Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
நேபாளத்தில் இன்று அதிகாலை மீண்டும் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது அந்நாட்டை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி திபெத் எல்லை அருகே மிகப்பெரிய அளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பனிப்பாறை வெடிப்பு காரணமாக ஏற்பட்ட இந்த வெள்ளத்தில், 1,400-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4,700-க்கும் மேற்பாட்டோர் இன்னும் காணமால் போயுள்ளனர்.
இந்தப் பெருந்துயரத்தின் நடுவே இன்னும் ஆறாத நிலையில், இன்று அதிகாலை மீண்டும் ஒரு மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டிருப்பது நேபாளத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
அதிகாலை 4 மணியளவில் புதிகண்டகி ஆற்றில் இந்தப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. மலைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட ஒரு வறண்ட நிலச்சரிவு, ஆற்றின் குறுக்கே விழுந்து நீரோட்டத்தை முழுமையாக அடைத்ததால் இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதிலும், வேறு நீராக மட்டுமல்லாமால் மிகப்பெரிய அளவில் பாறைகள், மரங்கள், களிமண்ணை அடித்துக்கொண்டு கருப்பு வெள்ளம் பாய்ந்து வந்தது.
உரத்த சத்தம் கேட்டு எழுந்த கரையோர மக்கள் உடனடியாக உயரமான பகுதிகளுக்கு ஓடிச்சென்றதால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என கோர்கா மாவட்ட நிர்வாக அதிகாரி தர்மேந்திர குமார் மிஸ்ரா உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், கரையோரத்தில் இருந்த வீடுகள் இருந்த சுவடே தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், 3 முக்கிய பாலங்கள் வெள்ளத்தில் உடைந்ததால், பல கிராமங்களுக்கான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் நேபாள ராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்டில் ஏற்பட்ட பெருவெள்ள பதிப்பிலிருந்தே நேபாளம் இன்னும் மீளாத இத்தகைய வேண்டும் மீண்டும் ஏற்பட்டிருப்பது அந்நாட்டு மேலும் நிலைகுலைய வைத்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















