மேலும் அறிய

Love Horoscope Today: பாஸ் காதலிக்கிறீங்களா? அப்போ இந்த லவ் ராசி பலனை ஜாலியா படிங்க..

Love Horoscope Today in Tamil, September 1st 2022: இப்படி உலகம் குளிர காதல் செய்யுற உங்க காதல் வாழ்கையில இன்னைக்கு என்னனு ராசிக்கு ஏத்த மாதிரி தெருஞ்சுக்க இன்றைய லவ் ராசிபலனை படிங்க...

காதல பத்தி நீங்க என்ன நெனைக்கறீங்கனு தோழி ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் முக்கியமானது.  ஒரு மேஜிக் ஷோ பார்க்கும் குழந்தை எப்படி மிகவும் ஆச்சர்யத்தோடு மகிழ்ச்சியாக ஆடிப்பாடி துள்ளிக்குதிக்குமோ அது மாதிரி தான், காதலை எதிர்கொள்ளும் மனசும். அது இந்த பூவுலகில் ஆடிப்பாடி துள்ளிக்குதிக்கும். நான் சில ப்ரேக் அப்களை சந்தித்து இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் ப்ரேக் அப்பைச் சந்தித்து அதிலிருந்து மீள்கையில் மனதில் பதிவது புதிய காதல், புதிய உலகம், புதிய அனுபவம். இவற்றில் என்னைக் கடந்து சென்றவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் எப்போதும் என் நேசத்திற்குரியவர்கள். ப்ரேக் அப்களைச் சந்தித்தவர்கள் சொல்வது, "லவ்வெல்லாம் பாத்தாச்சு, அது போ...ர்" என இழுப்பவர்கள் இங்கு அதிகம். ஆனால் அவர்கள் மனதில் இருப்பது காதலை முழுவதுமாக எதிர்கொண்டாகியாச்சு, காதலை முழுமையாக உள்வாங்கியாகிவிட்டது, காதலின் ஆழம் பார்த்தாகிவிட்டது என்பது மாதிரியான ஓர் சுவாரஸ்யமற்ற பதில் எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. காதலைப் பொறுத்தமட்டில், அது நாளுக்கு நாள் புதிது. காதலுக்கு காதல் காதலே புதிது. அப்படியான காதலை ஓர் வரையறைக்குள் எல்லைக்குள் கட்டமைக்கும் மனிதர்களை நான் பாவமாக பார்க்கிறேன் என்றார். 

மேலும் என் தோழி கூறியது, காதலை அவர்கள் சொல்வது போல் கடக்க முடியாது. மாறாக காதல் இயற்கையின் ஒரு துளி கிடையாது. அது ஒட்டுமொத்த இயற்கை. ஒட்டுமொத்த பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தை காதலில் கடப்பதென்பது பேராசை. ஆனால் காதல் கொண்டு பிரபஞ்சத்தை நிரப்புவது என்பது காதல் வயப்பட்டவர்கள் அனைவரும் செய்யவேண்டியது. இப்படி உலகம் குளிர காதல் செய்யுற உங்க காதல் வாழ்கையில இன்னைக்கு என்னனு ராசிக்கு ஏத்த மாதிரி தெருஞ்சுக்க இன்றைய லவ் ராசிபலனை படிங்க...

Love Horoscope Today: பாஸ் காதலிக்கிறீங்களா? அப்போ  இந்த லவ் ராசி பலனை ஜாலியா படிங்க..

மேஷம் 

தக்காளி சாப்பாடு கெடச்சா போதும்னு நெனைக்கறவங்களுக்கு பிரியாணி கெடச்சா எப்படி இருக்குமோ அப்படி இருக்க போகுது உங்க லவ் டே. நீங்க எதிர்பார்க்கறத விடவே சூப்பரா போககூடிய நாள். 

ரிஷபம்

திடீர் திடீர்னு சாய்தா உருளுதானு சொல்ற மாதிரி, உங்க லவ்வர் உங்கள போட்டு படாதபாடு படுத்த போறாங்க. இன்னைக்கு உங்களுக்கு டாம் அன்ட் ஜெர்ரி டே தான். 

மிதுனம்

உங்க லவ்வுல உன் குத்தமா என் குத்தமானு மாறி மாறி சண்ட போட்டு மனச காயப்படுத்திகறதுக்கு பத்து பொருத்தமும் உங்களுக்கு பக்காவா இருக்கு. சேதாரமான நாள்.

கடகம் 
டிபன் சாப்டீங்களா ணா, டீ சாப்டீங்களா ணா'னு விஜய் படத்துல வர்ற தூரத்து சொந்தம் மாதிரியே பேசீட்டு இருக்காதீங்க. நீங்க உங்க ஆள்ட்ட பேசவும் பகிரவும் நிறையவே இருக்கு. அத பேசுங்க ட்யூட். 

சிம்மம் 

நம்ம ஆள் மனசுல நம்மல யாரோ ரொம்ப கோபக்காரர்னு நம்ப வெச்சுட்டாங்களோனு உங்களுக்கே  தோனுற  அளவுக்கு உங்க ஆள் உங்க பொறுமைய சோதிப்பாங்க. லவ்வுல சூடூ சொரணையொல்லாம் பாக்காதீங்க. 

கன்னி

தல தளபதி ரசிகர்களுக்கு மத்தியில எப்படி லவ் ஓர்க் அவுட் ஆகுமோ அந்த அளவுக்கு இருக்கபோகுது. சண்ட கட்டீட்டே இருக்காதீங்க.  விட்டுக்கொடுத்து போங்க. 

துலாம்

உங்க ஆள் மனசுல உள்ள காதல, பத்து நிமிஷத்துக்கு வாய்ஸ் ரெக்கார்டு செஞ்சு அனுப்பலானு இருப்பீங்க. ஆனா எட்டு செகண்ட்டுக்கு மேல ரெக்காட்டு ஆகி இருக்காது. ரொம்பவே ஏமாற்றமான நாள். 

விருச்சிகம் 

ஒரு தடவ முடிவு பண்ணிட்டா என் பேச்ச நானே கேட்க மாட்டேன் அப்படிங்கறது யாருக்குமே லவ்வுக்கு செட் ஆகாது. ஆனா உங்களுக்கு செட் ஆகுது. உங்க காட்டுல மழை தான். ஜாலியா இருங்க. 

தனுசு

ரொம்ப ஃபெஸ்டிவல் சேல்ல ஆன்லைன்ல ஆர்டர் செஞ்சது ஒன்னு வந்தது ஒன்னா இருந்தா எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கும். இன்னைக்கு உங்க நிலம எளவு காத்த கிளி மாதிரி தான். ஏமாற்றமான நாள். 

மகரம்

எனக்கு நல்ல சாங்னு தோனுறது எல்லாம் நம்ம ஆளுக்கு மொக்க சாங்னு சொல்லீட்டு இருக்காங்களே.  நமக்கு ஏன் இவங்கள புடுச்சதுனு புரண்டு புரண்டு யோசிப்பீங்க. கன்புஷனான டே. 

கும்பம்

ஒரு பீச்சுல நீங்களும் உங்க லவ்வரும் இருக்கீங்க. அப்பறம் அங்க யாருமே இல்ல. ரெண்டும் ஒன்னுதானேனு உங்களுக்கு தோனுதுல. அப்படி தான், சொன்னதே திரும்ப திரும்ப சொல்லீட்டு இருப்பீங்க. உங்க லவ்வர் தான் பாவம். 

மீனம்

ப்ரண்ட்ஸ்க்கு கொடுக்கற டைம்ல பாதியாச்சும் உங்க லவ்வருக்கு தாங்க. லவ்வு கவ்வுனா மட்டும் போதாதுங்க. அதவிட முக்கியம் லவ்வ தந்துட்டே இருக்கறது தான். சோ டூ இட் இமிடியட்லி.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Embed widget