மேலும் அறிய

மழையில் தப்பி நெற்பயிர்கள், அதிகாரிகளால் பாழாகும் அவலம்... தீடீரென மூடப்பட்ட கொள்முதல் நிலையங்களால் விவசாயிகள் வேதனை...

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திடீரென மூடப்பட்டு வருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி அறுவடை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திடீரென மூடப்பட்டு வருவதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். குறிப்பாக சீர்காழி அருகே கற்கோயில் பகுதியில் 2500-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதோடு, வயலில் உள்ள பயிர்களும் அறுவடை செய்ய முடியாமல் கருகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தாமதத்திற்கான காரணம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது. விளைந்த நெல்லை விவசாயிகளிடமிருந்து தடையின்றி கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் (DPC) திறக்கப்பட்டன.

பொதுவாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அறுவடை பணிகள் நிறைவடைய வேண்டும். ஆனால், இந்த ஆண்டு பருவமழை எதிர்பாராத விதமாக நீடித்ததால், பல இடங்களில் இளம் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு இடையே, மீண்டும் மறுசாகுபடி (மறுநாற்று நடுதல்) செய்தனர். இந்த இடர்ப்பாடுகளால் சாகுபடி காலம் தள்ளிப்போனது. இதன் விளைவாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போதுதான் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகள் அதிர்ச்சி

தாமதமான சாகுபடியைக் கணக்கில் கொள்ளாமல், இலக்கு முடிந்துவிட்டதாகக் கூறி கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த திடீர் நடவடிக்கையால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

 பாதிப்புகள்

* மூட்டைகள் தேக்கம்: சீர்காழி அடுத்த கற்கோயில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 2500 நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

* எடை குறைவு அபாயம்: நெல் மூட்டைகள் வெட்டவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. வெயிலின் தாக்கம் காரணமாக நெல்லில் உள்ள ஈரப்பதம் குறைந்து, எடையும் குறையும் அபாயம் உள்ளது. இது விவசாயிகளுக்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.

* பதிவு செய்தும் பயன் இல்லை: கிராம நிர்வாக அலுவலரிடம் (VAO) முறையாகப் பதிவு செய்து, வரிசை எண்காகக் காத்திருக்கும் விவசாயிகளுக்கும் தற்போது கொள்முதல் மறுக்கப்படுவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

வயலிலேயே கருகும் நெற்பயிர்கள்

ஒருபுறம் அறுவடை செய்த நெல் கொள்முதல் செய்யப்படாமல் இருக்க, மறுபுறம் கற்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிர்கள் வயலிலேயே காய்ந்து வருகின்றன.

"நெல்லை அறுவடை செய்தாலும் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டிருப்பதால் எங்கே கொண்டு செல்வது என்று தெரியவில்லை. அறுவடை செய்யாமல் விட்டால் முற்றிய நெல்மணிகள் தானாகவே வயலில் உதிர்ந்து வீணாகின்றன. முதலீடு செய்த பணத்தைக் கூட எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது," என அப்பகுதி விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கைகள்

பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கையில்:

*கூடுதல் கால அவகாசம்: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கணக்கில் கொண்டு, மார்ச் இறுதி வரை கொள்முதல் நிலையங்களைச் செயல்படுத்த வேண்டும்.

* உடனடி கொள்முதல்: கற்கோயில் உள்ளிட்ட இடங்களில் தேங்கியுள்ள 2500 மூட்டைகளை உடனடியாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

*பாதுகாப்பு வசதி: கொள்முதல் நிலையங்களில் போதிய தார்ப்பாய்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளைச் செய்து தர வேண்டும்.

இயற்கை பேரிடர்களையும் தாண்டி கஷ்டப்பட்டு விளைவித்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் வீதியில் காத்திருப்பது மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "விவசாயிகளின் உழைப்பு வீணாவதை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது" என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
"படிப்பு தேவையில்லை.. லைசென்ஸ் இலவசம்!" - இளைஞர்களுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட் வாய்ப்பு..!
விவசாயக் கடன் தள்ளுபடி.. அதிரடியாக அறிவித்த முதல்வர் விஜய் - யார், யாருக்கு எவ்வளவு? - முழு விவரம் இதோ
விவசாயக் கடன் தள்ளுபடி.. அதிரடியாக அறிவித்த முதல்வர் விஜய் - யார், யாருக்கு எவ்வளவு? - முழு விவரம் இதோ
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு குட் நியூஸ்! உங்கள் குறைகளை ஆட்சியரிடம் சொல்ல நேர வந்தாச்சு - எங்கே, எப்போது?
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு குட் நியூஸ்! உங்கள் குறைகளை ஆட்சியரிடம் சொல்ல நேர வந்தாச்சு - எங்கே, எப்போது?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்
’சூலூர் வழக்கில் சிரித்த பெண் IG’ யார் இந்த ரம்யா பாரதி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPM Slams TVK:
CPM Slams TVK: "ஆரோக்கியமான அரசியலுக்கு இது அழகல்ல.." - தவெக-வில் இணைந்த 4 அதிமுக MLA-க்கள்; சிபிஎம் கண்டனம்!
CM Vijay Letter to Modi: “கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“கர்நாடகாவுக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடி சார்“; மேகதாது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
CBSE: சிபிஎஸ்இ-ன் மும்மொழி கட்டாயம்: குழந்தைகள் பரிசோதனை எலிகளா? கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
கர்நாடகத்தில் ஆட்சி.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் தவெக-விற்கு துணை நிற்குமா?
கர்நாடகத்தில் ஆட்சி.. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! மேகதாது விவகாரத்தில் காங்கிரஸ் தவெக-விற்கு துணை நிற்குமா?
IPL 2026 Qualifier 1 RCB vs GT: ஆர்சிபி - குஜராத் ரெடி! குவாலிஃபயர் 1 முழுசா நடக்குமா? குறுக்கே வருமா மழை?
IPL 2026 Qualifier 1 RCB vs GT: ஆர்சிபி - குஜராத் ரெடி! குவாலிஃபயர் 1 முழுசா நடக்குமா? குறுக்கே வருமா மழை?
School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு; எப்போது தெரியுமா?
School Reopen Date: தமிழ்நாட்டில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு; எப்போது தெரியுமா?
EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
EPS: அடுத்தடுத்து ராஜினாமா! சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக! என்னதான் செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?
CM Vijay: நாளை டெல்லி செல்கிறார் சிஎம் விஜய் - மேகதாது டூ கல்வி நிதி - நீளும் பட்டியல், தீர்வு கிடைக்குமா?
CM Vijay: நாளை டெல்லி செல்கிறார் சிஎம் விஜய் - மேகதாது டூ கல்வி நிதி - நீளும் பட்டியல், தீர்வு கிடைக்குமா?
Embed widget