Rasipalan Today Feb 15: ரிஷபத்திற்கும் துலாமிற்கும் மரியாதை.. இதோ இன்றைய 12 ராசிக்கான பலன்கள்..!
Rasipalan Today: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
பிப்ரவரி 14 - புதன் கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு:
நண்பகல் 12.00 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எழுத்து சார்ந்த பணிகளில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது மேன்மையை ஏற்படுத்தும். கடன் தொடர்பான பிரச்சனைகளின் மூலம் மனவருத்தங்கள் நேரிடலாம். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
ரிஷபம்
குழந்தைகளின் மூலம் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
மிதுனம்
வியாபாரம் தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தேக்க நிலைகள் குறையும். உத்தியோகம் சார்ந்த நுணுக்கமான விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் சற்று குறையும். உறவினர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
கடகம்
கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். நண்பர்களின் வருகையால் புத்துணர்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள்.
சிம்மம்
விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவு கிடைக்கும். உறவினர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
புதிய வியாபாரம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். மக்கள் தொடர்புத் துறைகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். எழுத்துக்களில் கற்பனை நயம் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
வியாபாரப் பணிகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்புகளின் மூலம் ஆதாயம் மேம்படும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.
விருச்சிகம்
அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படவும்.
தனுசு
புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தடைபட்டு வந்த தனவரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். போட்டி தேர்வுகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை ஏற்படும். வியாபார ரீதியான பணிகளில் லாபம் உண்டாகும்.
மகரம்
வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள். இழுபறியான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும்.
கும்பம்
பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். நீண்ட நாள் நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும்.
மீனம்
கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். இணையம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும்.