மேலும் அறிய

Mithunam Rasi Puthandu Palan: மிதுன ராசிக்காரர்களே! உங்களுக்கு 2024 எப்படி அமையப்போகுது தெரியுமா? இதோ பலன்கள்

New Year Rasi Palan 2024 Mithunam: புத்தாண்டான 2024ம் ஆண்டு மிதுன ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே, 

கடந்த  2023 ஆம் ஆண்டு  ஏற்ற இறக்கமான பலன்களை சந்தித்து இருப்பீர்கள்.  வாழ்க்கையில் ஜான் ஏறினால் முழம் சறுக்குகிறது என்று கவலைப்பட்டு இருப்பீர்கள்.  ஒரு சிலருக்கு நல்ல  உயரத்தை தொடுவதற்கான வாய்ப்புகள் அமைந்திருக்கும். ஆனால், நீங்கள் உயரத்தை தொட்டு இருப்பீர்களா? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  2024 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். 

வருடத்தின் முதல் 3 மாதங்கள்:

2024 ஆம் ஆண்டுக்கான ராசிபலனை இரண்டாகப் பிரிக்கிறேன். வருடத்தின் முதல் மூன்று மாதங்கள் ஒரு பலனாகவும், எஞ்சிய ஒன்பது மாதங்கள் வேறு சில பலனாகவும் அமையும்.  மே மாதம் ஒன்றாம் தேதி வரை உங்களுக்கு பொன்னான  காலகட்டம். பாக்கியஸ்தானத்தில் ஏற்கனவே சனி அமர்ந்து  உங்களுக்கு தேவையான பலன்களை வாரி வழங்கப் போகிறார். 

பாக்யாதிபதி  பாக்கிய ஸ்தானத்திலேயே அமர்வதால் நிச்சயமாக நிதானமான  வெற்றியை நீங்கள் பெற போகிறீர்கள்.  ஒன்பதாம் இடத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் எடுத்த உடனேயே வெற்றி தருவார் என்று எதிர்பார்க்க முடியாது ஆனால் நிதானமான வெற்றியை நிச்சயமாக தருவார் என்று எதிர்பார்க்கலாம். 

11- ஆம்  இடத்தில் குரு பகவான் : 

ஏழாம் அதிபதி, பத்தாம் அதிபதி குரு பகவானாய் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வதால், எடுத்த காரியங்களில் வெற்றி, எல்லாவற்றிலும் ஜெயம், நீங்கள் நினைத்ததற்கு மேலாக பணவரவு, உங்கள் எண்ணம்  ஈடேறுதல்  போன்ற பிரம்மாண்டமான வெற்றிகளை பெற போகிறீர்கள்.  வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் குறிப்பாக கிருத்திகை நட்சத்திரத்தில்  குரு பகவான் பயணம் செய்யும்போது உங்கள் ராசிக்கு மூன்றாம் அதிபதியான சூரியன்  உங்களுக்கு ஜெயத்தை கொடுக்கக் கூடியவராக இருப்பார். 

அப்படி என்றால் ஏழிற்கும் பத்திற்கும் அதிபதியான குரு உங்களுக்கு ஜெயத்தை கொடுக்கக்கூடிய நட்சத்திரத்தில் பயணம் செய்வதால் எதிலும் வெற்றி. பார்ட்னர்ஷிப் வகையில் முன்னேற்றம்.  தொழிலில் நீங்கள் எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் ஜெயமாக முடிக்க போகிறீர்கள். குறிப்பாக தொலைத்தொடர்பு, கம்யூனிகேஷன், தொலைக்காட்சி செய்திகளைக் கொண்டு செல்லுதல்,  இன்பர்மேஷன் டெக்னாலஜி,  டிஜிட்டல் சம்பந்தப்பட்ட விஷயங்கள்  யூடியூப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், போன்ற வலைத்தளம் சம்பந்தப்பட்ட அனைத்தும் உங்களுக்கு ஜெயமாக முடியும்.  எடுத்துக்காட்டு நீங்கள் ஒரு கம்பெனி வைத்து நடத்துகிறீர்கள் அந்த கம்பெனியில் சோப்பு  தயாரிக்கிறீர்கள் என்றால், அதை விளம்பரம் செய்வதற்கு சமூக வலைதளத்தை பயன்படுத்தினால், நிச்சயமாக உங்கள் பொருள் மக்களிடம் சென்று சேரும். இப்படியான வருடத்தின் முதல் மூன்று மாதம் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கக்கூடிய மாதமாக அமையப்போகிறது.

2024 மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை :

வருடத்தில் இரண்டாம் பாதியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் நுழைகிறார்.  அதேபோன்று பாக்யாதிபதியான  சனியின் பார்வையில் இருந்தும் விலகுகிறார்.  ராகுவும் உங்களுக்கு பத்தாம் இடத்தில் கேதுவும் உங்களுக்கு நான்காம் இடத்தில்.  இப்படியான சூழலில் உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்றால்  ஏற்கனவே பத்தாம் இடத்தில் ராகு  பத்தாம் இடத்திற்கு அதிபதியான குரு பகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் வருவதால் நிச்சயமாக அலைச்சல் மிகுந்திருக்கும் . எடுத்த காரியங்கள் சற்று தாமதமாக முடியும்.  எந்த காரியத்தில் முதலீடு செய்வதற்கு ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. 

ஏற்கனவே உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் கேதுவும் 11ஆம் இடத்தில் ராகுவும் இருந்து உங்களுடைய லாபத்தை தடுத்து வாழ்க்கையில்  மேடு பள்ளங்களை உங்களுக்கு எடுத்து காண்பித்து இருப்பார்.  இந்த முறை 2024 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்கள் ஜாக்பாட் மாதங்களாகவும் எஞ்சிய 9 மாதங்கள் சற்று நிதானமான மாதங்களாகவுமே உங்களுக்கு அமையவிருக்கிறது.  இதுபோன்ற கெட்ட பலன்கள் இருந்து தப்பித்துக் கொள்ள  விநாயகர் வழிபாடு நல்லது. குறிப்பாக விநாயகர் கோவிலுக்கு ஞாயிறுதோறும் சென்று 9 வாரங்களுக்கு விளக்கு போட்டு வந்தால் உங்களுக்கான பிரச்சனைகள் அனைத்தும் நிவர்த்தியாகி குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் என்பதை உண்மை .

எதிலும் நிதானம் தேவை : 

2024 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு கொஞ்சம் சிக்கலை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தாலும்  நீண்ட தூர பிரயாணம்.  சுபக்காரிய செலவு,  உங்களுடைய ராசிக்கு நான்காம் இடத்தில் இருக்கும் கேதுவை குரு பகவான் பார்ப்பதால்  அலைச்சல்கள்  சிறிது மட்டுப்படும். 

பத்தாம் இடத்தில் இருக்கக்கூடிய  ராகு குருவைப் போலவே செயல்படுவார் என்பதால், குரு பகவான் 12ஆம் இடத்தில் இருந்து  உங்களுக்கு என்ன செய்ய காத்திருக்கிறாரோ அதை ராகு பத்தாமிடத்தில் இருந்து செய்வார்.  பத்தில் ராகு 12 ல் குரு  ஒன்பதில் சனி.  இப்படி கிரகங்கள் ஏறு,இறங்கு முகமாக இருப்பதால்  சற்று கலவையான விமர்சனங்களே இந்த வருடங்களில் நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள்.  கவலை வேண்டாம்.  மகாலட்சுமி வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும் ரிஷப ராசி லட்சுமிகரமான ராசி என்பதால் அதில் அமர போகும் குரு பகவான் உங்களுக்கு மகாலட்சுமி யோகத்தை அள்ளித் தருவார். 

லட்சுமி கடாக்ஷம் பெற  மகாலட்சுமி வழிபாடு: 

எப்பேற்பட்ட பிரச்சனையாக இருந்தாலும் தெய்வத்தின் பாதத்தில் அதை வைத்து விட்டால் நிச்சயமாக தெய்வம் அதை பார்த்துக் கொள்வார். அந்த வகையில் நீங்கள் மகாலட்சுமி,  மகாவிஷ்ணு பாதத்தில் உங்களுடைய கோரிக்கைகளை வைத்து விட்டால் அவர்கள் உங்கள் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றுவார்கள். எப்பேற்பட்ட கிரக தடைகள் ஏற்பட்டாலும் கோவிலுக்கு சென்று மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியும் வழிபட உங்களுடைய தடைகள் நிவர்த்தி ஆகும்.

அதிர்ஷ்டமான நிறம் :  வெள்ளை 

அதிர்ஷ்டமான எண் :  5,  3 

வணங்க வேண்டிய தெய்வம் :  மகாலட்சுமி வழிபாடு 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 87 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Breaking News LIVE: 2.15 மணி நேரம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி உரை நிறைவு!
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
"கேரளாவில் கணக்கை தொடங்கியாச்சு.. தமிழ்நாட்டில் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன் கடும் சாடல்
ஒட்டுமொத்தமான இந்துக்களையும் ராகுல் காந்தி மிகவும் மோசமாக விமர்சித்து இருக்கின்றார்- தமிழிசை சவுந்தரராஜன்
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Embed widget