மேலும் அறிய

Seeman vs Sattai durai murugan: பாஜகவில் இணையும் சாட்டை? சீமானுக்கு டாடா! அதிர்ச்சியில் நாதகவினர்!

சாட்டை துரைமுருகனின் செயல்பாடுகளால் கோபமான நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அவருக்கு போன் போட்டு கடுமையாக திட்டியதாகவும் அதனால் அப்செட்டான சாட்டை துரைமுருகன் விரைவில் பாஜக-வில் இணைய உள்ளதாகவும் வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், சீமானுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருப்பவர் தான் சாட்டை துரைமுருகன். கிட்டத்தட்ட சீமானுக்கு அடுத்த இடத்தில் இவர் தான் சில முக்கிய முடிவுகளை எடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர் ‘சாட்டை’ என்ற யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். தொடர்ந்து திமுகவிற்கு எதிராக பல அதிரடியான கருத்துக்களை பேசி வரும் இவர் கட்சி சார்பாகவும், கட்சி மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் தனது யூடியூப் சேனல் மூலம் பதிலடியும் கொடுத்து வருகிறார். இவரது வீடியோக்கள் எல்லாம் மில்லியன் கணக்கான VIEWS -  யும் பெற்று வரும். 

இச்சூழலில் தான் சாட்டை துரைமுருகனை தொடர்பு கொண்டு சீமான், உன்னுடைய யூடியூப் சேனலை கட்சியின் வளர்ச்சிக்கு பயன்படுத்து. அதைவிட்டுவிட்டு உன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்தாதே என்றும் சொன்னதாக தகவல் வெளியானது. அதேபோல், நித்யானத்தா தொடர்பாக சாட்டை யூடியூப் சேனலில் வீடியோன் வெளியிட்டது, பாஜக புதிய தலைவர் நயினார் நாகேந்திரனை சீமான் ஏன் மாமா என்று சொல்லி வாழ்த்து சொன்னார் என்பதற்கான விளக்கத்தையும் சொல்லி இருந்தார் சாட்டை துரைமுருகன். சாட்டை துரைமுருகனின் இந்த செயல்பாடுகளால் சீமான் கடும் கோபமானதாகவும் கட்சியின் முக்கிய விசயங்களை எல்லம் பொதுவெளியில் பேசக்கூடது என்று சீமான் கடிந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இருவரிடையே இது வாக்குவாதமாக மாறியதாகவும் தகவல் வெளியானது. 

இச்சூழலில் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை  ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ”சாட்டை துரைமுருகன் நடத்தும் யூ டியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.  அதில் வருகின்ற கருத்துகள், செய்திகள் அனைத்தும் தனிப்பட்டக் கருத்தாகும்” என்ற கூறப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து சாட்டை துரைமுருகன் சீமானுடன் இருக்கும் முகப்படத்தை நீக்கியதோடு நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் என்ற BIO - வையும் நீக்கியுள்ளா அவர் சீமனையும் எக்ஸ் பக்கத்தில் UNFOLL0W செய்துள்ளார்.  அதோடு, புதிய  முகப்பு படமாக விடுதலை ஆவது போன்ற ஒரு புகைப்படத்தையும் வைத்துள்ளார். இதனால் சாட்டை துரைமுருகன் நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. சாட்டை துரைமுருகன் பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், பின்னணியில் நயினார் நாகேந்திரன் இருப்பதாகவும் இருவரும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சட்டை துரைமுருகன் பாஜகவில் இணைய ரெடியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
"மக்களுக்கு பிரச்சனைன்னா ஓடோடி வரணும் " ஆட்சியருக்கு JCD பிரபாகர் அதிரடி உத்தரவு
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget