மேலும் அறிய

Vijay on ADMK Alliance | ”அதிமுகவோட கூட்டணி இல்ல! தனியா நின்னே ஜெயிப்பேன்” விஜய் கொடுத்த INTERVIEW

நான் ஏன் அதிமுகவோட கூட்டணி வைக்கணும், தனியா நின்னே ஜெயிப்பேன், நான் கிங்மேக்கர் கிடையாது, எல்லாரோடையும் சண்டை போட்டு ஜெயிப்பேன் என கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜய். 

சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் திமுக, அதிமுக தலைமையில் வலுவான கூட்டணிகள் உருவாகி வருகின்றன. அரசியலில் புதிதாக எண்ட்ரி கொடுத்து முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் விஜய் கூட்டணி விவகாரத்தில் சைலண்ட் மோடில் இருக்கிறார். தவெகவுடன் இன்னும் எந்த கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் இருக்கின்றன.

அதேபோல் அதிமுகவுடன் தவெக ஆரம்பத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. ஆனால் சமீப நாட்களில் அதிமுகவுக்கு எதிரான விமர்சனங்களை வைத்து வருகிறார் விஜய். அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என்ற பேச்சு இருந்தது.

இந்தநிலையில் NDTV-க்கு விஜய் பேட்டியளித்துள்ள நிலையில் அதிமுக கூட்டணி தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும், நான் தனியாக நின்றே வெற்றி பெறுவேன். நான் வெற்றி பெற மாட்டேன் என நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி நீங்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்” என சொல்லி அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்பதே விஜய்யின் டார்கெட்டாக இருக்கிறது. 

அதேபோல் நீங்கள் கிங்மேக்கரா என கேள்வி எழுப்பிய போது “ நான் கிங்மேக்கர் கிடையாது. நான் போட்டி போட்டு வெற்றி பெறுவேன்” என அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார். தனது ரசிகர்கள் படை வாக்குகளாக மாறும் என்பதில் முழு நம்பிக்கையோடு இருக்கிறார் அதேபோல் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா தனது ரோல் மாடல் என்றும் சொல்லியிருக்கிறார் விஜய். 

வலதுசாரி, இடதுசாரி கொள்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு, இதில் நான் எந்த பக்கமும் கிடையாது, மக்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் அவர்கள் பக்கம் நின்று தான் அதனை எதிர்ப்பேன் என பதிலடி கொடுத்துள்ளார் விஜய். அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்று இல்லாமல் அடுத்த 3 மாதங்களை நோக்கி ஆட்சியை பிடிப்பதில் விஜய் தீவிரமாக கணக்கு போட்டு வருவதாக தவெகவினர் சொல்கின்றனர். கரூர் சம்பவத்தால் உடைந்து போன விஜய், மீண்டும் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக பேச்சு அடிபடுகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திரள்நிதி வாங்கி டீ கூட குடிச்சது இல்ல.. தறுதலை கூட்டமே.. கடுமையாக விமர்சித்த சீமான்!
திரள்நிதி வாங்கி டீ கூட குடிச்சது இல்ல.. தறுதலை கூட்டமே.. கடுமையாக விமர்சித்த சீமான்!
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Embed widget