மேலும் அறிய

விவசாயிகள் கவனத்திற்கு... நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நெற்பயிரில் கதிர் உறை அழுகல் நோய், இலை உறைகளில் நீள்வட்ட அல்லது ஒழுங்கற்ற சாம்பல் மற்றும் பழுப்புநிற புள்ளிகள் போன்ற அறிகுறிகள் தென்படும்.

தஞ்சாவூர்: நெற்பயிரில் பூச்சி தாக்குதல் தென்படுவதால் அதனை கட்டுப்படுத்துவது எப்படி? என வேளாண்மைத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தஞ்சை வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா கூறியிருப்பதாவது:

தஞ்சை வட்டாரத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் வயல்களில் தொடர் வடகிழக்கு பருவ மழையினால் சத்து பற்றாக்குறை மற்றும் பூச்சி நோய்த்தாக்குதல் ஆங்காங்கே தென்படுகிறது. நெற்பயிரில் சத்து பற்றாக்குறையை போக்க தண்ணீரை நன்றாக வடிகட்டிய பின்பு ஏக்கருக்கு சிங்க்சல்பேட் 10 கிலோவை 25 கிலோ மணலுடன் கலந்து இடுவதன் மூலமும், நெல் நுண்ணூட்டம் 5 கிலோவை 25 கிலோ மணலுடன் கலந்து இடுவதன் மூலமும் மழையினால் சேதமடைந்த நெற்பயிர்களின் வேர்கள் நன்றாக வளர்ச்சி பெற்று நெற்பயிர்கள் மீண்டும் துரிதமாக வளர்ந்திட உதவி புரியும்.

தொடர் மழை காரணமாக ஆங்காங்கே நெற்பயிரில் கதிர் உறை அழுகல் நோய், இலை உறைகளில் நீள்வட்ட அல்லது ஒழுங்கற்ற சாம்பல் மற்றும் பழுப்புநிற புள்ளிகள் போன்ற அறிகுறிகள் தென்படும். இதை கட்டுப்படுத்த சூடோமோனோஸ் என்ற எதிர் உயிரியை ஏக்கருக்கு 1 கிலோ என்ற வீதம் 25 கிலோ தொழு உரத்துடன் முதல் நாள் இரவு கலந்து வைத்து மறுநாள் வயல்களில் இட வேண்டும்.

இல்லையென்றால் ரசாயன பூஞ்சான கொல்லி மருந்துகளான டிரைசைக்ளோசெல் ஒரு ஏக்கருக்கு 120 கிராம் ஹெக்சகோனஸோல் ஒரு ஏக்கருக்கு 250 மில்லி என்ற அளவில் தெளிப்பதன் மூலம் கட்டுபடுத்தலாம். மேலும் நெற்பயிர்களில் பரவலாக, இலைச்சுருட்டு புழு மற்றும் ஆணை கொம்பன்ஈபோன்ற தாக்குதல் தென்படுகிறது. இலைச்சுருட்டு புழு தாக்குதல் இருந்தால், இலைகள் வெண்மையாக மாறிவிடும்.

இலைகளை நீள்வாக்கில் மடித்து உள்ளிருந்து கொண்டு  பச்சையத்தை சுரண்டி உண்ணும் இலைச்சுருட்டு புழுவை கட்டுப்படுத்த முட்டை உண்ணியான டிரைக்கோகி ரம்மா கைலோனிஷ் ஏக்கருக்கு 3 முறை ஒருவார இடை வெளியில் பயன்படுத்த வேண்டும். அல்லது ஒரு ஏக்கருக்கு அசாடிராக்டின் 400 மில்லி அல்லது ஒரு ஏக்கருக்கு அசிபேட் 75 சதவீதம்  எஸ்.பி. 400 கிராம் என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் அறிகுறியான தாக்கப்பட்ட குருத்தில் இருந்து வெளிவரும் இலை வெங்காய இலை போல குழலாக மாறி விடும். மேலும் புழுக்கள்  தண்டை துளைத்து நடுக்குருத்தை தாக்கும். இதை கட்டுப்படுத்த புற ஊதா விளக்கு பொறிகளை வயல் வெளிகளில் அமைக்க வேண்டும் அல்லது ஒரு ஏக்கருக்கு அசி பேட் 75 சதவீதம் எஸ்.பி.- 200 கிராம் அல்லது ஒரு ஏக்கருக்கு பிப்ரோனில் 5சதவீதம் எஸ்சி 500 கிராம் ஏதாவது ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம். எனவே, விவசாயிகள் மேற்காணும் பயிர்பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி,தொடர் மழையினால் நெற்பயிருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பினை சரி செய்து அதிக மகசூல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஒரு போக சம்பா மற்றும் தாளடி சாகுபடி மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் கடந்த சில நாட்களில் பெய்த மழையால் மேட்டுப்பாங்கான பகுதிகளில் சாகுபடி பயிர்களுக்கு உதவிகரமாக இருந்தது. தாழ்வான பகுதிகளில் சற்றே பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மாலை வேளையிலேயே பனிப்பொழிவு இருப்பதால் சாகுபடி பயிர்களில் பூச்சி தாக்குதல் காணப்படுகிறது. இதற்காக விவசாயிகள் பூச்சிக் கொல்லி உரங்களை தெளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

குறைந்த விதை... குறைந்த தண்ணீர்... ஏக்கருக்கு 76 டன் கரும்பு: நவீன சாகுபடி முறையை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை
குறைந்த விதை... குறைந்த தண்ணீர்... ஏக்கருக்கு 76 டன் கரும்பு: நவீன சாகுபடி முறையை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை
மதுரையில் இன்று (03.10.2026) காய்கறி விலை: முழு நிலவரம் என்ன?
மதுரையில் இன்று (03.10.2026) காய்கறி விலை: முழு நிலவரம் என்ன?
கூட்டுறவு சங்க பயிர் கடன் வசூல்.! வெளியானது முக்கிய அறிவிப்பு ... குஷியில் துள்ளிக்குதிக்கும் விவசாயிகள்
கூட்டுறவு சங்க பயிர் கடன் வசூல்.! வெளியானது முக்கிய அறிவிப்பு ... குஷியில் துள்ளிக்குதிக்கும் விவசாயிகள்
சம்பா சாகுபடிக்கு தஞ்சை வந்தது 1,462 டன் யூரியா... 5 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரம்
சம்பா சாகுபடிக்கு தஞ்சை வந்தது 1,462 டன் யூரியா... 5 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரம்

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget