Rasi Palan Today, August 7: மிதுனத்துக்கு வெற்றிதான், கடகத்துக்கு கவலை இருக்கும்: உங்கள் ராசிக்கு என்ன பலன் ?
Rasi Palan Today, August 7: ஆகஸ்ட் மாதம் ஆறாம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 7, 2024
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய தினத்தில் சந்திரன் உத்தர நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார், இந்த நாளில் உங்கள் ராசிக்கு பலன் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் நட்சத்திரத்தில் சந்திரன் பயணித்துக் கொண்டிருக்கிறார் ஐந்தாம் அதிபதி நட்சத்திரத்தில் பயணிக்கும் போது எண்ணங்கள் ஈடேறும். . போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்காலம் குறித்த பயம் இருக்கலாம். வெற்றியுடன் செயல்படக்கூடிய நாள்.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு எதிலும் வெற்றி கிடைக்கக்கூடிய நாள் புதிதாக வாகனம் வாங்கக் கூடிய வாய்ப்பு உண்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெறலாம் இடம் நிலம் தொடர்பாக அவை சாதகமாக முடியும். உண்ணும் உணவில் சிறிதளவு கவனம் தேவை. தேவையில்லாத உணவு பழக்கம் வயிற்று சிக்கல்களை கொண்டு வரலாம். உத்வேகமான நாள்.
மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிப்பது வெற்றியை குறிக்கும் , ஆனால் செலவும் இருக்கும் உங்களை நம்பி புதிய பொறுப்புகள் தேடி வரும். பிரிந்த நண்பர்கள் ஒன்று கூறுவீர்கள்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமாக அமையும் குறிப்பாக ஒரு ரூபாய் முதலீடு போட்டால் மூன்று ரூபாய் எடுக்கும் அளவிற்கு லாபம் இருக்கலாம் குறைந்த செலவில் அதிகமான பழத்தை ஈட்டுவது எப்படி என்று சிந்தனைகள் தோன்றும் அடுத்தவர்களுக்கு உதவும் மனப்பான்மை உண்டாகும். எதிர்காலம் குறித்தான கவலை இருக்கும்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்மராசி வாசகர்களே மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது மிக முக்கியம் ஏற்கனவே செய்த நல்ல காரியங்களில் துவக்கம் உங்களுக்கு தற்போது உண்டு நண்பர்கள் மூலம் ஆதாயம் உண்டு. வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.
கன்னி ராசி
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே தடங்களை தாண்டி முன்னேறக்கூடிய நாள் உங்களுக்கு முன்பாக பல தடைகள் வரலாம் ஆனால் அவற்றையெல்லாம் கடந்து நீங்கள் பெரிய வெற்றியை பெற போகிறீர்கள் சிறிதளவு எதிரிகள் தொல்லை இருந்தாலும் அவை பெரியதாக உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே மகிழ்ச்சிகரமாக செல்லக்கூடிய நாள். நீண்ட நாள் நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள். லாப ஸ்தானத்தில் சந்திரன் செல்வதால் எதிர்காலம் குறித்தான பயம் இருக்கலாம். அடுத்தது என்ன செய்யலாம் என்ற சிந்தனை இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே சில காரியங்கள் உங்களுக்கு வெற்றியாக அமையலாம் சில காரியங்கள் தோல்வியில் முடியலாம் ஆனால் அதைப் பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்படாமல் வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல முற்படுவீர்கள். அடுத்தவருக்கு ஆலோசனை வழங்குவதில் வல்லவர் நீங்கள். மற்றவர்களுக்கு நீங்கள் கூறக்கூடிய கருத்துக்கள் மூலமாக அவர்கள் வாழ்க்கையே மாறக்கூடும். உங்களுக்காக சிந்திக்காமல் அடுத்தவர்களுக்காக சிந்திப்பீர்கள்.
தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சற்று நிம்மதியான நாள் ஏற்கனவே சந்திராஷ்டமத்தில் இருந்து விடுபட்டு தற்போது மேலே வந்து கொண்டிருக்கும் உங்களுக்கு சில அழுத்தங்கள் உயர் அதிகாரிகள் மூலமாக வரலாம் ஆனால் அவற்றைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் முன்னோக்கி செல்வீர்கள்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே வீட்டிற்கு செல்வம் வரக்கூடிய நாள். தெரிந்தவர் மூலமாக பண வரவு ஏற்படலாம். வங்கியில் சேமிப்பு கணக்கு உயரலாம் எதிர்பார்த்த லாபம் வியாபாரத்தில் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இன்றையதனத்தில் மற்றவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது சந்திராஷ்டமத்தில் ஆரம்பத்தில் இருப்பதால் பெரிய அழுத்தங்கள் உங்களுக்கு தோன்றலாம் மற்றவர்கள் உங்களைப் பற்றி தவறாக நினைக்கிறார்கள் என்று என்ன வைக்கலாம் ஆனால் யாரிடமும் எந்த வம்புக்கும் போக வேண்டாம் அமைதியாக இருங்கள் பொறுமையே பெருமை என்று இருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு
மீன ராசி
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே அதிகப்படியான வேலையினால் சற்று திக்கு முக்காட வேண்டி வரலாம் உங்களுடைய யோசனைகளுக்கு அடுத்தவர்கள் மரியாதை கொடுப்பார்கள் சில நேரங்களில் அசதி மேலோங்கும் கவலை வேண்டாம் கடினமாக உழைக்கும் அதே சமயத்தில் சிறிது ஓய்வெடுக்க தானே வேண்டும் அப்படியாக நன்றாக ஓய்வெடுத்து அடுத்த இலக்கை நோக்கி ஓடுங்கள்