மேலும் அறிய

Ramadoss With Thirumavalavan: வன்னியர் சங்க மாநாடு! ஒரே மேடையில் ராமதாஸ் - திருமா?பாமக கணக்கு என்ன?

விசிகவும் - பாமகவும் எதிரெதிர் துருவத்தில் இருந்தாலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசிக தலைவர் திருமாவளவனை பாமகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வன்னியர் சங்க மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கி இருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாகியுள்ளது. 2026-ல் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள சூழலில் இந்த இரண்டு கட்சிகளின் சந்திப்பும் திராவிடகட்சிகளை உற்று நோக்க வைத்திருக்கிறது.

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இப்போதே தீவிரமாக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. அந்த வகையில் அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுவிட்டது. மறுபுறம் திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலை தற்போது உள்ள கூட்டணிகட்சிகளோடே சந்திக்கப்போகிறதா அல்லது கூட்டணி மாறுமா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது. 

இச்சூழலில் தான் வட மாவட்டங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பாமக மற்றும் விசிக சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழக அரசியலில் எதிரெதிர் திசையில் இந்த இரண்டு கட்சிகளும் இருந்தாலும் இந்த சந்திப்பு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதாவது  வரும் மே 11 ஆம் தேதி பாமக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பாமகவினரும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

கடந்த 12 வருடங்களாக ஒரு சில காரணங்களால் இந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்தாலும் தற்போது மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது.  மாநாடு நடைபெறும் இடத்திற்கே சென்று அன்புமணி ராமதாஸ் மாநாட்டு பணிகளை கவனித்து வருகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாநாடு நடைபெறுவதால் சாதி மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருக்கிறார். இச்சூழலில் தான் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்த பாமகவின் முக்கிய நிர்வாகிகள் வன்னியர் சங்க மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று சால்வை அணிவித்து அவருக்கு அழைப்பிதல் வழங்கியுள்ளனர். அப்போது மாநாடு வெற்றிபெற திருமாவளவன் வாழ்த்து தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. 

கடந்த மாதம் ராமதாஸ் வெளியிட்ட நிழல் பட்ஜெட் தொடர்பாக பாமகவினர் திருமாவளவனை சந்தித்தது பரபரப்பாக பேசப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தல் வர உள்ள சூழலில் எந்த கூட்டணியில் யார் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில் தற்போது மீண்டும் பாமகவினர் திருமாவளவனை சந்தித்திருப்பது திராவிட கட்சிகளை உற்று நோக்க வைத்திருக்கிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" மனைவியை அடித்துக் கொன்று வீசிய கணவன் " உடலை அடக்கம் செய்ய முயன்ற போது சிக்கிய எப்படி ?
நீலகிரி பழங்குடியினருக்கு 'ப்ராஜெக்ட் ரே' ஒளி: சூரிய மின்சக்தியால் நெகிழ்ச்சி!
நீலகிரி பழங்குடியினருக்கு 'ப்ராஜெக்ட் ரே' ஒளி: சூரிய மின்சக்தியால் நெகிழ்ச்சி!
"விபத்து காயங்களுக்கு எலும்பு சிகிச்சை மட்டுமே போதாது " இதுவும் முக்கியம் - MIOT மருத்துவமனை
பேருந்துப் பயணமும்... பேரதிர்ச்சியும்! சீர்காழியில் 400 வெளிமாநில மதுபாட்டில்களுடன் சிக்கிய சகோதரிகள்..!
பேருந்துப் பயணமும்... பேரதிர்ச்சியும்! சீர்காழியில் 400 வெளிமாநில மதுபாட்டில்களுடன் சிக்கிய சகோதரிகள்..!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget