மேலும் அறிய

விழுப்புரம் விவசாயி புதிய முயற்சி; 30 ஏக்கர் நிலத்தில் பாமாயில் எண்ணெய் செடிகள் நடவு

விழுப்புரம் : 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாதம் வருமானத்தை தரும் பாமாயில் சாகுபடி.

விழுப்புரத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் மற்றும் எண்ணெய் பனைத்திட்டம் 2023-24 ஆண்டு சார்பில் கடந்த 25ம் தேதி தொடங்கிய எண்ணெய் பனை நடவு தொடக்க விழா வரும் 5ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் குறைந்தபட்சம் 2023-2024ம் ஆண்டு  காலாண்டிற்கு 60 ஹெக்டர் நிலப்பரப்பில் எண்ணெய் பண்ணை நடவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள எசாலம் கிராமத்தில், ஆனந்த கிருஷ்ணன் என்கிற விவசாயி தனது விவசாய நிலத்தில் சுமார் 30 ஏக்கர் நிலத்தில் பாமாயில் எண்ணெய் செடிகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளார். இந்த பாமாயில் குலைகளை கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிடெட் பாமாயில் பிரிவு நேரடியாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

NMEO-OP தேசிய சமையல் எண்ணெய்கள், எண்ணெய் பனை திட்டத்தின் மூலம் 2037 ஆம் ஆண்டு வரை பாமாயில் பழ குலைகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான மத்திய மாநில அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையாக ஒரு டன்னுக்கு 13,346 ரூபாய்  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, விழுப்புர மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன் தெரிவித்தார்.

விழுப்புரம் விவசாயி புதிய முயற்சி; 30 ஏக்கர் நிலத்தில் பாமாயில் எண்ணெய் செடிகள் நடவு

பாமாயில் சாகுபடிக்கு தமிழக அரசின் தோட்டக்கலை துறை வழங்கும் மானிய உதவிகள் குறித்து விவரங்கள் :

அரசின் முழு மானியத்தில் கன்றுகள் விநியோகிக்கப்படுகிறது என்றும், மூன்று வருடங்களுக்கு பராமரிப்பு செய்வதற்காக மானியம் வழங்கப்படுவதாகவும் இதுமட்டுமின்றி மூன்று வருடங்களுக்கு ஊடுபயிர் மானியமும், சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் வழங்கப்படுவதாக அன்பழகன் தெரிவித்தார். மானியத்தில் அறுவடை கருவிகளும் முன்னுரிமை அடிப்படையில் மின் மோட்டார் மற்றும் ஆழ்துளை கிணறும் வழங்கப்படுவதாக அன்பழகன் தெரிவித்தார்.

 பாமாயில் மர சாகுபடி சிறப்புகள்:

மற்ற பயிர்களை காட்டிலும், குறைவான சாகுபடி செலவு, வேலையாட்கள் தேவைகள் குறைவு, மழை வெள்ளம், களவு சேதம் இல்லை என கூறப்படுகிறது. நீர், உர நிர்வாகத்திற்கு ஏற்ற மகத்தான மகசூல் கிடைக்கும் எனவும் தரமான கன்றுகள் விநியோகம், உயர் தொழில்நுட்ப ஆலோசனைகள், முத்தரப்பு அடிப்படையில் வங்கி கடன், இருதரப்பு ஒப்பந்த அடிப்படையில் உத்தரவாத கொள்முதல், பெரு விவசாயிகளின் பாதுகாப்பான தொழில் முறை, 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாதம் வருமானத்தை இந்த பாமாயில் மர சாகுபடி தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் விவசாயி புதிய முயற்சி; 30 ஏக்கர் நிலத்தில் பாமாயில் எண்ணெய் செடிகள் நடவு

பாமாயில் மர மகசூல்

பாமாயில் மரம் மூன்று முதல் நான்கு வருடத்தில் ஐந்து டன் அளவிலான மகசூல் ஈட்ட முடியும். நான்கு முதல் ஐந்து வருடத்தில் 12 டன்களும், ஐந்து முதல் ஆறு வருடத்தில் 25 டன்களும், 6 முதல் 30 வருடம் வரை 30 டன்களில் மகசூல் ஈட்ட முடியும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாமாயில் செடிகளில் நடவு செய்வதற்கு ஒரு ஹெக்டருக்கு 143 மரங்கள் தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் ஒரு மரத்திலிருந்து 12 குலைகள் அறுவடை செய்யமுடியும். ஒரு பழகுலையின் சராசரி எடை 25 கிலோ இருக்க வேண்டும் எனவும்,  நல்ல பராமரிப்பு இருந்தால் நிச்சயம் பாமாயில் அதிக அளவில் லாபம் பார்க்க முடியும் என தோட்டக்கலை துறை அதிகாரி கூறுகின்றனர். பாமாயில் நல்ல லாபம் தரும் என்ற நம்பிக்கையில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்து உள்ளதாகவும் நல்ல மகசூல் ஈட்டி லாபம் பார்க்கலாம் என விவசாயி ஆனந்த கிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget