மேலும் அறிய

New Year Rasi Palan 2024 Viruchigam: விருச்சிக ராசிக்காரர்களே! புத்தாண்டு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றப்போகுது?

New Year Rasi Palan 2024 Viruchigam: 2024 ஆம் ஆண்டு  விருச்சக ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

 2024 - விருச்சிக ராசி வருட பலன்:

 அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே,  

2023 கடைசி 3 மாதங்கள் உங்களுக்கு நல்ல மாதங்களாகவே அமைந்திருக்கும்.  ஓரளவுக்கு சமாளிக்க கூடிய மாதங்களாகவும் புத்துணர்ச்சி, தெளிவு, எதையும் சாதிக்கக் கூடிய மனப்பான்மை போன்ற  நல்ல நிகழ்வுகள் நடந்திருக்க வாய்ப்புண்டு.  2024 ஆம் ஆண்டு  விருச்சக ராசிக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.  உங்களுக்கான பலன்களை இரண்டாகப்  பிரிக்கிறேன். வருடத்தின் முதல் மூன்று மாதங்கள்  ஒரு பலனாகவும்  எஞ்சிய ஒன்பது மாதங்கள்  சற்று வித்தியாசமான பலனாகவும் இருக்கக்கூடும். 

வருடத்தின் முதல் 3 மாதங்கள் :

வருடத்தின் முதல் மூன்று மாதத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பிரவேசிக்கிறார் என்றால், கடன் நோய் எதிரி உங்களுடைய நோய்கள்  தீர போகிறது. கடன்கள் குறையப்போகிறது. மலையளவு கடன் இருக்கிறதே, இவ்வளவு பெரிய கடனை நான் எப்படி அடைக்கப் போகிறேன் என்று தவித்துக் கொண்டிருந்த உங்களுக்கு, நல் வாய்ப்பாக ஆறாம் பாவத்தில் கூறும் அமர்ந்து உங்களுடைய ராசிக்கு  இரண்டு மற்றும் ஐந்தாம் அதிபதி ஆறாம் வீட்டில் செல்வதால்  வேறு இடத்தில் கடன் வாங்கி, மற்றொரு கடனை சுலபமாக அடைப்பீர்கள்.  

தீராத நாள்பட்ட நோய்களால் அவதி, நோய்களால் கண்டம்,  போன்றவற்றால்  பயந்து பயந்து தினமும் வாழ்க்கை எப்படி நடத்துவது என்றே தெரியாமல் திளைத்திருந்தீர்கள் அல்லவா?  இதோ ஆறாம் இடத்தில் குரு பகவான் வந்து உங்கள் நோய்களை தீர்க்கப் போகிறார். தீர்வு காண வழியை காண்பிக்கப் போகிறார். அறுவை சிகிச்சை மருத்துவமனையில் கொடுக்கப்படும் மருந்துகள் மூலம் உங்கள்  உங்கள் உடம்பில் ஏற்படக்கூடிய எல்லா விதமான நோய்களுக்கு மருந்தாக அமையப்போகிறது.  

எதிரிகள் அடங்குவார்கள். ஆறாம் இடத்தில் குரு பகவான் இருக்கும் பொழுது எவ்வளவு பெரிய எதிரியாக இருந்தாலும் அதை சமாளிக்க கூடிய சக்தி உங்களுக்கு உண்டாகும். குறிப்பாக  இதுவரை உங்களுக்கு எதிரியே இல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் குரு ஆறாம் இடத்திற்கு வரும்போது நிச்சயமாக எதிரிகள் எழும்புவார்கள். உங்களை அடக்கம் முயற்சி செய்வார்கள் ஆனால் உங்களிடத்தில் இருக்கும் தன்னம்பிக்கை தைரியம் கொண்டு ஆறாம் இடத்தின் குரு பகவானின் வலிமையால் அந்த எதிரிகளை அடக்க போகிறீர்கள்.

தொழிலில் முன்னேற்றம் : 

சரியான தொழில் அமையவில்லையே என்று ஏங்கி இருக்கும் உங்களுக்கு ஒரு அருமையான காலகட்டம்.  தொழிலில் மிகப்பெரிய லாபத்தை அடையப் போகிறீர்கள். சொந்தமாக தொழில் வைத்திருப்போர் அல்லது வேறு ஒரு நபரிடம் வேலை செய்வோர், நிறுவனத்தில் வேலை செய்வோர், அயல்நாட்டில் வேலை செய்வோர், என்று யாராக நீங்கள் இருந்தாலும் நிச்சயமாக  உங்களுக்கு தொழில் மேன்மை ஏற்படப்போகிறது.

தொழிலில் நல்ல பெயர், பிரமோஷன்,  சக ஊழியர்களால் மதிக்கப்படுதல், உயர் அதிகாரிகளின் பாராட்டு போன்ற நல்ல விஷயங்கள் உங்களை தேடி வர போகிறது.  நீண்ட நாட்களாக வேலையில்லாமல் வேலைக்காக காத்திருந்து ஒரு நிச்சயமாக ஒரு அருமையான வேலையில் சென்று அமரப் போகிறீர்கள்.  சனிக்கு பகவான் உங்கள் வீட்டிற்கு நாலாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் நிச்சயமாக வண்டி வாகன பிரார்த்தம் உங்களுக்கு உண்டு.

 ஐந்தில் ராகு 11-ல் கேது :

 விருச்சிக ராசிக்கு ஐந்தாம் இடத்தில் ராகு. இருக்கும் இடத்தை விட்டு வேறு ஒரு இடத்திற்கு உங்களை நகர்த்தி செல்வார். குறிப்பாக லாபம் மேன்மைக்காக.  உதாரணத்திற்கு இருக்கும் நிறுவனத்தில் சரியான சம்பளம் போதவில்லை என்று நீங்கள் வேறு ஒரு நிறுவனத்திற்கு மாற  போகிறீர்கள். அது நீங்கள் பிறந்த ஊரை விட்டோ இடத்தை விட்டு உங்களை நகர்த்தி வேறு ஒரு இடத்திற்கு அண்டை மாவட்டம், மாநிலம், அயல்நாடு என்று உங்களை வேறு இடத்திற்கு கூட்டி செல்ல போகிறது. பதினொன்றாம் இடத்தில் கேது.  தெய்வ வழிபாட்டின் மூலமாக பதினொன்றாம் இடத்தில் இருக்கும் கேதுவே நீங்கள் சமாதானப்படுத்த முடியும்.
 
மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை :

 விருச்சிக ராசி அன்பர்களே உங்களுக்கான பொற்காலம் ஆரம்பமாகிவிட்டது. மே மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து உங்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை பொற்காலம் பொற்காலம் பொற்காலம்.  இவ்வளவு ஆணித்தனமாக அடித்து கூறுவதற்கு காரணம் குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாம் அதிபதி மற்றும் ஐந்தாம் அதிபதியாகி ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதால் குடும்ப மேன்மை எதிலும் வெற்றி தாமதமான திருமணம் விரைவில் நடக்கப் போகிறது.

 திருமணத்திற்காக காத்திருந்த  விருச்சிக ராசி அன்பர்களே உங்களுடைய திருமணம் கைகூடி வரப்போகிறது. ஜாதகங்கள் சரியாக அமையவில்லை,  இரு வீட்டாரின் சம்மதம் சரியாக கிடைக்கவில்லை ,  மணமகனோ மணமகளோ  நான் எதிர்பார்த்தபடி இல்லை என்று ஏதோ ஒரு காரணங்களுக்காக உங்களுடைய திருமணம் தள்ளிப்போனதல்லவா?

தற்போது அந்த நிலை மாறி விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமண யோகம் வந்துவிட்டது. நீங்கள்  குடும்பத்துடன் குதூகளிக்க போகிறீர்கள்.  வீட்டில் சுப காரிய நிகழ்வு நடக்கப் போகிறது.  வீடு மனை வாகன யோகம்  உங்களுக்கு உருவாகப் போகிறது.  பகைவர்கள் நண்பர்கள் ஆவார்கள் உங்களை  தள்ளி வைத்தவர்கள் தேடி வந்து பேசுவார்கள்.  

 சொல்வாக்கு, செல்வாக்கு உயரும் நேரம் : 

 நீங்கள் இருக்கும் இடத்திற்கு உங்களுடைய நண்பர்கள் தேடி வர போகிறார்கள் சுப காரிய அபி விசேஷங்களை முன் நின்று நடத்தப் போகிறீர்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ குடும்பத்தில் அதை அப்படியே கேட்க போகிறார்கள் .  உங்களுடைய எண்ணங்கள் ஈடேற போகிறது.  மற்றவர்களின் மரியாதை உங்களுக்கு கிடைக்கப் போகிறது.  பண விஷயத்தில்  மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்திருப்பீர்கள் கையில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்க  தங்கவில்லை என்ன செய்வது என்று மிகுந்த யோசனையில் இருந்தீர்கள் அல்லவா ?  தற்போது உங்களுக்கான நேரம்  மே மாதம் முதல் அடுத்த 2025 மே மாதம் வரை உங்களுடைய வங்கி கணக்கில் சேமிப்பு உயரும்.  கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.  சிரிப்பான வாழ்க்கையை வாழப் போகிறீர்கள்.

 அதிர்ஷ்டமான நிறம்:  சிவப்பு 

 அதிர்ஷ்டமான எண்: 8, 9

 வணங்க வேண்டிய தெய்வம்:  சுப்பிரமணிய சுவாமி

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Weather: ஜனவரியில் புயல்? உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி - கனமழை எங்கெல்லாம்? தமிழக வானிலை அறிக்கை
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
TN Cabinet: சம்பள உயர்வு, கவர்ச்சி திட்டங்கள்? இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் - சி.எம்., ஸ்டாலின் முடிவு என்ன?
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
Jana Nayagan Censor: சென்சார் ஓவர்..! என்ன சான்று? விஜயின் கடைசி திரைப்படம் எவ்வளவு நேரம் ஓடும்? - ரிப்போர்ட்
DMK vs Congress: காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
காங்கிரசை கழட்டி விட தயாராகும் திமுக.? ஸ்டாலின் போட்ட செம பிளான்- திடீர் ட்விஸ்ட்
CM Stalin Speech: “நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
“நீங்களும் ஜெயித்து வாருங்கள்.. நாங்களும் ஜெயித்து வருகிறோம்“ மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி முதல்வர் பேச்சு
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "இந்த மடிக்கணினி உங்கள் வாழ்க்கையின் கேம் சேஞ்சர்.." உத்வேகம் தந்த உதயநிதி ஸ்டாலின்
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயம்: சிபிஐ விசாரணை! அதிர்ச்சி தரும் திருப்பம், உண்மை என்ன?
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "பேப்பர், பேனா இருந்தாலே தமிழ்நாடு மாணவர்கள் சாதிப்பார்கள்.." புகழாரம் சூட்டிய உதயநிதி
Embed widget