மேலும் அறிய

Vinesh Phogat | ஓய்வை திரும்பப் பெறுகிறாரா? விரக்தியில் வினேஷ் போகத்”கலைந்த ஒலிம்பிக் கனவு!”

தொடர் சவால்களை சந்தித்து வரும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓய்வை அறிவித்திருக்க கூடாது என்றும் வேறுவிதமான சூழ்நிலை இருந்திருந்தால் 2032 வரை விளையாடி இருப்பேன் என்றும் வினேஷ் போகத் குறிப்பிட்டுள்ளார். 

பாரீஸ் ஒலிம்பிக்கில் மல்யுத்தத்தின் 50 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி வரை சென்று அசத்திய வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். உலகின் முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதி போட்டி வரை சென்றபோதிலும், போட்டிக்குரிய எடையை விட 100 கிராம் அதிகளவு இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு சோகம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டது. மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்தார். இடி மேல் இடியாக மற்றொரு செய்தி வெளியானது. வெள்ளி பதக்கம் கோரி அவர் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.தொடர் சவால்களை சந்தித்து வரும் வினேஷ் போகத், உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட உடனேயே ஓய்வை அறிவித்திருக்க கூடாது என்றும் வேறு சூழல் இருந்திருந்தால் 2032ஆம் ஆண்டு வரை விளையாடி இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

வினேஷ் போகத் எழுதியுள்ள அந்த கடிதத்தில், "மல்யுத்தப் போராட்டத்தின் போது, ​​இந்திய பெண்களின் புனிதம், நமது இந்தியக் கொடியின் புனிதம், விழுமியங்களை பாதுகாக்க நான் கடுமையாகப் போராடினேன். ஆனால், 2023ஆம் ஆண்டு, மே 28ஆம் தேதி முதல் இந்தியக் கொடியுடன் நான் இருக்கும் படங்களைப் பார்க்கும்போது, ​​அது என்னை ஆட்டிப்படைக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியக் கொடி உயரத்தில் பறக்க வேண்டும். விழுமியத்தை பிரதிபலிக்கும் புனிதத்தை மீட்டெடுக்கும் இந்தியக் கொடியுடன் நான் இருக்கும் படத்தை எடுக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.

இப்படிச் செய்வதன் மூலம் கொடிக்கு நடந்ததும், இந்தியாவில் மல்யுத்த விளையாட்டுக்கு நடந்ததும் தவறு என உணர்த்த விரும்பினேன். அதை என் சக இந்தியர்களுக்குக் காட்ட வேண்டும் என்று நான் உண்மையில் எதிர்பார்த்தேன்.

சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படுத்த வார்த்தைகள் போதுமானதாக இல்லை. நேரம் கிடைக்கும்போது நான் மீண்டும் பேசுவேன். ஆகஸ்ட் 6ம் தேதி இரவும், ஆகஸ்ட் 7ம் தேதி காலையும் நான் விட்டுகொடுக்கவில்லை. முயற்சிகள் நிற்கவில்லை. சரணடையவில்லை. ஆனால், நேரம் நின்றுவிட்டது. காலம், நியாயமானதாக இருக்கவில்லை. எனது தலைவிதியும் அப்படிதான்.

எனது குழுவிற்காக எனது சக இந்தியர்களுக்காக எனது குடும்பத்தினருக்காக, நான் உழைத்துக்கொண்டிருந்த இலக்கு, அடையத் திட்டமிட்டது நிறைவேறாதது போல் உணர்கிறேன். ஏதோ, ஒன்று எப்போதும் காணாமல் போனது போல் உணர்கிறேன். விஷயங்கள் மீண்டும் அப்படியே நடக்கபோவதில்லை.

வேறு சூழல் இருந்திருந்தால், 2032 வரை நான் விளையாடி இருப்பேன். ஏனென்றால், எனக்குள் போராட்டமும் என்னுள் மல்யுத்தமும் எப்போதும் இருக்கும். எதிர்காலம் என்ன, அடுத்த பயணத்தில் எனக்கு என்ன காத்திருக்கிறது என்பதை என்னால் கணிக்க முடியாது. ஆனால், நான் எதை நம்புகிறேனோ, சரியான விஷயத்திற்காக எப்போதும் போராடுவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

ஒலிம்பிக் வீடியோக்கள்

Vinesh Phogat | ஓய்வை திரும்பப் பெறுகிறாரா? விரக்தியில் வினேஷ் போகத்”கலைந்த ஒலிம்பிக் கனவு!”
Vinesh Phogat | ஓய்வை திரும்பப் பெறுகிறாரா? விரக்தியில் வினேஷ் போகத்”கலைந்த ஒலிம்பிக் கனவு!”
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க ரூ.14,000 கோடியில் 7 புதிய வேளாண் திட்டங்கள் - விவரம் இதோ!
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க ரூ.14,000 கோடியில் 7 புதிய வேளாண் திட்டங்கள் - விவரம் இதோ!
டெங்கு காய்ச்சல்: அடுத்த 2 நாட்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்ரமணி சொன்ன தகவல்
டெங்கு காய்ச்சல்: அடுத்த 2 நாட்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்ரமணி சொன்ன தகவல்
Breaking News LIVE:  விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் உயர்வு - அரசாணை
Breaking News LIVE: விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் உயர்வு - அரசாணை
காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா.. கவனமாக காய் நகர்த்தும் ராகுல் காந்தி!
காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா.. கவனமாக காய் நகர்த்தும் ராகுல் காந்தி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MahaVishnu Profile | நித்தியானந்தா 2.0?காமெடியன் To ஆன்மீகம்!யார் இந்த மகாவிஷ்ணு?Vinesh Bajrang Punia Congress |ராகுலின் 2 அஸ்திரங்கள்!பாஜக ஆட்டம் OVER! தட்டித்தூக்கிய காங்கிரஸ்!SFI Protest on Mahavishnu issue | ”நடவடிக்கை எடுக்கலனா..” கடுப்பான மாணவர்கள்!பள்ளி வாசலில் போராட்டம்Vinayagar Chaturthi : கணபதி தரிசன திருவிழா.. தானிய விநாயகருக்கு வரவேற்பு விநாயகர் சதுர்த்தி SPECIAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க ரூ.14,000 கோடியில் 7 புதிய வேளாண் திட்டங்கள் - விவரம் இதோ!
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க ரூ.14,000 கோடியில் 7 புதிய வேளாண் திட்டங்கள் - விவரம் இதோ!
டெங்கு காய்ச்சல்: அடுத்த 2 நாட்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்ரமணி சொன்ன தகவல்
டெங்கு காய்ச்சல்: அடுத்த 2 நாட்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்ரமணி சொன்ன தகவல்
Breaking News LIVE:  விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் உயர்வு - அரசாணை
Breaking News LIVE: விடுதலை போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு ஓய்வூதியம் உயர்வு - அரசாணை
காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா.. கவனமாக காய் நகர்த்தும் ராகுல் காந்தி!
காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா.. கவனமாக காய் நகர்த்தும் ராகுல் காந்தி!
மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவு
மாணவர்கள் பாத பூஜை செய்த விவகாரம்- அமைச்சர் அன்பில் மகேஸ் அதிரடி உத்தரவு
Mahavishnu: காமெடியன் டூ குருஜி; அமைச்சர்களுடன் நெருக்கம்- யார் இந்த பரம்பொருள் மகாவிஷ்ணு?
Mahavishnu: காமெடியன் டூ குருஜி; அமைச்சர்களுடன் நெருக்கம்- யார் இந்த பரம்பொருள் மகாவிஷ்ணு?
பள்ளிகளில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவுகள் இனி நடக்காது: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
பள்ளிகளில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவுகள் இனி நடக்காது: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
Vaazhai Box Office : தி கோட் படம் வெளியாகியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் வாழை... வசூல் என்ன தெரியுமா?
Vaazhai Box Office : தி கோட் படம் வெளியாகியும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடும் வாழை... வசூல் என்ன தெரியுமா?
Embed widget