மேலும் அறிய

Sengottaiyan vs EPS: செங்கோட்டையன் தனி ரூட்! நிர்மலா பக்கா ஸ்கெட்ச்! மரண பீதியில் எடப்பாடி? | ADMK

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சமீப கால நடவடிக்கைகள் புயலை கிளப்பி வரும் நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகளே செங்கோட்டையனுக்கு எதிராக பேசத்தொடங்கியுள்ளனர். இதனால் அக்கட்சி இரண்டாக உடையும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுச்செயலாலர் இபிஎஸ்-க்கும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் சமீப காலமாக பனிப்போர் நிலவுகிறது. இபிஎஸ் நடத்தும் எம்.எல்.ஏ-க்கள் ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பது, சபாநயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து பேசியது இபிஎஸ் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களை புறக்கணிப்பது என தொடர்ந்து செங்கோட்டையன் இபிஎஸ்-க்கு கொடைச்சல் கொடுப்பதாக கூறப்படுகிறது. 


இச்சூழலில் தான் இபிஎஸ் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த நிலையில் செங்கோட்டையனும் டெல்லிக்கு சென்று நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. ஏறகனவே அதிமுகவில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அக்கட்சி சந்தித்த ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை. இதனை கருத்தில் கொண்டு அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைத்து அதிமுகவை பலமாக்க வேண்டும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவை இணைத்து வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் தான் செங்கோட்டையனின் செயல்பாடுகளால் அதிமுக பொதுச்செயலாலர் இபிஎஸ் கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. செங்கோட்டையனை அக்கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாகவே விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வனிடம் செங்கோட்டையன் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு , செல்வாக்கு இல்லாதவர்களை பற்றி பேசி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை” என்று கூறினார். 

நேற்று கூட நிர்மலா சீதாரமனை தனியாக சந்தித்து செங்கோட்டையன் பேசியதாக கூறப்பட்ட நிலையில் தனக்கு நெருக்கமானவர்களின் இபிஎஸ் செங்கோட்டையனின் செயல்பாடுகள் குறித்து சொல்லி புலம்பியதாக சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதனிடையே இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் டாஸ்மக் ஊழலை குறிக்கும் வகையில் “அந்த தியாகி யார்” என்ற கருப்பு பட்டை அணிந்து அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

 டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் அதிமுகவினர் கோரிக்கை வைத்த நிலையில், இபிஎஸ்-ஐ பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வெளி நடப்பு செய்த நிலையில் செங்கோட்டையன் மட்டும் அவையில் இருந்து உரையாற்றினார்.  “அந்த தியாகி யார்” என்ற கருப்பு பேட்ஜ்ஜையும் கழட்டி வைத்துவிட்டு உரையாற்றியது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இப்படி செங்கோட்டையனின் செயல்பாடுகளால் இபிஎஸ் மட்டும் இன்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பலரும்  கடுப்பாகி இருப்பதால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் அபாயம் இருப்பதாக சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வெயில் விடுமுறை கேட்கிறது… மழை இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறது!” தஞ்சையின் இன்றைய வானிலை இதுதாங்க
வெயில் விடுமுறை கேட்கிறது… மழை இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறது!” தஞ்சையின் இன்றைய வானிலை இதுதாங்க
Udhayanithi; திமுக-வை வலுப்படுத்த உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு? விரைவில் வழங்க மு.க.ஸ்டாலின் முடிவு!
Udhayanithi; திமுக-வை வலுப்படுத்த உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு? விரைவில் வழங்க மு.க.ஸ்டாலின் முடிவு!
TN weather: அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... எங்கெல்லாம்? வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை... எங்கெல்லாம்? வானிலை மையம் எச்சரிக்கை
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Liquor Ban: மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! OLD MONK உள்ளிட்ட 3 சரக்குகளுக்கு தடை- இது தான் காரணமா.?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
Embed widget