மேலும் அறிய
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 8 லட்சத்து 30 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல்
நெல் சாகுபடி பிரதான சாகுபடியாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். குறுவை, சம்பா, தாளடி என நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
![திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 8 லட்சத்து 30 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் Purchase of 8 lakh 30 thousand MT paddy in last one year in Tiruvarur district TNN திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 8 லட்சத்து 30 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/e1a3d513bfe27da4eba7feab6a0c7f901692688346694113_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல் மூட்டை
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 8 லட்சத்து 30 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக முதல்நிலை மண்டல மேலாளர் தகவல் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழில் விவசாயம். குறிப்பாக நெல் சாகுபடி மட்டுமே பிரதான சாகுபடியாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக பருத்தி நிலக்கடலை கரும்பு உள்ளிட்ட சாகுபடி பணிகளில் விவசாயிகள் இந்த பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை 80 சதவீதம் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதை நம்பி 60,000 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பிலும் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலமாக 30,000 மெட்ரிக் டன் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதல்நிலை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
![திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 8 லட்சத்து 30 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/fb80ec720e0900a151aab0ed550998451692688392044113_original.png)
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை சம்பா தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்மணிகளை அரசின் சார்பில் திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 527 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 527 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 8 லட்சத்து 30 ஆயிரம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
![திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 8 லட்சத்து 30 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/dfd66ac60918f746b99cca549992433f1692688421837113_original.png)
மேலும் கடந்த 2021-22 ஆம் ஆண்டில் 7 லட்சத்து 94 ஆயிரம் மெட்ரிக் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 36 ஆயிரம் மெட்ரிக் டன் கூடுதலாக இதுவரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக ராஜராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் மேலும் கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்படும் எனவும் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion