Love Horoscope: உங்க காதல் வாழ்க்கையில இன்னைக்கு என்னனு தெருஞ்சுக்கனுமா? அப்போ படிங்க இன்றைய ஜாலியான லவ் ராசி பலன்கள்
Love Horoscope Today in Tamil, August 30th 2022: காதலிக்கறீங்களா டியூட்! இன்றைய நாளுல உங்க லவ்வுல என்னனு தெருஞ்சுக்க ஆசையா இருந்தா கண்டிப்பா படிங்க.

காதல் என்றாலே கவிதை இல்லாமல் இருக்காது. கவிதை எழுதாத காதலர்கள் கூட தங்களது மனதுக்கு பிடித்த அல்லது பாதித்த அல்லது தங்களது காதலுக்கு ஒத்துப்போகக் கூடிய கவிதைகளை காதலரிடம் பகிர்ந்து காதலை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். காதலுக்கு அன்பு, மகிழ்ச்சி, ப்ரியம் என தன்னை சிலாகித்துக் கொள்ளக்கூடிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இவையெல்லாம் காதலில் அனிச்சையாக நடக்ககூடிய விஷயங்கள். அதேநேரத்தில் காதல் வயப்பட்டவர்கள் சில நேரங்களில் மகிழ்ச்சியை பகிர்வதைப்போல், கவலையை, ஏமாற்றத்தை இன்னும் ஆழமாகச் சொன்னால், அழுகையை பகிர்வது கிடையாது. ஆனால், ஒருதலை காதலுக்கு தனிப்பட்ட கண்ணீர் இருந்தாலும், காதல் ஏற்கப்பட்ட பின்னர் ஏற்படும் கண்ணீரை மறைப்பது என்பது, உங்களது பார்வையில் என் காதலருக்கு ஏன் வருத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என தோன்றலாம். ஆனால் ஒரு நாள் நீங்கள் வேண்டாம் என மறைத்த கண்ணீர் தெரியவரும்போது, ஒரு காதலராக நான் எதற்கு எனும் கேள்வி ஒரு வலியோடு உண்டாகிவிடும். சுகமோ, வலியோ காதலரிடம் பகிருங்கள் அவர்கள் உங்களுக்கு ஒரு ஆறுதலை ஏற்படுத்துவார்கள். கண்ணீரே காதலரால் தான் என நீங்கள் சொல்வதும் கேட்கிறது. உங்களுக்காகவே, உங்க ராசிக்கு ஏற்றவாறு இன்றைய ஜாலியான லவ் ராசி பலன்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இத ரிலாக்ஷாவே படிங்க பாஸ்…
மேஷம்
இன்னைக்கு மட்டும் கத சொல்லி தூங்க வெக்கறயானு உங்க ஆள் கேட்கும்போது, இவ்வளவு நாளா இததான செஞ்சுட்டு இருக்கேன்னு மனசுக்குள்ள நெனச்சுப்பீங்க. ஒரு மாதிரி எக்குதப்பான நாள் உங்களுக்கு.
ரிஷபம்
ஒரு சில வாட்ஸ் ஆப் குரூப்ல ஏன் இருக்கோம், எதுக்கு இருக்கோம், யார் அட்மின், குரூபோட மோடீவ் என்னனு தெரியாம இருப்போம். அந்த மாதிரி லவ்வுல இருந்தா லைஃப்க்கும் நல்லதில்ல, லவ்வுக்கும் நல்லதில்ல. மேக் இட் ரீசனபுல் டே.
மிதுனம்
யார் சாமி இவன், எங்க சாமி இருந்தான் இவ்வளவு நாளானு சொல்ற மாதிரி உங்க லவ்வர்ட்ட இருந்து இன்னைக்கு ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு காத்துட்டு இருக்கு. உங்க பெஸ்டி கிட்ட இருந்தும் ஒரு சர்ப்ரைஸ் காத்துட்டு இருக்கு. ரெடியா இருங்க.
கடகம்
இன்னைக்கு உங்களுக்கும் உங்க லவ்வருக்கும் இடையில லவ்வும் ரொமான்சும் செம்மயா ஒர்க்-அவுட் ஆகப்போகுது. லவ்வரே இல்லையேனு யாராவது சொன்னீங்கனா ஸாரி பாஸ் பெட்டர் லக் நெக்ஸ்ட் லவ்.
சிம்மம்
உங்க லவ்வர்ட்ட இன்னைக்கு உங்க ப்ரெண்ட்ஸ் புராணத்த பாடாம இருங்க. அதுக்காக எக்ஸ் பத்தி பேசலாமானு கேட்காதீங்க, அப்பறம் உங்கள உங்களாலயே காப்பாத்த முடியாது. பீ கேர் புல்.

கன்னி
பஸ் ஸ்டாண்ட்ல போய் நின்னா நீங்க போக வேண்டிய ஊருக்கான பஸ்ஸ தவிர மீதி எல்லா பஸ்ஸும் வரும்போது ஒரு அப்சட் வரும் பாருங்க, அப்படி உங்க லவ்வர் அப்சட் பண்ணுவாங்க. கொஞ்சம் அர்ட்சஸ் பண்ணீக்காங்க.
துலாம்
லவ்வருக்கு தெரியாம ஒரு சேட்டைய செஞ்சுட்டு அத நல்லாவே சமாளிப்பீங்க. இன்னும் சொல்லனும்னா வாய்லயே வட சுடுவீங்க. ஆனா உங்க சேட்டைய அவங்க எப்பவோ கண்டுபுடுச்சு இருப்பாங்க. ஜாலியான டே ப்பா உங்களுக்கு.
விருச்சிகம்
என்ன செய்யறது ஏது செய்யறதுனு நீங்க புலம்பீட்டு இருக்கும்போது, உங்க ஆள் இது ரொம்ப சப்ப மேட்டர் இரு நான் ஹெல்ப் பண்றேன்னு வருவாங்க. ஆனா உங்க ஆளுக்கு டீவி ரிமோட்டுக்கும் ஏசி ரிமோட்டுக்குமே வித்தியாசம் தெரியாதுனு நீங்க நெனச்சுட்டு இருப்பீங்க. கன்ஃபியூஷனான நாள்.
தனுசு
ப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்றேன்னு போன நீங்க, இன்னைக்கு லவ்வருக்கு மெசேஜ் அனுப்பாம திட்டு வாங்குவீங்க. கடைசில ப்ரெண்டுக்கும் ஹெல்ப் பண்ண முடியாம லவ்வர்ட்டையும் திட்டு வாங்கீட்டு இருப்பீங்க. எது செஞ்சாலும் யோசுச்சு செய்ங்க.
மகரம்
சொந்தத்துல ஒரு வரன் இருந்துச்சே, அவங்க லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்கனு உங்க வீட்டுல கூப்டு சொல்லுவாங்க. உனக்குனு இருந்த கடைசி வரனும் போச்சு. நீ யாரையும் லவ் பண்றயானு கேப்பாங்க. ஆமானு சட்டுனு சொல்லிடுங்க. வீட்டுலயும் ஓ.கே சொல்லிடுவாங்க இதெல்லாம் நடந்தா எப்படி இருக்கும். இதெல்லாம் கனவுலதான் நடக்கும்னு நீங்க சொல்றதும் கேட்குது. இன்னைக்கு கொஞ்சம் ஏமாற்றமான நாள் உங்களுக்கு.
கும்பம்
உங்க லவ்வரா ஒன்னு சொல்ல வந்து, நீங்க ஒன்னு புருஞ்சுப்பீங்க. தேவையே இல்லாத சங்கடம் ரெண்டு பேருக்கும் உங்களாலதான் ஏற்படும். வாய வெச்சுட்டு சும்மா இருக்கமாட்டீங்க. பாத்து சூதானமா நடந்துக்காங்க. சேதாரமான நாள் இன்னைக்கு.
மீனம்
மழை வருதுனு குடை எடுத்துட்டு போக தெருஞ்சவங்க, பெல்ட் செப்பல் போட்டுட்டு போகனும்னு மறந்துட்டா எப்படி இருக்குமோ. அந்த மாதிரி தான் உங்களுக்கு. மண்டைக்கு மேல இருந்த கொண்டய மறந்த கத தான். ஆனா உங்க லவ்வர் கூட ஹேப்பியா இருப்பீங்க.





















