மேலும் அறிய

"கர்நாடகா வீசும் வலையில் முதல்வர் விழந்து விடக்கூடாது!" - காவிரி விவகாரத்தில் கொதிக்கும் பி.ஆர்.பாண்டியன்!

கர்நாடக அரசின் காவிரி பேச்சுவார்த்தை அழைப்பை தமிழக முதல்வர் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடத்தில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது;

சட்டப்படி செல்லாத பேச்சுவார்த்தை அழைப்பு

"காவிரி விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சருக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பானது சட்டப்படியும், இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும் செல்லாது. எனவே, தமிழக முதலமைச்சர் இந்த அழைப்பை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும். 2013-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு மற்றும் 2018-ஆம் ஆண்டில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, காவிரி நீர் பங்கீடு மற்றும் மேகதாட்டு அணை விவகாரம் தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டும். அதை விடுத்து, இரு மாநில முதலமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தவித நன்மையும், பயனும் ஏற்படப் போவதில்லை.

மேலும், இரு மாநில முதலமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அது கருத்து வேறுபாடு அல்லது முரண்பாட்டில் முடியும் பட்சத்தில், கர்நாடகாவில் வாழும் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும், இனக்கலவரமும் ஏற்பட வாய்ப்புள்ளது. கர்நாடக அரசியல்வாதிகளின் சுயநல அரசியல் நடவடிக்கைகளால் அங்கு வாழும் அப்பாவித் தமிழர்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் பாதிப்புக்கு உள்ளாகக் கூடாது" என்று அவர் தெரிவித்தா‌ர்.

மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகள்

செய்தியாளர்கள் சந்திப்பில் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளையும், தற்போதைய அவசர தேவைகளையும் பி.ஆர்.பாண்டியன் சுட்டிக்காட்டினார், கொள்ளிடத்தில் கதவணை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்று வழியாக கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க, கொள்ளிடம் முகத்துவாரத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் புதிய கதவணை அமைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உப்பனாற்றில் கதவணை: சீர்காழி முதல் வைத்தீஸ்வரன் கோயில் வரை செல்லும் உப்பனாற்றில் கதவணை அமைத்து, அப்பகுதியில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்க வேண்டும்.

சாலை சீரமைப்பு: கொள்ளிடம் வலதுகரையில் நீர்ப்பாசனத் துறையால் அமைக்கப்பட்ட 20 கிலோமீட்டர் தூரச் சாலை முற்றிலும் பழுதடைந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்திற்குப் பயன்படும் இச்சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதற்கட்டமாக சீர்காழியில் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தை நடத்துவதென விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கக் கோரிக்கை

தொடர்ந்து பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவி வரும் கடுமையான வறட்சி நிலவரம் குறித்துக் கவலை தெரிவித்தார். "கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு நல்ல மகசூல் கிடைத்தது. ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததாலும், மழை பொய்த்ததாலும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கர் அளவில் மட்டுமே நிலத்தடி நீரை நம்பி குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது போதிய மழை இல்லாததால் டெல்டா பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் கீழே சென்றுவிட்டது. விவசாயிகள் தங்களது ஆழ்துளைக் கிணறுகளை மேலும் ஆழப்படுத்தும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். பல இடங்களில் ஏற்கனவே நட்ட பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கியுள்ளன. இதனால் அடுத்து வரவிருக்கும் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, வறட்சியின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா மாவட்டங்களை உடனடியாக 'வறட்சி மாவட்டங்களாக' தமிழக அரசு அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

திருவாரூரில் ஆகஸ்ட் 1-ல் சிறப்பு மாநாடு

வறட்சியை எதிர்கொள்வது மற்றும் 'எல்நினோ' (El Nino) பருவநிலை மாற்றத் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள விவசாய இழப்புகளை எவ்வாறு ஈடுசெய்வது என்பது குறித்து விவாதிக்க, வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி திருவாரூரில் சிறப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR) மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னணி வேளாண் விஞ்ஞானிகள் கலந்துகொள்ள உள்ளனர். நிலவி வரும் வறண்ட சூழலில் டெல்டா விவசாயிகளையும், பயிர்களையும் பாதுகாப்பதற்கான அடுத்தகட்ட தொழில்நுட்ப மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் குறித்து இம்மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
தஞ்சாவூரின் வேளாண் பாரம்பரியம்... மண்ணையும், உணவையும், உடல்நலத்தையும் காக்கும் இயற்கை விவசாயம்!
சிவகங்கையில்
சிவகங்கையில் "செம்மண்" விதை திருவிழா: பாரம்பரிய வேளாண்மைக்கு புத்துயிர்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
காரைக்குடி: 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஊத்தா மீன்பிடி திருவிழா.. மீன்கள் குவிந்ததால் மக்கள் கொண்டாட்டம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget