம் அதிபதி சந்திரன் அஷ்டமத்தில் இருந்து தற்போது விளக்குகிறார் அப்படி என்றால் சந்திராஷ்டமும் விளங்குகிறது. சுறுசுறுப்புடன் இருங்கள் வெற்றியின் உச்சிக்கு செல்லுங்கள்.
மீன ராசி
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறது மற்றவர்களின் பகையை நீங்கள் சம்பாதிக்க கூடும். சாதாரணமாக ஒரு காரியத்தை சொல்ல போய் அது மற்றவர்களுக்கு பெரிதாக கூட தெரியலாம். சற்று அமைதி காப்பது நல்லது. புதிய காரியத்தை மேற்கொள்ள வேண்டாம். யாருக்கும் வாக்குறுதி அளிக்க வேண்டாம். புதிய முயற்சிகளை இரண்டு நாளுக்கு தள்ளிப் போடுங்கள்...
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion