மேலும் அறிய

Handwriting and Vasthu | வாஸ்து.. கையெழுத்து.. நிதிப்பிரச்சனை.. நிலவும் நம்பிக்கை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுகோங்க..

வாஸ்து முறைப்படி, உங்களது கையெழுத்தின் நேர்க்கோட்டிற்குக் கீழே  இடும் புள்ளிகள் 6-க்கு மேல் சென்றுவிடக்கூடாது என்பதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும் என நம்பப்படுகிறது

வாஸ்து முறைப்படி உங்களது கையெழுத்தில் சில மாற்றங்களைக் கொஞ்சம் மேற்கொண்டு பாருங்கள். பல நாள்களாக உள்ள நிதி பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் எனக் கூறப்படுகிறது.

புதிய வீடு கட்டுவது, திருமணம், வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் தொடங்கி கணவன் மனைவி பிரச்சனை, குடும்ப பிரச்சனை, உறவினர்களுக்கிடையே பிரச்சனை, குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக்குறைவு, பணப்பிரச்சனையால் நிதி நெருக்கடியில் சிக்குவது போன்ற அனைத்திற்கும் தீர்வு காண்பதற்காக மக்கள் தற்போது ஜோதிடம் மற்றும் வாஸ்துமுறைகளைப் பின்பற்றுகின்றனர். இதன் மூலம் சில காரியங்களையும், வாழ்வில் சில திருத்தங்களையும் மேற்கொண்டால் வாழ்வில் முன்னேற்றம் பெறலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் அதிகளவில் எழுந்துள்ளது.

Handwriting and Vasthu | வாஸ்து.. கையெழுத்து.. நிதிப்பிரச்சனை.. நிலவும் நம்பிக்கை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுகோங்க..

அப்படி மக்களின் வாழ்வில் ஒன்றாகி விட்ட வாஸ்து முறையைப்பின்பற்றி தங்களது கையெழுத்தை மாற்றினால் பல ஆண்டுகளாக உள்ள நிதிப்பிரச்சனையைச் சமாளிக்க முடியும் என்று கூறப்படுகிறது. பொதுவாக உங்களது அனைத்து வேலைகளும் ஒரு கையெழுத்தில் அடங்கியிருக்கும் என்பார்கள். எனவே பல ஆண்டுகளாக அல்லது மாதங்களாக நீங்கள் நிதிப்பிரச்சனையால் தவித்துவருகிறீர்கள் என்றால் உங்கள் ராசிப்படி எப்படி கையெழுத்தை மாற்றியமைக்க வேண்டும் என சிலரால் கருதப்படுகிறது. ஏனென்றால் ஒரு  தவறான கையெழுத்தால் பல லட்சங்களை இழக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. எனவே சரியான கையெழுத்தை நீங்கள் இனிமேல் மேற்கொள்வது அவசியமான ஒன்று என வாஸ்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்

குறிப்பாக நீங்கள் அளவுக்கு அதிகமாக பணம் சம்பாதித்தாலும், நம் கையில் ஒரு ரூபாய் கூட சேமிப்பு இருக்காது. இதுப்போன்ற பிரச்சனைகளை நீங்கள் உணர்கிறீர்களா? அப்படின்னா வாஸ்து சாஸ்திரத்தின் படி, வருங்காலங்களில் உங்களது கையெழுத்தை மாற்றப்பழகுங்கள். பொதுவாக நீங்கள் இடும் கையெழுத்தின் கீழக் ஒரு நேர்க்கோட்டை இடுவதோடு அதன் கீழே இரண்டு புள்ளிகளை வைக்கத்தொடங்குங்கள் என கூறுகிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.

இதனையடுத்து உங்களது வருமானம் ஓரளவிற்கு கையில் தங்குவதாக நீங்கள் உணர்ந்தால், உங்களது கையெழுத்தின் கீழ் ஒவ்வொரு புள்ளிகளாக  நீங்கள் வைத்துக்கொண்டே செல்லலாம். ஆனால் நீங்கள் உங்களது கையெழுத்தின் நேர்க்கோட்டிற்குக் கீழே  இடும் புள்ளிகள் 6க்கு மேல் சென்றுவிடக்கூடாது என்பதை நீங்கள் மனதில் வைத்துச் செயல்பட வேண்டும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்

Handwriting and Vasthu | வாஸ்து.. கையெழுத்து.. நிதிப்பிரச்சனை.. நிலவும் நம்பிக்கை பற்றி கண்டிப்பா தெரிஞ்சுகோங்க..

இதுப்போன்ற வாஸ்து முறைகளை நீங்கள் பின்பற்றி உங்களது கையொழுத்தை மாற்றினால் நல்ல பலன் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இதனை நீங்கள் கொஞ்சம் டிரை பண்ணிப்பாருங்கள்.. பொதுவாக இந்திய வேதமுறைகளில் ஒன்றாகவும் பாரம்பரிய கட்டடக்கலையைக் குறிக்கும் விதமாக, வாஸ்து சாஸ்திரம் விளங்கிவருகிறது.  வாஸ்து என்பதற்கு குடியிருப்பு என்று பொருளாகும் என்பதால், வீடு கட்டும் அனைவரும் வாஸ்து சாஸ்திரப்படி கட்டுகின்றனர். இவ்வாறு செய்வதன் மூலம் நமது வீடுகளில் எப்போதும் அமைதி, மகிழ்ச்சி, சுகாதாரம், செல்வம் போன்றவற்றைப் பெற முடிவதாக நம்பப்படுவது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (04-08-2026): ரிஷபத்துக்கு செலவு.. துலாமுக்கு வரவு.. உங்க ராசிக்கான இன்றைய பலன்கள்!
Rasi Palan Today (03-08-2026): இன்று ஆடிப்பெருக்கு.. ரிஷபத்துக்கு லாபம் கொட்டும்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (03-08-2026): இன்று ஆடிப்பெருக்கு.. ரிஷபத்துக்கு லாபம் கொட்டும்.. அப்ப உங்க ராசிக்கு?
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget