மேலும் அறிய

July Month Rasi Palan 2023: ஜூலையில் 6 கிரகங்கள் பெயர்ச்சி - தலைகீழாக மாறப்போகும் வாழ்க்கை - யாருக்கு அதிர்ஷ்டம்.. யாருக்கு கவனம்?

July Month Rasi Palan 2023 in Tamil: வரும் ஜூலையில் 5 கிரகங்களின் பெயர்ச்சியும் அதில் ஒரு கிரகம் வக்ரபெயர்ச்சியும் அடைவதால், இந்த மாதம் பலரின் வாழ்க்கை தலைகீழாகப் புரட்டிப்போடும். பல ராசிகளுக்குப் பணம் கொட்டும். சிலருக்கு கவனம் தேவை.

மாற்றம் தரப்போகும் ஜூலை:

ஒவ்வொரு மாதம் ஆரம்பிக்கும் போது, இந்த ராசிக்கு இப்படி இருக்கும், அந்த ராசிக்கு அப்படி இருக்கும் என ஜோதிட பலன்கள் பார்க்கத் தொடங்கிவிடுவோம். அதிலும், வரப்போகும் ஜூலையில் மத்தியில், கேட்டதையெல்லாம் தாயுள்ளத்துடன் அள்ளித்தரும் அம்மனுக்கு உரிய ஆடி மாதம் வேறு தொடங்கப்போவதால், இந்த ஜூலை மாத எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடுதலாக வருகிறது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப இந்த ஜூலை மாதம், பல ராசியினரின் வாழ்க்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை ஜோதிடம் உறுதியாக கூறுகிறது. அப்படியென்ன இந்த ஜூலையில் சிறப்பு மாற்றம் ஏற்படப் போகிறது... எந்தெந்த ராசிகளுக்கு ஏற்படப் போகிறது என்பதையெல்லாம் இனி விரிவாகப் பார்ப்போம்...

ஜூலையில் நடைபெறும் பெயர்ச்சிகள்:

வேறு எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு, இந்த ஜூலை மாதத்தில் மட்டும், 6 கிரகப்பெயர்ச்சிகளைப் பார்க்கப்போகிறோம். அதில், 5 கிரகங்கள் ஒரு ராசியிலிருந்து வேறொரு ராசிக்குப் பெயர்ச்சி ஆகின்றன. 6-வதாக பெயர்ச்சியான கிரகமொன்று, வக்கிரகதியை அடைய இருப்பதால், ஒட்டுமொத்தமாக இந்த ஜூலை மாதத்தில் மட்டும் 6 கிரங்களின் நகர்வுகளில் மாற்றம் இருக்கப்போகிறது. அதில், முதலாவதாக, ஜூலை 1-ம் தேதி சனிக்கிழமையன்று,  கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் செவ்வாய் நுழைகிறார். அடுத்ததாக ஜூலை 7-ம் தேதி வெள்ளிகிழமையன்று கடக ராசியிலிருந்து, சிம்ம ராசிக்குள் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். மேலும், அடுத்த நாள், அதாவது ஜுலை 8-ம் தேதி சனிக்கிழமையன்று, மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு, புதன் கிரகம் பெயர்ச்சி அடைகிறது. 

ஆடிமாதம் பிறக்கும், ஜூலை 17-ம் தேதி, அதாவது திங்கள்கிழமையன்று, மிதுன ராசியில் இருந்த சூரிய பகவான்,  கடக ராசிக்குள் பிரவேசிக்கிறார். இது மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இதனால், சில அதிர்ஷ்ட யோகங்கள் சில ராசியினருக்கு கிடைக்கும். இதற்கிடையே, சிம்மத்தில் இருக்கும் சுக்கிரம், ஜூலை 23-ம்தேதி அதாவது, ஞாயிற்றுக்கிழமையன்று வக்ரபெய்ர்ச்சி ஆகிறார். இத்துடன் நிற்காமல், வரும் ஜலை 25-ம் தேதியன்று, சிம்ம ராசிக்குள் புதன் பெயர்ச்சி அடைகிறார். இவ்வாறு, அடுத்த மாதம் மட்டும், 6 கிரகங்களில் தங்களுடைய நிலைகளில் மாற்றம் கொள்கின்றன. இதனால், பலரின் வாழ்க்கையில் நேர்மறையாக கிடுகிடுவென உயரும் என ஜோதிடங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த கிரகங்களின் பெயர்ச்சி அடிப்படையில், வரப்போகும் ஜூலை மாதத்தில், 12 ராசிகளுக்குமான தனித்தனியாக பொதுப்பலன்கள் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பார்ப்போம்.

எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள்? | July Month Rasi Palan 2023 in Tamil

மேஷ ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?:

முதல் ராசியான மேஷத்திற்கு சிறப்பான மாதமாக ஜூலை இருக்கப்போகிறது. முதல் நாளிலேயே, செவ்வாய் சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.  அதுமட்டுமல்ல, மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளையும் கணக்கில் வைத்துப் பார்க்கும்போது, உங்களுக்கு இதுநாள் வரை இருந்த வந்த தடைகள் எல்லாமல் பனிபோல் கரைந்து, சுபமும் லாபமும் உங்களைத் தேடி வரும். வீடு, அலுவலகம் என எந்த இடத்திலும் நீங்கள் திட்டமிட்ட வேலைகள் எல்லாம் வெற்றியாக முடியும். தைரிய பலம் கூடுவதால், நினைத்த இலக்குகளை திட்டமிட்டு, உறுதியாகச் செயல்பட்டால், சுலபமாக நிறைவேற்றிட முடியும். உங்கள் சுற்றமும் நட்பும் உறவுகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு ஒத்துழைப்பாக இருப்பார்கள். சகலமும் நீங்கள் நினைப்பது போல் நேர்மறையாக இருக்கும். 

ரிஷப  ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?:

கிரகங்களின் பெயர்ச்சியால், உங்களுக்கு சிறு, சிறு தடைகள் ஏற்படலாம். ஆனால், சிந்தித்து, அவசரப்படாமல் செயல்பட்டால் எல்லாம் ஜெயமே. இருப்பினும், ஆடி மாதம் பிறந்தவுடனேயே, அதாவது ஜூலை 17-ம் தேதிக்குப் பிறகு, கல்வி, தொழில், நட்பு, பயணம் என அனைத்திலும் வெற்றிகரமான, மகிழ்ச்சியான சூழல் கிடைக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் உங்களோடு துணை நிற்கும். சிலருக்கு வீடு வாங்குவதற்கான யோகம் கூட ஏற்படும். பொதுவாக சொல்ல வேண்டுமென்றால், இந்த ஜூலை மாதம், முதல் பாதியே கொஞ்சம் சிக்கல், ஆனால், இரண்டாவது பாதி பெரும் மகிழ்ச்சி எனச் சொல்லலாம்.

மிதுன ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

மிதுன ராசியினருக்கு இந்த ஜூலை ஜாக்பாட் ஜூலை என்றால் மிகையில்லை. உங்கள் ராசிக்கு இந்த மாதம் புத ஆதித்ய யோகம் ஏற்படப் போகிறது. சூரியனும் புதனும் ஒரே இடத்தில் இருப்பதால் வரும் இந்த யோகத்தால், பொருளாதாரம் மிக வளமையாக இருக்கும். புத்திசாலித்தானமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, சிம்மத்தில் இருக்கும் சுக்கிரனால், தங்களின் அந்தஸ்து கிடுகிடுவென உயரும். சமுதாயத்தில் கவனிக்கப்படுவராக மாறுவீர்கள். வேலை செய்வோருக்கு ஊதிய உயர்வோ அல்லது பதவி உயர்வோ கிடைப்பது நிச்சயம்.  ஒட்டுமொத்தமாக உங்களுக்கு மறக்க முடியாத மகிழ்ச்சியான ஜூலையாக இருக்கும் என்றால் மிகையில்லை. 

கடக  ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?:

கிரகங்களின் பெயர்ச்சியால், நில், கவனி, செல் என்பார்களே.. அப்படியொரு காலகட்டம் இது. எனவே, நிதானமாக, யோசித்து செயல்பட்டால், எல்லாம் உங்களுக்கு வெற்றிகரமாக முடியும். இந்த மாதத்தில், உடல்நிலையில் குறிப்பாக, கண், பல் ஆகியற்றில் கவனம் தேவை. பணியிடம் மற்றும் குடும்பத்தில் அழுத்தங்கள் ஏற்படும். உணவிலும், பேச்சிலும் வாய் கட்டுப்பாடு மிக அவசியம்.  செலவு இருக்கும். அதற்கேற்ப வரவும் இருக்கும். கடன் ஏற்படாது. பயணங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. தொழில்ரீதியான பயணங்கள், உங்களின் எதிர்காலத்திற்கான முதலீடாக அமையும். கவனமாக, யோசித்து செயல்பட்டால், இந்த ஜூலை மாதம் உங்களுக்கு, வாய்ப்புகளுக்கான மாதமாக இருக்கும். 

சிம்ம ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

அண்மை காலத்தில் இல்லாத அளவுக்கு, இந்த ஜூலையில் சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய 3 கிரகங்களின் சேர்க்கை உங்கள் ராசிக்கு வருகிறது. எனவே, சிம்ம ராசி, சிங்கம்போல் நடைபோடலாம். ஆனால், அவசரம் வேண்டாம். யோசித்து செயல்பட்டால், அனைத்தும் சுபமே. நட்பு, குடும்பம், அலுவலகம் என எந்த இடத்திலும், பிரிந்தவர்கள்  ஒன்று சேரும் வாய்ப்பு அதிகம்.  காதல் கைகூடும். கூட்டுத் தொழில் ஜெயிக்கும்.  ஆக மொத்தத்தில், சிம்மத்திற்கு இந்த மாதம், முன்னேற்ற பாதைக்கு வழிகாட்டும் மாதம். 

கன்னி ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

கவனத்துடன் இந்த மாதத்தைப் பயன்படுத்திக் கொண்டால், அடுத்து வரப்போகும் மாதங்கள் சிறப்பாக இருக்கும். செவ்வாய் பகவான் உங்களுக்கு பலம் சேர்ப்பார். பணப்பற்றாக்குறை நீங்கும். வியாபாரம் செய்வோருக்கு உகந்த நேரம். திட்டமிட்டு பணியாற்றினால், செவ்வாய் பலத்தால், சிறப்பும் புகழும் குறைவில்லாமல் வந்துச் சேரும். ஆனால், பேச்சில் மிக, மிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குறுதிகளையும், உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை அள்ளவீசாமலும் இருந்தால், இந்த ஜூலை, லாபமான மாதமாக அமைவது உறுதி.

துலாம் ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

பெயர்ச்சி செய்யும் எல்லாம் கிரகங்களும் உங்களுக்கு சிறப்பையே செய்யப்போகின்றன. வேண்டாம், வேண்டாம் என்றாலும், உங்களைத் தேடி பணமும் பொருட்களும் வரப்போகின்றன. இல்லறம் நல்லறமாய் சிறக்கும். உறவுகளும், சுற்றமும் உங்களைப் புகழும். கல்வி, முதலீடு, புதுவேலை என அனைத்தும் நினைத்தபடி, நினைத்த நேரத்தில் நடக்கும் சூழல் உருவாகும். ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமென்றால், இந்த ஜூலை, தொட்டதெல்லாம் துலங்கும் ஜூலை உங்களுக்கு. 

விருச்சிக ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

கிரகங்களின் பெயர்ச்சி, உங்களுக்கொரு பரீட்சை காலமாக இருக்கப்போகிறது. பேச்சிலும், செயலிலும் தெளிவு இருந்தால்,  நீங்கள்தான் வெற்றியாளர். ஆனால், காலமும் நேரமும் உங்களுக்கு அழுத்தத்தைத் தரலாம். குறிப்பாக, கடன் வாங்கும் நிலைக்கு தள்ளலாம்.  அறிந்தும் புரிந்தும் செயல்பட்டால்,  வந்தவேகத்தில் அழுத்தங்கள் காணாமல் போய்விடும். ராகுவும் சனியும் உங்களுக்கு இந்த மாதம் பலமாக இருப்பதால், பெரியோர், சிறியோர் என அனைவரும் அவசரப்படாமல் இருந்தால், தைரியமும் உறுதியும் உங்களை சாதகமாக நிலைக்குக் கொண்டு செல்லும். ஆகமொத்த இந்த மாதம், கவனத்துடம் இருந்தால், எதிர்காலம் சிறக்கும்.

தனுசு ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

கடந்த பல ஆண்டுகளில் கிடைக்காத, மிகப்பெரிய மகிழ்ச்சி, பணம், வளர்ச்சி, யோகம் ஆகியவை இந்த மாதத்தில் உங்களுக்கு கிடைத்திட இருக்கிறது. அந்த அளவுக்கு அனுகூலமாக யோகப்பலன்களை கிரக அமைப்புகள் தருகின்றன. உறவுகள் வலுப்படும். சகோதர பாசம் அதிகரிக்கும். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆன்மீகத்தின் மீது பற்று ஏற்பட்டு, பயணம் செய்வீர்கள். சொந்தத் தொழில் செய்வோருக்கு வசந்தகாலம் தொடங்குகிறது. ஆக மொத்தம், இந்த ஜுலை மாதம், தனுசு ராசிக்காரர்களுக்கு, ஒளிமயமான எதிர்காலத்திற்கான தொடக்கமாக இந்த மாதம் இருக்கும். 

மகர ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

கிரகப் பெயர்ச்சிகள் உங்களுக்கு பல சோதனைகள் தரும். குறிப்பாக, பண வரவு குறையும். செலவு அதிகரிக்கும். திட்டமட்டு செயல்பட்டால், கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். உடல் உபாதை குறிப்பாக, வயிறு தொடர்பாக சிக்கல்கள் வரலாம். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அதை வளர்த்துக் கொள்ளுங்கள். நிம்மதி கிடைக்கும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படாமல், அனுசரித்து சென்றால், உங்கள் வழி, தனி வழி என்ற  ரீதியில் பாதுகாப்பாக இந்த ஜூலை மாதத்தைக் கடந்துவிடலாம். 

கும்ப ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

இந்த மாதத்தில் நடைபெறும் கிரக மாற்றங்கள், தொடர்ந்து அனுபவித்து நேரம் இக்கட்டுகளில் இருந்து உங்களை விடுவிக்கும். இனிமையான சூழலை உருவாக்கும். கணவன், மனைவி இடையே இருந்த பூசல்கள் குறைந்து, புரிதல் அதிகமாகும்.  திருமணம் ஆகாதவர்களுக்கு, திருமணத்திற்கான நிச்சயம் செய்யக்கூடிய சூழல் ஏற்படும். திடீர் பண வரவும் உண்டு. ஆக மொத்தம், இந்த ஜூலை மாதம், தன்னம்பிக்கை தரும் மாதமாக உங்களுக்கு அமையும். 

மீன ராசிக்கு என்ன நடக்கப்போகிறது?

மீன்களைப் போல் துள்ளிக் குதிக்கும் காலக் கட்டத்தைத் தர உள்ளது ஜூலை மாதம். பணம், மதிப்பு, லாபம், வெற்றி என அனைத்தும் உங்களை நோக்கி வருகின்றன. சரியான திட்டமிடலும், முழு முயற்சியும் பண வரவை அதிகப்படுத்தும். எதிர்பாராத முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும். சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், ஒரு மிகப்பெரும் சாதகமாக நேரத்தை அனுபவிக்க முடியும். ஒட்டுமொத்தப் பார்வையில், மீனத்திற்கு இந்த மாதம்,  வளர்ச்சிக்கான சாதகமாக நேரம். 

இந்த பலன்கள் அனைத்துமே, கிரகங்களின் பெயர்ச்சிகளுக்கேற்ப ராசிகளுக்காக கணிக்கப்பட்ட பொதுவான பலன்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள். அவரவர் ஜாதகங்களுக்கு ஏற்ப, நிலைகளும், கணிப்புகளும் மாறுபடும் என்பதையும் மனதில் நிறுத்துங்கள்.  ஜோதிடம் ஓர் வழிகாட்டி பலகை. அதைப் பயன்படுத்தி, நம்முடைய பாதையும் அணுகுதலையும் சீர்படுத்திக் கொண்டால், எல்லா மாதங்களும் நமக்கான மகிழ்ச்சி மாதங்களாகவே அமையும் என்பதுதான் உணமையான ஜோதிடம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget