Dolo 650 Tablet: பரபர விற்பனையான டோலோ 650..தெறிக்கவிட்ட மீம்கள்..ஷாக்கான தயாரிப்பாளர்
Dolo 650 Tablet: இந்தியாவில் தற்போதைய டாப் மருந்து நிறுவனங்களின் தலைவர்களாக இருப்பவர்கள், இந்தியா சீரம் நிறுவனத்தின் தலைவர் அடார் பூனாவாலா, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லா, மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் நிறுவனத் தலைவர் திலீப் சுரானா ஆகியோர். முதலில் கூறப்பட்ட இருவரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்புக்காக கொண்டாடப்பட்டு வருகையில், மூன்றாவதாக இருப்பவர் வேறு ஒரு காரணத்திற்காக கொண்டாடப்படுகிறார். திலீப் சுரானாவின் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் `டோலோ 650’ என்ற மாத்திரையைத் தயாரிக்கிறது. காய்ச்சலைக் குணப்படுத்தப்படும் இந்த மாத்திரை தற்போது வரலாறு காணாத அளவுகளில் விற்கப்படுவதோடு, நாடு முழுவதும் பெரும்பாலான மீம்களிலும் இடம்பெற்று வருகிறது.





தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

