Rasi Palan Today: பணி உயர்வுக்கு தயாரா? இந்த ராசிகளுக்கு இன்று ஜாக்பாட்... இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today Rasi Palan | இன்றைய ராசிபலன் 1 பிப்ரவரி 2022: இன்றைய நல்ல நேரம் முதல், எந்த ராசிக்கு நல்லா இருக்கும் என்பதை துல்லியமாக தொகுத்து வழங்குகிறோம்!
நல்ல நேரம்:
காலை- 7:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை
கெளரி நல்ல நேரம்
இரவு - 7:30 மணி முதல் 8:30 மணி வரை
பகல்- 3 மணி முதல் 4:30 மணி வரை
குளிகை:
பகல் 12 மணி முதல் 1:30 மணி வரை
எம கண்டம்:
காலை 9 மணி முதல் 10:30 மணி வரை
சூலம், பரிகாரம்:
வடக்கு , பால்
சந்திராஷ்டமம்:
மிருகசீரிஷம் , திருவாதிரை
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
உற்சாகம் இன்று கரைபுரண்டு ஓடும். நீண்ட நாட்களாக நிலவி வந்த வழக்கு பிரச்சனைகள் சுமூகமாக தீரலாம். இருப்பிடத்தை மாற்றும் எண்ணங்கள் வரலாம். தூரத்து உறவுகள் உங்களை மகிழ்விப்பார்கள். அரசு சார்ந்த பணிகளில் இருப்போர், சிறிய சிரமங்களை சந்திப்பீர்.
ரிஷபம்:
உங்கள் அன்றாட பணியில் சிறிய மாற்றங்களை செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் வழியில் நன்மைகள் நடக்கலாம். இசைத்துறையில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட குழப்பங்களுக்கு விடிவு பிறக்கும்.
மிதுனம்:
மாற்றத்தை தரும் எதிர்பாராத உதவிகள் உங்களை வந்தடையும் நாள். கடந்த சில நாட்களாக நிலவி வந்த பண நெருக்கடி குறையும். வாழ்க்கை துணையுடன் வீண் வம்பு, சண்டைகளை குறைத்து ஒத்துப் போவது நல்லது. வியாபாரம் சார்ந்த தொழிலில் ஈடுபடுவோர் கொஞ்சம் நிதானமாக செயல்படவும்.
கடகம்:
இன்று உங்கள் பார்ட்னர் உதவியோடு உற்சாகமாக பணியாற்றுவீர்கள். மனதில் புதிய சிந்தனைகள் தோன்றலாம். சொத்து விவகாரங்களில் இழுத்தடிக்கப்பட்ட வழக்குகளில் சாதகமான முடிவுகள் வரலாம். உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் திடீர் சந்திப்பு நடைபெறலாம்.
சிம்மம்:
தேடி அலைந்த வேலைக்கு நல்ல பலன் கிடைக்கலாம். பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஆலோசனைகள் உங்களுக்கு பெரிய அளவில் உதவும். அதே நேரத்தில் திடீர் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணங்கள் நல்ல அனுகூலத்தை தரும்.
கன்னி:
முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் மேலோங்கும். உங்களின் செயல்பாடுகள் பிறரிடம் இருந்து ஆதரவை பெற உதவும். வியாபாரம், தொழிலில் நிலவி வந்த அனைத்து தடைகளும் விலகும். கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு எண்ணியது நடக்கும்.
துலாம்:
அரசியல் உள்ளிட்ட சமூகப் பணியில் இருப்போருக்கு, உரிய அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலை துறை சார்ந்தவர்களின் எண்ணங்களுக்கு பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் உண்டாகும்.
விருச்சிகம்:
பத்திரிக்கை துறை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். நகைகள் மீது ஆர்வம் ஏற்படும். மறைமுக எதிர்பார்ப்பாளர்களை அடையாளம் கண்டு கொள்ள வாய்ப்பு உள்ளது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் ஏற்படும்.
தனுசு:
நல்ல விருந்து உபசரிப்பில் பங்கேற்பீர்கள், திடீர் செலவுகள் மூலம் நெருக்கடிகள் ஏற்படலாம். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புள்ளது. அரசுத்துறை சார்ந்தோர், நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்பத்தில் சில கருத்து வேறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம்:
தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கணவன் அல்லது மனைவி உடன் வெளியூர் பயணம் புறப்பட வாய்ப்புள்ளது. பணியில் அதிக கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வாய்ப்புண்டு ஆசை அதிகரிக்கும்.
கும்பம்:
தொழில் தொடர்பான வெளியூர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிக மறதி ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் தொழில் பாதிப்புகள் ஏற்படலாம். வீண் குழப்பங்கள் மனதில் தோன்றலாம். அதனால் சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.
மீனம்:
விவசாய பிரச்னைகள் முடிவுக்கு வரும். சுபகாரியங்களில் தலைமையேற்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். புதிய இலக்குகள் தோன்றி, அதை செயல்படுத்தும் பணிகளில் இறங்குவீர்கள். நன்மையான இன்றைய நாளில், ஆராய்ச்சி தொடர்பான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்